Press "Enter" to skip to content

ஆப்கன் மசூதி தொழுகையின்போது வெடிப்புச் சம்பவம்

ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகரில் உள்ள ஷியா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது ஏற்பட்ட வெடிச்சம்பவத்தால் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஆப்கானிஸ்தானின் டோலோ உள்ளூர் தொலைக்காட்சி செய்தியின்படி சம்பவ பகுதியில் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கந்தஹார் நகரில் உள்ள இமாம் பர்கா மசூதி அருகே வெள்ளிக்கிழமை தொழுகையின் போது குண்டுவெடிப்பு நடந்ததாக தாலிபன் அரசின் உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் காரி சையத் தெரிவித்துள்ளார்.

நடந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அரசு தரப்பிலும் உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் விவரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை.

ஆப்கானிஸ்தானில் கடந்த வெள்ளிக்கிழமை குண்டூஸ் மாகாணத்தில் ஒரு ஷியா மசூதியை தற்கொலை குண்டுதாரி இலக்கு வைத்ததில் கிட்டத்தட்ட ஐம்பது பேர் கொல்லப்பட்டனர். அதன் பிறகு கந்தஹாரில் ஷியா மசூதி அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. முழு விவரங்களுக்கு தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »