Press "Enter" to skip to content

நீர்மூழ்கி கப்பலிலிருந்து இலக்கை தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது வட கொரியா

பட மூலாதாரம், KCNA VIA REUTERS

வட கொரியா நீர் மூழ்கி கப்பலிலிருந்து ஏவப்படும் புதிய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை ஒன்றை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

இதனை வட கொரியாவில் அரசு ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.

வட கொரியாவின் செய்தி முகமையான கேசிஎன்ஏ, அந்த ஏவுகணை “பல நவீன கட்டுப்பாட்டு வழிகாட்டல் தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

மேலும் 2016ஆம் ஆண்டு பாலிஸ்டிக் ஏவுகணை ஏவப் பயன்படுத்தப்பட்ட அதே நீர்மூழ்கி கப்பலைதான் இப்போதும் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கேசிஎன்ஏ-வின் செய்தி குறிப்பில் கிம் ஜாங் உன் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. இதனால் அவர் அந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்பது தெரியவந்தது.

செவ்வாயன்று தென் கொரிய ராணுவம், ஜப்பான் கடற்கரை பகுதியில் ஆயுத சோதனை ஒன்று நடந்ததற்கான அறிகுறிகள் தெரிவதாக தெரிவித்திருந்தது.

கடந்த சில வாரங்களில் வட கொரியா அடுத்தடுத்து பல ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதில் ஹைபர் சோனிக் மற்றும் தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளும் அடங்கும் என வட கொரியா தெரிவித்துள்ளது.

வட கொரியாவின் இந்த சோதனைகளில் சில, கடுமையான சர்வதேச தடைகளை மீறுவதாக உள்ளது.

வட கொரியா ஏவுகணை சோதனைகள் மற்றும் அணு ஆயுத சோதனைகள் நடத்துவதை ஐநா தடை செய்துள்ளது.

பாலிஸ்டிக் ஏவுகணைகள் மிக ஆபத்தான ஒன்றாக ஐநா கருதுகிறது.

ஏனென்றால் பாலிஸ்டிக் ஏவுகணைகளால் தொலைதூரம் இலக்கு வைக்க முடியும், வேகமாக செல்ல முடியும் மற்றும் அதிக `லோட்`களை சுமந்து செல்ல முடியும்.

வட கொரியா பொதுவாக தனது நீர்மூழ்கி கப்பல்களை வைத்திருக்கும் சின்போ துறைமுகத்திலிருந்து ஏவுகணை ஏவப்பட்டதாக தென் கொரியா தெரிவித்தது. இந்த சின்போ துறைமுகம் வட கொரியாவின் கிழக்கு பகுதியில் உள்ளது. மேலும் அந்த ஏவுகணை `ஜப்பானின் கடற்கரை` என்ற பகுதியில் விழுந்துள்ளது.

இந்த குறிப்பிட்ட ஏவுகணை 450 கிமீ பயணித்துள்ளதாகவும், அதிகபட்சம் 60கிமீட்டர் உயரம் வரை சென்றது என்றும் தென் கொரியா தெரிவித்துள்ளது.

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா இரு பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், அதும் மிகவும் வருத்தமளிக்கிறது என்றும் தெரிவித்தார்.

நீர்மூழ்கி கப்பல்களிலிருந்து ஏவுகணைகள் செலுத்தப்படுவது ஏன் முக்கியமானது?

2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், நீர்மூழ்கி கப்பலிலிருந்து புகுக்சாங் -3 என்ற பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது. அந்த சமயத்தில் அதிக அச்சுறுத்தலை தடுக்க அதிக கோணத்திலிருந்து ஏவப்பட்டதாக ஏன்சிஎன்ஏ தெரிவித்திருந்தது.

அந்த ஏவுகணை செங்குத்தான பாதையில் செலுத்தப்படாமல், வழக்கமான பாதையில் செலுத்தப்பட்டால் அது 1900கிமீட்டர் தூரம் வரை பயணித்திருக்கும். அதில் தென் கொரியா மற்றும் ஜப்பான் ஏவுகணையின் இலக்கிற்குள் வந்திருக்கும்.

அதேபோன்று நீர்மூழ்கி கப்பலிலிருந்து ஏவுகணைகள் தாக்கப்பட்டால் அதை கண்டறிவது கடினம். இலக்குகளின் அருகில் அது எளிதாக செல்லும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »