Press "Enter" to skip to content

ஆப்கானிஸ்தான் இடைக்கால பிரதமர் ஹஸ்ஸன் அகுந்த் யார்? 5 முக்கிய தகவல்கள்

பட மூலாதாரம், UNKNOWN

ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசில் அங்கம் வகிப்பவர்களின் விவரத்தை தாலிபன் தலைமை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தலைநகர் காபூலில் தாலிபன் செய்தித்தொடர்பாளர் சஃபியுல்லா முஜாஹிதின் இன்று இரவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அமைச்சரவையில் இடம்பெறும் நபர்களின் விவரங்களை வெளியிட்டார். அதன் விவரம்:

பிரதமர் – முல்லா மொஹம்மத் ஹஸ்ஸன் அகுந்த்

துணைத் பிரதமர் – முல்லா அப்துல் கனி பராதர்

உள்துறை – சராஜுதின் ஹக்கானி

பாதுகாப்பு – முல்லா யாகூப்

வெளியுறவு – ஆமிர் கான் முட்டாக்கி

வெளியுறவு துணை அமைச்சர் – முல்லா சலாம் ஹனாஃபி

தற்போது அறிவிக்கப்பட்டவர்கள், முறைப்படி அரசு அமையும்வரை இடைக்காலமாக அமைச்சரவையை வழிநடத்துவார்கள் என்று தாலிபன் செய்தித்தொடர்பாளர் கூறினார்.

யார் இந்த ஹஸ்ஸன் அகுந்த்?

தாலிபன் இயக்கத்தை நிறுவியவர்களில் முக்கியமானவர் இவர். அந்த இயக்கத்தின் சக்திவாய்ந்த மற்றும் உச்ச அதிகாரம் கொண்ட குழுவான ரெஹ்பாரி ஷூராவின் தலைவராக 20 ஆண்டுகளாக இருந்தார்.

2001இல் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் ஆளுகை செலுத்தி வந்த தாலிபனை வெளியேற்றும்போது தாலிபன் அமைச்சரவையில் அமைச்சராக ஹஸ்ஸன் அகுந்த் இருந்தார்.

ஆயுத குழுவின் தலைவர் என்பதை விட தாலிபன்களால் போற்றக்கூடிய சமயத் தலைவராகவே ஹஸ்ஸன் அகுந்தை அவர்கள் கருதினர்.

பிரிட்டன் அரசு தடை விதித்துள்ளவர்களின் ஆவணங்களின்படி இவர் கந்தஹார் மாகாணம், மியால் பகுதி, ஸ்பின் போத்லாக் மாவட்டத்தில் பிறந்தவர், இவரது வயது 58. நூர்சாய் பழங்குடியைச் சேர்ந்தவர்.

முல்லா ஹஸ்ஸன் அகுந்த், ஐ.நா பயங்கரவாதிகள் பட்டியலில் இருப்பவர். அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலிலும் இவர் இருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »