Press "Enter" to skip to content

பிரிட்டிஷ் எம்.பிக்கு கத்திக்குத்து – தொகுதி கூட்டத்தில் திடீர் சம்பவம்

பட மூலாதாரம், UK Parliament

கன்மேலாய்வுடிவ் எம்.பி. சர் டேவிட் அமேஸ் தமது தொகுதிவாசிகளுடன் மேற்கொண்டிருந்த வழக்கமான கலந்துரையாடலின்போது அவரை கூட்டத்தில் இடம்பெற்றிருந்த நபர் கத்தியால் குத்தினார்.

பிரிட்டன் உள்ளூர் நேரப்படி பகல் 12 மணியளவில் லீ-ஆன்-சீ-யில் எம்.பி சர் டேவிட் அமேஸ் கத்தியால் குத்தப்பட்டதாக தங்களுக்கு தகவல் வந்ததாகவும் அதன் பேரில் ஒருவரை கைது செய்ததாகவும் எஸ்ஸெக்ஸ் காவல்துறையினர் தெரிவித்தனர்.

பிடிபட்ட நபரிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், எம்.பி தாக்கப்பட்ட சம்பவத்தில் வேறு எவரையும் தாங்கள் தேடவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.

கன்மேலாய்வுட்டிவ் கட்சியின் முன்னாள் தலைவர் சர் இயான் டங்கன் ஸ்மித் “டேவிட் அமேஸ் பூரண நலம் பெற பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

துயரமான இந்த நேரத்தில் டேவிட் அமேஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து தாம் சிந்திப்பதாக அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த அதிர்ச்சியூட்டும் செய்தியைத் தொடர்ந்து டேவிட் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த கோபமூட்டும் மற்றும் வன்முறை நடத்தையை அரசியலிலோ அல்லது வேறு எந்த வாழ்க்கையிலும் பொறுத்துக்கொள்ள முடியாது,” என்று அவர் கூறியுள்ளார்.

69 வயதாகும் டேவிட் அமேஸ், செளத் எண்ட் வெஸ்ட் தொகுதி எம்.பி ஆக இருக்கிறார்.

பெல்ஃபேர்ஸ் தேவாலயத்தில் தமது தொகுதிவாசிகளுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டபோது தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார். சம்பவ இடத்துக்கு உடனடியாக வான் வழியாக உலங்கூர்தி உதவூர்தி அனுப்பி வைக்கப்பட்டது.

டேவிட் அமேஸ்

பட மூலாதாரம், Anthony Fitch

சம்பவம் நடந்த இடத்தில் செளத் எண்ட் கவுன்சிலர் ஜான் லேம்ப் இருந்துள்ளார். டேவ்ட் ஒரு குடும்பத் தலைவர் என்றும் அவருக்கு நான்கு மகள்கள், ஒரு மகன் உள்ளதாகவும் தெரிவித்தார்.

“எப்போதும் பிறருக்கு உதவக் கூடிய நிலையில் இருந்தார் டேவிட். குறிப்பாக, அகதிகளுக்காக உதவ எப்போதும் முயற்சி எடுத்து வந்தார். தான் நம்பும் ஒரு விஷயத்தில் எப்போதும் உள்ளப்பிடிப்பு மிக்கவராகவும் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்பதில் அதிக முனைப்பு காட்டுபவராகவும் விளங்கினார் டேவிட்,” என்றார் ஜான் லேம்ப்.

சம்பவம் நடந்தவுடன் மருத்துவமனைக்கு டேவிட் கொண்டு செல்லப்படவில்லை என்றும் சம்பவ பகுதியிலேயே அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர் என்றும் ஜான் லேம்ப் பிபிசியிடம் தெரிவித்தார்.

டேவிட்டுக்கு ஏற்பட்ட காயங்கள் தொடர்பான மேலதிக விவரங்களுக்காக தாம் காத்திருப்பதாகவும் அவர் மோசமான நிலையில் இருப்பதாக உணர்வதாகவும் ஜான்லேம்ப் கூறினார்.

2016இல் கொல்லப்பட்ட ஒரு எம்.பி.யின் நினைவாக உருவாக்கப்பட்ட ஜோ காக்ஸ் ஃபவுண்டேஷன், “‘டேவிட் கத்திக்குத்து சம்பவம் கொடூரமான செயல்,” என்று கூறியுள்ளது.

தொழிலாளர் கட்சித் தலைவர் சர் கேர் விண்மீன்மெர், “‘டேவிட்டுக்கு நடந்த கொடூரமான மற்றும் துயரமான சம்பவம் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது நிலைமை மற்றும் அவரது குடும்பம், ஊழியர்கள் மீதே எனது நினைவு இருக்கிறது,” என்று தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »