Press "Enter" to skip to content

கொரோனா புதிய திரிபு: ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் பாதிப்புகளால் விரிவடையும் கட்டுப்பாடுகள்

பட மூலாதாரம், Getty Images

கொரோனா பெருந்தொற்றின் புதிய திரிபின் தாக்கம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய மாகாணங்களின் தலைவர்கள் இன்று பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் அவசரக் கூட்டம் நடத்தவுள்ளனர்.

சிட்னியில் மிகவும் ஆபத்தாக கருதப்படும் டெல்டா திரிபுடன் தொடர்புடைய நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.

வடக்கு பிராந்தியம், குயீன்ஸ்லாந்து, மேற்கு ஆஸ்திரேலியாவிலும் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

எல்லை மூடல் மற்றும் பொது முடக்க கட்டுப்பாடுகள் காரணமாக, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், தற்போதைய காலகட்டம் மிகவும் முக்கியமானது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களில், ஒரே நேரத்தில் நாட்டின் பல பகுதிகளிலும் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவுவது இதுவே முதல் முறை.

“பெருந்தொற்றின் புதிய கட்டத்தில் டெல்டா திரிபின் மேலதிக தாக்கத்துக்குள் நாம் நுழைவதாக நினைக்கிறேன் என்று ஆஸ்திரேலிய நிதியமைச்சர் ஜோஷ் ஃப்ரைடன்பெர்க் ஏபிசி செய்திகளிடம் திங்கட்கிழமை தெரிவித்தார்.

கொரோனா தொற்று நோய் அதிகரிப்பு, சிட்னி மற்றும் டார்வின் நகரங்களில் பொதுமுடக்க கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த தூண்டியுள்ளது. அத்துடன் நான்கு மாகாணங்களிலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதில், சிட்னியின் நிலைமை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது, அங்கு சுமார் ஐம்பது லட்சம் குடியிருப்புவாசிகள் வீட்டிலேயே இருக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிரேட்டர் சிட்னி, நீல மலைகள், மத்திய கடற்கரை மற்றும் வொல்லொங்கொங் என அனைத்தையும் உள்ளடக்கும் வகையில் பொதுமுடக்க கட்டுப்பாடுகளை நியூ செளத் வேல்ஸ் மாகாண அரசு விரிவுபடுத்தியிருக்கிறது.

பல வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளன.

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

நியூ செளத் வேல்ஸ் மாகாண முதல்வர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் திங்கட்கிழமை, 18 புதிய பாதிப்புகள் தமது மாகாணத்தில் பதிவானதாக கூறினார். முந்தைய நாளில் பதிவான 30 பாதிப்புகளின் எண்ணிக்கை, 18 ஆக குறைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தில் அங்கு கிட்டத்தட்ட 59,000 பேர் பரிசோதிக்கப்பட்டனர்.

ஆஸ்திரேலியாவின் பலவீனங்களை சுரண்டும் ஆபத்தான திரிபு

பிரான்சிஸ் மாவோ, பிபிசி நியூஸ் சிட்னி

ஒரு வாரத்திற்கு முன்பு சிட்னி நகரம், கொரோனா இல்லாத பேரின்பத்துக்கு அருகே இருந்தது – மக்கள் உணவகங்களில் நிரம்பியதோடு கிளப்களில் நடனமாடினர்.

ஆனால் டெல்டா திரிபின் விரைவான பரவல் நகரம் பல மாதங்களுக்கு மீள முடியாத அளவுக்கு புரட்டிப்போட்டு விட்டது. மக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருப்பது “புதிய இயல்பு” போல ஆகி விட்டது. ஆஸ்திரேலியாவை பாதிக்கும் நான்கு கிளஸ்டர்களில் மூன்றுடன் இந்த திரிபு இப்போது தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து வல்லுநர்கள் கூறும்போது, “நாட்டின் பாதுகாப்பு பல மடங்கு, சக்திவாய்ந்த திரிபால் பாதிக்கப்பட்டுள்ளது. விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் கடந்து காற்று மூலம் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலாம் என்ற கவலையை தோற்றுவித்துள்ளது.

சிட்னியில், நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதித்த ஒருவர் வீட்டுக்குள் வந்தவுடனேயே அவரது வீட்டில் உள்ள அனைவரையுமே புதிய நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) திரிபு தாக்குகிறது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். தற்போதைய பொது முடக்க நடவடிக்கைகள், இந்த நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கட்டுப்படுத்துமா என்பதை இப்போதே கூற முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தடுப்பூசி போடும் அளவு குறைவாக இருப்பதும், ஆஸ்திரேலியர்கள், எளிதாக நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்புக்கு உள்ளாவதை சாத்தியமாக்கியிருக்கிறது.

உலக அளவில் விரிவாக பரவும் தன்மை வாய்ந்த இந்த திரிபை, சரியான சூறாவளி என்று ஒரு நிபுணர் என்னிடம் விவரித்தார்.

வலிமையான எதிரி

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட டெல்டா திரிபை “மிகவும் வலிமையான எதிரி” என்று நியூ செளத் வேல்ஸ் மாகாண சுகாதார அமைச்சர் பிராட் ஹஸார்ட் அழைக்கிறார்.

“இந்த நேரத்தில் நாம் என்னதான் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) அதற்கு எதிர்வினையாற்றுவது எப்படி என்பதை அறிந்துள்ளது போல தோன்றுகிறது,” என்று அவர் கூறினார்.

அதிவிரைவு பரவல்

சிட்னியில் பரவிய வைரஸுடன் தொடர்புடைய திரிபாக மேற்கு ஆஸ்திரேலியாவில் இருவருக்கு பதிவான வைரஸில் கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல, கொரோனாவால் பாதிக்கப்பட்டு விடுதியில் தனிமைப்படுத்தப்பட்ட காலத்துக்கு பிறகு வெளியே வந்த நபர்கள் மூலம் குயீன்ஸ்லாந்து, வடக்கு பிராந்தியம் ஆகிய பகுதிகளில் உள்ளவர்களுக்கு நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவியதாகவும் கருதப்படுகிறது.

தொலைதூர வடக்கு பிராந்தியத்தில் (நார்தர்ன் டெரிட்டரி) மட்டும் ஏழு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதன் விளைவாக, தலைநகர் டார்வினில் வரும் வெள்ளிக்கிழமை வரை முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு டெல்டா திரிபு, சுரங்க முகாமில் இருந்து பரவியதாகவும் அது அங்குள்ள சமூகத்துக்கே அச்சுறுத்தலாகியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

“முதன்முறையாக, வடக்கு பிராந்தியத்தில் பொதுவெளி தளத்தில் கொரோனா திரிபு பரவியிருக்கிறது,” என்று முதலமைச்சர் மைக்கேல் கன்னர் கூறினார்.

விர்ஜின் ஆஸ்திரேலியா விமான நிறுவனத்தின் விமான சிப்பந்திகள் குழுவில் ஒருவர் டெல்டா திரிபால் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கும் நிலைமை உஷார்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழுவினர் ஐந்து உள்நாட்டு பயண சேவைகளில் பணியில் இருந்துள்ளனர். அந்த விமான சேவைகளில் பயணம் செய்த அனைத்து பயணிகளிடமும் இது குறித்து விர்ஜின் ஆஸ்திரேலியா நிறுவனம் எச்சரித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »