Press "Enter" to skip to content

பிரிட்டனில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ஒமிக்ரான் பாதிப்பு: பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ள வலியுறுத்தல்

பட மூலாதாரம், Getty Images

பிரிட்டனில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற தொடங்கியுள்ளனர் என பிரிட்டனின் கல்வி செயலர் நதிம் சஹாவி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் டெல்டா திரிபை காட்டிலும் ஒமிக்ரான் திரிபு அதிக பரவும் தன்மை கொண்டது என்று தெரிவித்துள்ள அவர் இருடோஸ் தடுப்பு மருந்து செலுத்தி கொண்டால் மட்டும் போதாது மேற்கொண்டு பூஸ்டர் டோஸையும் செலுத்தி கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் சனிக்கிழமை வரை ஆயிரத்து 898 பேருக்கு ஒமிக்ரான் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஆனால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பிரிட்டனில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படவில்லை என்றால் ஒமிக்ரான் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜின் மற்றும் டிராபிகல் மெடிசனை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் வீடுகளிலிருந்து பணி செய்வது, முகக்கவசம் அணிவதை அதிகரிப்பது, சில பொது இடங்களுக்கு கோவிட் அனுமதி சீட்டுகளை கொண்டுவருவது போன்ற திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் பரிந்துரைத்து வருகின்றனர்.

பிரிட்டனில் தற்போது இரு டோஸ் தடுப்பு மருந்துகளை எடுத்து கொண்டவர்கள் கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தால் ஏழு நாட்களுக்கு தொடர் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் எனவே அவர்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு முகமையின் மருத்துவ ஆலோசகர் சூசன் ஹாப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

women

பட மூலாதாரம், Getty Images

மேலும் இதுவரை ஒமிக்ரான் தொற்றால் பிரிட்டனில் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இருவாரங்களுக்கு முன்புதான் பிரிட்டனில் ஒமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது எனவே இறப்புகள் ஏற்படுகிறதா என்பதை கூற இன்னும் சில நாட்கள் தேவைப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரானால் அதிகம் பேர் பாதிக்கப்படுவது உறுதி என தெரிவிக்கும் அவர் அது மருத்துவனையில் எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவாக தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் திங்களன்று 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் பூஸ்டர் செலுத்தும் பணி தொடங்கியது.

அங்கு அடுத்த ஏப்ரல் மாதத்திற்குள் ஒமிக்ரான் திரிபால் 25 ஆயிரம் முதல் 75 ஆயிரம் பேர் உயிரிழக்க கூடும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் சனிக்கிழமையன்று பிரிட்டனில் புதியதாக 54 ஆயிரத்து 73 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அதில் 633 பேருக்கு ஒமிக்ரான் இருப்பது கண்டறியப்பட்டது.

முன்னதாக இரு டோஸ் தடுப்பு மருந்து மட்டுமே உங்களை ஒமிக்ரான் திரிபிலிருந்து பாதுகாக்காது என பிரிட்டன் விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர்.

பிரிட்டனில் ஒமிக்ரான் திரிபால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் டெல்டா திரிபால் பாதிப்பட்டவர்களை ஆராய்ந்ததில் இந்த புதிய திரிபை தடுப்பு மருந்துகள் வீரியமாக தடுப்பதில்லை என தெரியவந்துள்ளது.

இரு டோஸ் தடுப்பு மருந்துக்கு பிறகு மூன்றாவதாக பூஸ்டர் போட்டுக் கொள்வது 75 சதவீத மக்களுக்கு கோவிட் அறிகுறிகள் வராமல் தடுக்கிறது.

ஒமிக்ரான் திரிபு முதன்முதலாக கண்டறியப்பட்டதிலிருந்து உலகை அச்சுறுத்தும் ஒரு விஷயம், அது தடுப்பு மருந்தை வீரயமற்றதாக்கிவிடக்கூடும் என்பதுதான்.

பிரிட்டனை பொறுத்தவரை ஒமிக்ரான் திரிபால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டிலிருந்து மூன்று நாட்களில் இரட்டிப்பாகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »