Press "Enter" to skip to content

சோவியத் ஒன்றியம் வீழ்ந்த போது பொருளாதார நெருக்கடியால் தான் டாக்சி ஓட்டியதை நினைவுகூர்ந்த புதின்

பட மூலாதாரம், Getty Images

1991ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்தது குறித்து வருத்தத்துடன் நினைவுகூர்ந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அப்போது ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தான் டாக்சி ஓட்டுநராக பணிபுரிந்ததாக தெரிவித்துள்ளார்.மூன்று தசாப்தங்களுக்கு முன் நிகழ்ந்த சோவியத் யூனியன் வீழ்ச்சி காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், ரஷ்யாவைச் சேர்ந்த பலர் தங்கள் வருமானத்திற்காக பல புதிய வழிகளைத் தேடினர்.இதுகுறித்து, ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான ‘ரஷ்யா’ என்ற ஆவணப்படத்தில் பேசியுள்ள ரஷ்ய அதிபர் புதின், சோவியத் யூனியனின் வீழ்ச்சி, வரலாற்று சிறப்புமிக்க ரஷ்யாவின் அழிவு என விவரித்துள்ளார்.புதினின் இந்த பேச்சு, முன்பு சோவியத் ஒன்றியத்தில் இருந்த யுக்ரைன் தொடர்பான அவருடைய நோக்கங்கள் குறித்த ஊகங்களை மேலும் அதிகரிப்பதாக உள்ளது.

இதனிடையே, 90,000-க்கும் அதிகமான ரஷ்யப் படைகள் யுக்ரைன் எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. இதனால், யுக்ரைன் மீது தாக்குதலை முன்னெடுக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது.இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ரஷ்யா, கிழக்கு நோக்கிய நேட்டோ விரிவாக்கத்திற்கு எதிராக, யுக்ரைன் உத்தரவாதத்தைத் நாடுவதாகவும், கோபத்தைத் தூண்டும் வகையில் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளது. “இது சோவியத் ஒன்றியம் என்ற பெயரில் வரலாற்று ரஷ்யாவின் சிதைவு” என, புதின் தெரிவித்துள்ளார். ரஷ்யா மேலும் சிதையும் என்பது காலத்தின் கட்டாயம் என, மேற்கு நாடுகளில் நம்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.சோவியத் யூனியன் வீழ்ச்சியை துன்பியல் நிகழ்வாக புதின் கருதுகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அந்த சமயத்தில் தன்னுடைய தனிப்பட்ட இன்னல்கள் குறித்து அவர் கூறியவை புதிதானவை.

“சில சமயங்களில் நான் அதிக பணம் சம்பாதிக்க வேண்டியிருந்தது,” என தெரிவித்தார் புதின். “கார் ஓட்டுநராக பணிபுரிந்து கூடுதலாக சம்பாதிக்க வேண்டியிருந்தது. இதனை பேசுவதில் எனக்கு விருப்பமில்லை. ஆனால், அதுதான் நிலைமை என்பது துரதிருஷ்டவசமானது.

அந்த காலத்தில், ரஷ்யாவில் டாக்சி உபயோகிப்பது அரிதானது. தனிப்பட்ட நபர்கள் பலரும் தங்கள் வாழ்வாதாரத்திற்காக, முன்பின் அறியாதவர்களுக்காக டாக்சி ஓட்டுவார்கள். சிலர், உதவூர்தி போன்ற வாகனங்களையும் டாக்சியாக பயன்படுத்தினார்கள். சோவியத் பாதுகாப்புப் படையான கேஜிபியின் முகவராக புதின் அறியப்படுகிறார். எனினும், 1990களில் சென்ட் பீட்டர்ஸ்பர்க் மேயர் அனடாலி சோப்சக்கின் அலுவலகத்தில் பணியாற்றினார். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த, சோவியத் குடியரசுத் தலைவர் மைக்கேல் கோர்பச்சேவுக்கு எதிரான ஆகஸ்ட் 1991 ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின், கேஜிபியிலிருந்து தான் ராஜினாமா செய்ததாக, புதின் தொடர்ந்து கூறிவருகிறார்.

பேட்ரிக் ஜாக்சன் – பிபிசி செய்தியாளர்

நான் ஒரு இரவில் பேருந்து பணிமனை நோக்கிய பேருந்து பயணத்தில் இருந்தேன். அப்போது அவசர ஊர்தி ஒன்று வரவே இடைமறிக்கப்பட்டேன். 1990களில் ரஷ்யாவில் உதவூர்திகள் டாக்சிகளாகவும் பயன்படுத்தப்பட்டன. அந்த காலத்தில், எனக்குத் தெரிந்த அனைத்து இளம் ரஷ்யர்களும், அதனைப் பயன்படுத்துவர். ஒவ்வொரு ரஷ்ய குடும்ப தலைவரும் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டினார்கள். அவர்கள் பாம்பிலா (பாம்பர்) என அழைக்கப்பட்டார்கள்.1989-ல் நான் முதன்முதலில் மாணவனாக வந்தபோது, இங்கு இரண்டு எழுதப்படாத விதிகள் இருந்தன: ஏற்கனவே ஒன்றுக்கும் மேற்பட்டோர் அமர்ந்திருக்கும் காரில் ஏறக்கூடாது. மற்றொன்று தேர் புறப்படுவதற்கு முன் கட்டணத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். அப்போது அவ்வளவாக டாக்சிகள் இல்லாத காலம். 1991-ல் சோவியத் ஒன்றியம் வீழ்ந்தபோது ரஷ்ய நாணயத்தின் மதிப்புக் குறைந்தது. இதனால், முறைசாரா சந்தைகள் முளைத்தன. அப்போது, பலதரப்பட்ட மக்களையும் நீங்கள் காண முடியும். அவ்வப்போது, டாக்சி ஓட்டுநர்களுடன் அறிவூட்டும் வகையிலான உரையாடல்களில் ஈடுபடுவேன். ஆனால், அதில் பெரும்பாலும் சங்கடங்கள் ஏற்படும். நான் மேற்கத்தியர் என தாமதமாக அறிந்துகொண்ட ஓட்டுநர், என்னிடம் அதிகமாக கட்டணம் வசூலித்திருக்கலாம் என எண்ணியதால் இது நிகழ்ந்திருக்கலாம். அவர்கள் தாங்கள் திட்டமிட்ட தொழில்களை, வாழ்க்கையை வாழாமல், தங்கள் வாழ்க்கையின் சிறந்த வருடங்களை இதில் கழிப்பதால் அவர்கள் வெட்கப்பட்டிருக்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »