Press "Enter" to skip to content

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100வது ஆண்டு: ஆட்சி அதிகாரத்தை தக்க வைப்பது எப்படி?

  • பிரதீக் ஜாக்கர்
  • கிழக்கு ஆசியா நிபுணர்

பட மூலாதாரம், Getty Images

சீன கம்யூனிஸ்ட் கட்சி, ஜூலை 1ஆம் தேதி தனது நூற்றாண்டு விழாவை கொண்டாடவிருக்கும் வேளையில், தமது முழுமையான வெற்றியின் உச்சத்தை அந்த கட்சி அனுபவித்து வருகிறது.

தனது நூற்றாண்டு கால பயணத்தில் பொய்த்துப்போன எதிர்பார்ப்பு, ஜனநாயகம் போன்றவை இல்லாத ஒன்றாகி விட்ட பிறகும் சீன கம்யூனிஸ்ட் கட்சி நிலைத்து நிற்ப்பது பற்றியே இந்த நாட்டுக்குள் அதிகமாக பேசப்படுகிறது.

அண்மையில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் பயணத் திட்டத்தின் வெற்றியின் போது கூட தேசபக்திக் களியாட்டமே முன்னிலை பெற்றிருந்தது. அதில் ஒரு விண்வெளி வீரர் “கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தின் 100 ஆண்டுகால வரலாற்றில் ஒரு வீர அத்தியாயத்தை இது குறிக்கிறது,” என்று கூறினார்.

மீண்டும் புத்துயிர் பெறும் திறனிருந்தாலும், தொடர்ந்து உயிர்ப்புடன் இருப்பதற்காக அக்கட்சி அதிக கவனம் செலுத்தி வருகிறது. மக்களின் நம்பிக்கை சற்றே குறையும் நிலை ஏற்பட்டால் கூட, அதற்கு உடனடியாக எதிர்வினையாற்றி வருகிறது.

எனவே, ஆட்சிக்கான சட்டபூர்வ அங்கீகாரம் தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகிறது. இந்த நூற்றாண்டு விழாவை, கட்சியின் பழம்பெருமைகள், தற்கால வெற்றிகள், எதிர்காலச் சாதனைகள் ஆகியவற்றின் கலவையான ஒரு பிரசாரத்திற்கு அதன் நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது. அதன் மூலம் மேலும் வலுவடைய எண்ணுகிறது அக்கட்சி.

சீனாவில் ஒற்றை கட்சி ஆட்சியின் அதிகாரத்தைத் தொடந்து நிலைநிறுத்தும் விதமாக, அதன் பிரசார தளங்கள், கல்வியாளர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் கூட அணி திரட்டப்பட்டுள்ளனர்.

எனவே, நூற்றாண்டு பழமையான சீன கம்யூனிஸ்ட் கட்சி சீனாவில் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

‘மக்கள் சேவை’

சீனா

பட மூலாதாரம், Getty Images

மக்கள் சேவை என்ற ஒரே காரணத்தால் தான் தொடர்ந்து மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் இக்கட்சி ஆட்சியதிகாரத்தில் அமர்ந்திருக்க முடிகிறது என்ற செய்தியைத் தான் இது வலியுறுத்த விரும்புகிறது.

1944 ஆம் ஆண்டில் மாவோ சேதுங் பயன்படுத்திய ‘மக்கள் சேவை’ என்ற இச்சொல்லாடல், கட்சியின் அதிகாரப்பூர்வமற்ற குறிக்கோளாகவே கொள்ளப்பட்டுவிட்டது. அதிபர் ஷி ஜின்பிங்க் ஆட்சியின் கீழ் இது மீண்டும் எழுச்சி பெற்றதாகத் தெரிகிறது.

‘மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை’

சாமானிய மக்களுக்கான கட்சியாகவே இக்கட்சி தொடர்ந்து இருக்க வேண்டியது அவசியம் என்றும் உயர்தட்டு மக்களைத் திருப்திப்படுத்துவது இதன் நோக்கமன்று என்பதைத் தனது உரைகள், உத்தரவுகளில் அடிக்கோடிட்டுக் காட்டி வருகிறார் ஷீ.

சீன கம்யூனிஸ்ட் கட்சி “சீன மக்களின் மகிழ்ச்சிக்காக உண்மையிலேயே பாடுபடுகிறது” என்பதைக் காட்டும் விதமாகப் பிரசாரத்தை பலப்படுத்த வேண்டும்” என்று அவர் சமீபத்தில் கூறினார்.

சீனா

பட மூலாதாரம், Getty Images

சீனக் குடிமக்கள் தங்கள் அரசாங்கத்தின் மீது அதிகரித்து வரும் திருப்தியை வெளிப்படுத்தும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வை மாநில ஊடகங்களும் அதிகாரிகளும் மேற்கோள் காட்டுகின்றன. இக்கட்சியின் மக்கள் ஆதரவு பெற்ற ஆதிக்கத்திற்கு இது ஒரு சான்று என்று அவர்கள் கூறுகிறார்கள்.

‘மக்களின் மனிதர்கள், மென் ஆஃப் த பீபுல்’ என்ற தொடர் மூலமாக சி ஜி டி என் ஒளிபரப்பு நிறுவனம், மக்களுக்காக உழைக்கும் கட்சி உறுப்பினர்களைப் பற்றிய கதைகளைத் திரையிட்டு, மக்களின் உணர்வுகளைத் தூண்டுகின்றன.

“சி.சி.பி.-யிடம் எந்த மந்திரமோ மாயமோ இல்லை, ஆனால் மக்கள் விரும்பும் மாற்றங்கள் என்னவென்று உணர்ந்து, மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கொள்கைகளை அது செயல்படுத்துகின்றது” என்று துணை வெளியுறவு அமைச்சர் ஷி ஃபெங் ஜூன் 14 அன்று வெளிநாட்டு தூதர்களிடம் தெரிவித்தார்.

“கட்சிக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு நீரும் மீனும் போலப் பிரிக்க முடியாதது” என்றும் அவர் கூறினார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியை “மக்கள் சார்ந்த” கட்சியாகச் சித்தரிப்பதுடன், கட்சிக்கும் இளைஞர்களுக்கும் இடையிலான “சிறப்பு பிணைப்பை” மையமாகக் கொண்ட ஒரு பிரச்சாரமும் இழையோடிக்கொண்டிருக்கிறது. சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய வரலாற்றைக் கொண்ட ஒரு பிரிவினர் இளைஞர்கள். இவர்களுடன் கட்சிக்கான கடந்த காலத் தொடர்புகள் சற்று தொய்வடைந்திருந்த நிலையில், இவர்களைக் கவரவும் கட்சி சிறப்புக் கவனம் செலுத்துகிறது.

இருப்பினும் சமூகத்தில் மேல் நோக்கிய ஒரு இயக்கம் இல்லாமையை சீன இளைஞர்கள் உணர்கிறார்கள். வருமானத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகள், இந்தப் பிரச்சாரத்தின் பொய்த்தன்மையை வெளிப்படுத்துவதாக அவர்கள் உணர்கிறார்கள்.

வரலாற்றைத் திரும்பிப் பார்த்தல்

சீனா

பட மூலாதாரம், Getty Images

கட்சியின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, மக்களை ஊக்குவிப்பதற்கும், தொடர்ந்து கம்யூனிஸ்ட் ஆட்சியில் நம்பிக்கையை வளர்ப்பதற்கும் அதன் புரட்சிகர பாரம்பரியத்தைத் தொடர்ந்து நினைவூட்டி வருகிறது.

கட்சியின் கடந்த காலத் தியாகங்களும் பெருமைகளும் தொலைக்காட்சி, விளம்பரங்கள், திரைப்படங்கள், அதிகாரப்பூர்வமான உரைகள் என எல்லா ஊடகங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளன.

உத்தியோகபூர்வ ஏஜென்சி சின்ஹுவாவின் “புரட்சியாளர்களின் அடிச்சுவடுகளைக் கண்டறிதல்” என்ற சிறப்புப் பக்கம் போன்ற கவரேஜ் மூலம் பொய்யுரைகளைத் தகர்க்கவும் அரசு ஊடகங்கள் முயன்று வருகின்றன.

“சிவப்பு சுற்றுலா” என்ற பெயரில் வரலாற்று தளங்கள், கட்சியின் அருங்காட்சியகங்கள் மற்றும் புரட்சிகர நினைவுச் சின்னங்களுக்கான பயணத்திட்டத்தின் மூலம்காவும் வரலாற்றை நினைவுபடுத்தும் முயற்சிகள் தொடர்கின்றன.

வரலாற்றாய்வு நூற்றாண்டு விழாவின் முக்கியக் கருப்பொருள்

சீனா

பட மூலாதாரம், Getty Images

கட்சி வரலாற்றைப் படியுங்கள் என்ற பிரச்சாரத்தை ஷீ, பிப்ரவரி மாதம் தொடங்கினார். கட்சியின் வரலாற்றிலிருந்து அறிவைப் பெறுமாறு அனைத்து மட்டங்களில் உள்ள தொண்டர்களுக்கும் ஷீ அறிவுறுத்தியுள்ளார்.

கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான குய்ஷியின் சமீபத்திய இதழில், கட்சியின் தளராத போராட்டத்தை வரலாற்றிலிருந்து கற்கவேண்டும் என்றும் இதனால் கட்சியின் மீதும் நாட்டின் மீதும் பற்று அதிகரிக்கும் என்றும் ஷீ தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 1, 1949 அன்று மக்கள் சீன குடியரசின் அரசு அமைக்கப்படுவதாக தலைநகர் பெய்ஜிங்கில் அறிவித்தார் மாவோ சேதுங்.

பட மூலாதாரம், Getty Images

ஷியின் கருத்தியலுடன் ஒத்துப்போகும் வாங் ஹுனிங், சமீபத்தில் திறக்கப்பட்ட அருங்காட்சியகம் “கட்சி உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு சி.சி.பி ஏன் இவ்வளவு திறன் கொண்டுள்ளது, மார்க்சியம் ஏன் வெற்றிகரமாகச் செயல்படுகிறது, சீன குணாதிசயங்களைக் கொண்ட சோசலிசம் ஏன் சிறந்து விளங்குகிறது என்பதைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெற உதவும்” என்று கூறினார். “.

ஏற்ற இறக்கங்களைக் கொண்ட கட்சியின் கடந்த காலத்தைச் சரியாக எடைபோடுவதை விட, கட்சியின் நூறாண்டு பயணத்தின் சுத்திகரிக்கப்பட்ட ஒரு பதிப்பை முன்வைக்க, இந்த வரலாறு குறித்த கவனம் துணை செய்யும்.

அதிகாரப்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட வரலாற்றை எதிர்த்துக் கேள்வி எழுப்பும் தன்மை குறித்தும் மீண்டும் மீண்டும் ஷீ எச்சரித்துள்ளார்.

கடந்த மாதத்தில் மட்டுமே, கட்சி வரலாற்றைச் சிதைக்கும் சுமார் 2 மில்லியன் கணினிமய பதிவுகளை அதிகாரிகள் நீக்கியுள்ளனர். மேலும் வரலாற்றுத் திரிபுகள் தொடர்பான வழக்குகளைப் புகாரளிக்க பொதுமக்களுக்கு ஒரு தொலைபேசி ஹாட்லைனையும் அமைத்தனர்.

சொர்க்கத்தின் ஆட்சி

கட்சி அதன் உள்நாட்டு அங்கீகாரத்திற்கு, வலுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை வழங்குவதையே நீண்டகாலமாக நம்பியுள்ளது.

உள்நாட்டு ஆதரவைப் பெறுவதற்கான ஒரு முக்கிய தூண் “செயல்பாட்டுக்கான தகுதிபெறுதல்” ஆகும் – அதாவது நல்ல விளைவுகளை ஏற்படுத்துவதற்கான திறனைப் பொறுத்து ஆட்சி செய்வதற்கான உரிமை தீர்மானிக்கப்பட வேண்டும்.

அண்மையில் செய்தி அனுப்புதல் என்ற தலைப்பில் சீனாவின் பொலிட்பீரோவில் உரையாற்றிய ஒரு முக்கிய சீன அறிஞர் ஜாங் வீவி, இந்த ஆட்சியை “மாண்டேட் ஆஃப் ஹெவன்” என்று குறிப்பிட்டார் – இது ஒரு பண்டைய சீனக் கருத்தாகும், இதன் மூலம் பேரரசர்களின் ஆட்சிக்கான உரிமை அவர்கள் எவ்வளவு சிறப்பாக ஆட்சி செய்தார்கள் என்பதைப் பொறுத்தது.

மற்றொரு கட்டுரையில், “ஜனநாயகமா அல்லது சர்வாதிகாரமா” என்ற வாதத்தையும் தாண்டி, “நல்லாட்சியா அன்றா” என்ற அளவில் தான் பார்க்கப்பட வேண்டும் என்ற புதிய கருத்தியலை முன்வைத்தார் அவர்.

சீனாவின் பொருளாதாரச் சாதனைகளுக்கு உரிமை கோரும் கட்சி

நூற்றாண்டு விழா கோலாகலத்தையொட்டி, அனைத்து அரசு ஊடகங்களும் இந்தக் கட்சித் தலைமையில் ஏற்பட்டுள்ள பொருளாதார அறுபுதங்கள் மற்றும் மாபெரும் சாதனைகள் குறித்துப் பேசிய வண்ணமிருக்கின்றன.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் திறமைக்கான நற்பெயரைத் தக்கவைத்துக்கொள்வதில் இரண்டு எடுத்துக்காட்டுகள் தீவிர வறுமை மற்றும் கோவிட் -19 ஆகியவற்றுக்கு எதிரான சீனாவின் “வெற்றி” ஆகும் – இது பீப்பிள்ஸ் டெய்லி, என்ற கட்சி நாளேட்டில் சமீபத்தில் பெரிய கட்டுரையாக வெளியாகியிருந்தது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்திறனை ஒரு முன்னாள் ஜப்பானிய பிரதமர், கானா கட்சித் தலைவர் மற்றும் ஒரு ரஷ்ய அறிஞர் போன்ற வெளிநாட்டுக் குரல்களும் பாராட்டும் வண்ணம் திட்டம் செயல்பட்டு வருகிறது.

One Hundred Years of the Founding of the CCP

பட மூலாதாரம், Getty Images

ஜனநாயக நாடுகளான இந்தியாவிலும் அமெரிக்காவிலும் இன்னும் கொரொனாவுடனான போராட்டம் தொடர்ந்து கொண்டிருப்பதைக் குறிப்பிட்டு, உள் நாட்டில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், ஜனநாயகம் பயன் தராது என்ற கருத்தைத் திணிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

எவ்வாறாயினும், “செயல்பாட்டுக்கான தகுதி பெறுதல்” என்பது மக்களின் அதிகரித்து வரும் எதிர்பார்ப்புகளைப் பொருத்து மாறுபடுகிறது. சீனாவில் அதிகரித்து வரும் முத்த குடிமக்கள் தொகை, கட்டமைப்பு மந்தநிலை, சீர்திருத்தங்களின் பற்றாக்குறை, சுற்றுச்சூழல் காரணிகள் நிச்சயமாக பெரும் சோதனையாக இருக்கும்.

ஒருவேளை இந்த நிலையை முன் கூட்டியே தவிர்க்கும் நோக்கில் தான், வளர்ச்சி இலக்குகளில் அதிக கவனம் செலுத்தாமல், ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் குடிமக்களுக்கு “சிறந்த வாழ்க்கையை” வழங்குவதற்கும் அதிக கவனம் என்ற ரீதியில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுய சீர்திருத்தத் திறன்

சீனா

பட மூலாதாரம், Getty Images

சீன கம்யூனிஸ்ட் கட்சி நெருக்கடிகளை சமாளிப்பதற்கும் மாறும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றிக்கொள்வதற்கும் திறன் பெற்றிருப்பதாக விளம்பரப்படுத்துவதற்கும் ஆர்வமாக உள்ளது. இதனை “சுய சீர்திருத்தம்” என்று அழைக்கிறது.

குறுகிய கால அரசியல் நன்மைகளால் வழிநடத்தப்படும் ஜனநாயக அமைப்பைப் போல் அல்லாமல், தொலை நோக்கூப் பார்வையுடன், தன்னைத் தானே திருத்திக் கொள்ளும் திறனுடன் விளங்கும் கட்சி என்றும் இதுதான் தனித்துவமான தன்மை என்றும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

கட்சியின் சுய சீர்திருத்தம் தொடர வேண்டும் – ஷீ

இந்த ரீதியில், எந்த ஒரு தவறான செயல்பாட்டுக்கும், உதாரணமாக, கோவிட் -19 தொற்றுநோய்களின் ஆரம்ப காலத் தோல்விகள் போன்றவைக்கும் உள்ளூர் அதிகாரிகளே பொறுப்பாக்கப்படுகிறார்கள். மத்திய அதிகாரத்தின் மீது குற்றம் சுமத்தப்படுவதில்லை.

“சீனாவின் அமைப்பில், பல கட்சி அமைப்பில் உள்ள ஓயாத போட்டி தவிர்க்கப்படுகிறது என்று சீன அதிகாரி சூ யூஷெங் ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட்டபோது நாட்டின் அரசியல் அமைப்பின் சிறப்பைப் புகழ்ந்தார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி, இன்னொரு சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் கட்சி போல இல்லை என்றும் இக்கட்சி, தனது தவறுகளைத் துணிவுடன் எதிர்கொள்ளவும், அவற்றை சரிசெய்யவும், சுய சீர்திருத்தத்தை தைரியமாக ஏற்றுக்கொள்ளவும் முடியும்” என்று துணை வெளியுறவு மந்திரி ஷை ஃபெங் வலியுறுத்தினார்.

சோவியத் யூனியனின் சிதைவு, சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு மிகப்பெரிய பாடமாக விளங்குகிறது. குறிப்பாக அது போன்ற நிலை தவிர்க்கப்பட வேண்டும் என்று ஷீ மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார்.

2012 இல் ஷீ பதவியேற்றபோது, கட்சி ஒரு மோசமான நெருக்கடியில் இருந்தது, பிரிவினைவாதம், திறமையின்மை மற்றும் ஊழல் ஆகியவற்றால் பின்னப்பட்டிருந்தது. சி.சி.பி.யை விரிவான உள்ளார்ந்த சீர்திருத்தம், ஒழுங்கு பிரச்சாரங்கள், கூட்டு ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் சுயவிமர்சன அமர்வுகள் மூலம் “சுத்திகரிக்க” ஷீ பெரிதும் முயன்றுள்ளார்.

சுய சீர்திருத்தத்தில் அதிகம் பேசப்படுவது ஊழல் எதிர்ப்பு பிரசாரம் – இது சீன மக்களிடையே மிகவும் பிரபலமானது – இது உள்நாட்டு ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

மிக உயர்ந்த அரசியல் அமைப்பு என்று தன்னைத் தானே கூறிக்கொள்ளும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குளேயே கெய் ஷியா போன்றவர்கள் இக்கட்சியை பெரும் சிக்கல்களை உடைய அரசியல் ஜாம்பி என்று வர்ணிக்கிறார். இவர், பீஜிங்கில் உள்ள மத்திய கட்சிக் கல்வி நிலையத்தில் முன்னாள் பேராசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவை மாபெரும் வல்லரசாக்குவது

சீனா

பட மூலாதாரம், Getty Images

வளர்ந்து வரும் தேசபக்தியை சீன கம்யூனிஸ்ட் கட்சியை நோக்கித் திருப்ப இக்கட்சி விழைகிறது.

இந்த அடிப்படையில், கட்சியின் ஆட்சி “சீன தேசத்தின் பெரும் புத்துணர்ச்சிக்கு” மிகவும் முக்கியம். 2049 க்குள் அடைய ஷீ உறுதி அளித்துள்ள ஒரு வாக்குறுதி – குடிமக்களுக்கு ஒரு கூட்டு நோக்கத்தை அளிப்பது.

தனது தகுதியைத் தக்க வைத்துக் கொள்ள தேசியத்தை நாடும் சீனா

சீனா தான் பெறத் தகுதியான உயர்ந்த இடத்தை உலக அளவில் பெற்றுத் தருவதற்கும் அந்நிய சக்திகளின் ஆதிக்கத்தில் இருந்த அவமானத்தைப் போக்குவதற்கும் இக்கட்சி முயன்று வருகிறது என்றும் இக்கட்சியின் ஆதிக்கம் இல்லையென்றால், நாட்டில் குழப்பம் பெருகி, மேற்கத்திய உலகத்தின் சுரண்டலுக்கு ஆளாகும் என்ற செய்தி தெளிவாகப் பரப்பப்பட்டு வருகிறது.

“சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான தலைமை இல்லாமல், சீன தேசத்திற்கு எதிர்காலம் இருக்காது, மேலும் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சீனாவை நீண்ட காலத்திற்கு அடக்கி கொடுமைப்படுத்தக்கூடும். சீனாவின் இறகுகள் வெட்டப்படக்கூடும் “என்று குளோபல் டைம்ஸின் சமீபத்திய தலையங்கம் குறிப்பிட்டுள்ளது.

சீனா கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலைமை வகித்தவர்கள்

பட மூலாதாரம், Getty Images

தேசிய உணர்வைத் தூண்டும் நோக்கில், ஷீயும் அவரது படையினரும் சீனாவை “உலகளாவிய மைய நிலைக்கு” நகர்த்துவதைப் பற்றியும், “கிழக்கு வளர்கிறது, மேற்கு வீழ்கிறது”, “சீனாவின் ஏற்றம் மற்றும் அமெரிக்காவின் வீழ்ச்சி” என்றெல்லாம் கூறி வருகிறது. விரோதப்போக்குடன் வெளிநாட்டு சக்திகள் “சீனாவை கட்டுப்படுத்த முயற்சிக்கின்றன என்றும் பிரச்சாரம் செய்து வருகிறது.

மேற்குலகைக் குறைகூறும் அரசியல் கலையை முன்னெடுக்கும் சீன அதிகாரிகளும் ஊடகங்களும்

“நாங்கள் தாய்நாட்டின் முன் நின்று அதற்காக போராடும் போராளிகள், சீனாவைத் தாக்கும் ‘வெறி நாய்களை’ தடுக்கிறோம்” என்று பிரான்சிற்கான சீனத் தூதர் லு ஷேய் சமீபத்தில் கூறினார்.

பரபரப்பான வார்த்தை விளையாட்டுகள் உள்நாட்டில் மக்களைக் கவரலாம். ஆனால், இது சீனாவின் வெளியுறவுக் கொள்கையைப் பாதிக்கிறது. சர்வதேச அளவில் நாட்டின் உயர்வு குறித்த எதிர்மறையான கருத்துகளை உருவாக்குகிறது.

ஆயினும்கூட, பொதுச் சூழல் அதி தீவிர, அத்து மீறிய தேசியவாதப் போக்கைக் கடைபிடித்து வருவது குறித்து, அது அயல்நாட்டு உறவுகளைப் பாதிப்பது குறித்து, அரசு ஊடகங்கள் அதிகம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

“இது [சி.சி.பி] தனது முதல் நூற்றாண்டை 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஒரு தெளிவற்ற, சிதறிய மற்றும் தளர்வான ஒருங்கிணைப்பில்லாத கம்யூனிச இயக்கமாகத் தொடங்கினாலும், தன் அடுத்த நூற்றாண்டை ஒரு உலகளாவிய வல்லரசாகத் தொடங்குகிறது” என்று ஒரு சீன நாளேடு அண்மையில் குறிப்பிட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »