Press "Enter" to skip to content

மறுபிறவி பொம்மை: குழந்தைகளைப் போன்ற தத்ரூப பொம்மைகளை உருவாக்கும் கலைஞர்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மறுபிறவி பொம்மை: குழந்தைகளைப் போன்ற தத்ரூப பொம்மைகளை உருவாக்கும் கலைஞர்

உண்மையான குழந்தைகளைப் போலவே அச்சு அசலாக பொம்மைகளை உருவாக்குகிறார் பார்பரா.

“எல்லாமே விவரங்களில்தான் இருக்கின்றன. வழக்கமான பொம்மைகளில் இல்லாத அம்சங்களான ரத்தக் குழாய், நரம்புகள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கி உண்மையான குழந்தையோடு ஒப்பிடும் அளவுக்கு இதை உருவாக்குகிறேன்,” என்கிறார் பார்பரா ஸ்மோலின்ஸ்கா.

இந்த ‘மறுபிறவி பொம்மைகள்’ வினைல் துண்டுகளில் தயாரிக்கப்படுகின்றன. 1990-களில் ‘மறுபிறவி பொம்மைகள்’ தயாரிப்பு தொடங்கியது. இப்போது அவற்றின் விலை 50 டாலரிலிருந்து 22,000 டாலர் வரை உள்ளது.

உளவியல்ரீதியாக மன அழுத்தத்தைப் போக்குவதற்கு பொம்மைகள் நல்ல வழியாக இருப்பதாகக் கூறுகிறார் உளவியலாளர் எல்ஸ்பியெட்டா.

“அதிர்ச்சியால் ஏற்படும் மன உளைச்சலைச் சரிக்கட்ட பொம்மைகள் நல்ல வழியாக இருக்கின்றன. ஆனால், ஒரு நிபந்தனை. நிஜ உலகிலும் இவை மாற்றாக அமைந்துவிடக் கூடாது,” என்கிறார் எல்ஸ்பியெட்டா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »