Press "Enter" to skip to content

அமேசான் நிறுவன தலைமை பதவியை துறந்தார் ஜெஃப் பெசோஸ் – அடுத்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images

அமேசான் நிறுவனத்தை 27 ஆண்டுகளுக்கு முன்பு இதே தேதியில் நிறுவிய ஜெஃப் பெசோஸ், இதுநாள் வரை வகித்து வந்த அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து இன்று முறைப்படி விலகியிருக்கிறார்.

இதைத்தொடர்ந்து தமது கனவு இலக்கான ப்ளூ ஆரிஜின் விண்ணூர்தி பயண நிறுவனத்தில் அவர் முழு நேரமும் கவனம் செலுத்தவிருக்கிறார். இவரது பதவி விலகலைத் தொடர்ந்து அமேசான் புதிய தலைமை செயல் அதிகாரியாக ஜெஃப் பெசோஸுடன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஆண்டி ஜாஸே பொறுப்பேற்கிறார்.

உச்சம் தொட்ட கணினிமய வர்த்தகம்

ஆரம்ப காலத்தில் இணையத்தில் புத்தகங்களை விற்பனை செய்வதற்காக தொடங்கப்பட்ட அமெசான் நிறுவனம் இன்று உலகின் முன்னோடி மின்னணு வர்த்தக நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்த நிறுவனம் 27 ஆண்டுகளுக்கு முன்பு 1994ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதே தினத்தில் தமது பதவியில் இருந்து விலகுவேன் என்று கடந்த மே மாதம் அறிவித்திருந்தார் ஜெஃப் பெசோஸ். அதன்படியே அவர் செய்தும் காட்டியிருக்கிறார்.

அமேசான்

பட மூலாதாரம், Getty Images

இனி பெசோஸ் என்ன செய்வார்?

கடந்த பிப்ரவரி மாதமே, தமது பதவி விலகல் தொடர்பான முடிவை ஜெஃப் பெசோஸ் வெளியிட்டிருந்தார். அவரது பொறுப்பை ஏற்கவிருக்கும் ஆண்டி, கிளெட் கம்ப்யூட்டிங் தொழிலை கவனித்து வருகிறார். 53 வயதாகும் ஆண்டி ஜெஸ்ஸி, ஹார்வர்டில் படித்த பிறகு, அமெசான் நிறுவனத்தில் 1997ஆம் ஆண்டில் சேர்ந்தார்.

தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகினாலும், நிறுவனத்தின் செயல் தலைவர் பதவியில் தொடரும் ஜெஃப் பெசோஸ், நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் மற்றும் பிரசார மேம்பாட்டு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவார்.

Amazon

பட மூலாதாரம், Getty Images

உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை நீண்ட காலமாக தக்க வைத்து வந்தவர் ஜெஃப் பெசோஸ். அவரது சொத்து மதிப்பு 16,700 கோடி டாலர்கள். இந்திய மதிப்பில் இது சுமார் 13 லட்சம் கோடி ரூபாயாகும்.

உலகின் பெரும் பணக்காரப் பெண்மணிகளில் ஸ்காட் ஜெஃப் பெசோஸின் முன்னாள் மனைவி. அவரிடம் இருக்கும் பணத்தின் பெரும்பகுதி அமேசான் நிறுவனர் ஜெஃப் பேசோஸை 2019-ஆம் ஆண்டு விவகாரத்து செய்யும்போது கிடைத்தது.

கடந்த டிசம்பர் மாதம், அந்த பணத்தில் சுமார் 32 ஆயிரம் கோடி ரூபாயை அவர் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கினார். ஏராளமான நன்கொடை வழங்கினாலும் இன்னும் அவர் உலகின் 22-ஆவது பணக்காரராக இருப்பதாக ஃபோர்ப்ஸ் இதழ் கூறுகிறது. அவரது சொத்து மதிப்பு 4 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »