Press "Enter" to skip to content

சூப்பர் புயல் ராய்: பிலிப்பின்ஸை தாக்கியதில் 1.3 கோடி பேர் பாதிக்கப்பட வாய்ப்பு

பட மூலாதாரம், Reuters

தெற்கு பிலிப்பைன்ஸில் சூப்பர் புயல் ராய் தாக்கிதால் ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

பரவலான வெள்ளம் மற்றும் பாதிப்புகள் பற்றிய எச்சரிக்கைகள் ஏற்கெனவே விடுக்கப்பட்டிருந்தன.

சியார்கோவில் ஒரு பிரபலமான சுற்றுலாத் தீவில் கரையைக் கடந்தது ராய் புயல் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு சுமார் 175 கிமீ (110 மைல்) வேகத்தில் காற்று வீசியது.

சியர்கோவின் சில பகுதிகளில் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகள் தற்போது துண்டிக்கப்பட்டுள்ளன. 1.3 கோடி மக்கள் சூறாவளியால் பாதிக்கப்படலாம் என்று ஐ.நா. கூறியுள்ளது.

புயல் தாக்கம் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டு துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளன.

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பின்ஸை இந்த ஆண்டில் தாக்கியிருக்கும் சக்திவாய்ந்த புயல்களுள் ஒன்று ராய்.

நிவாரண முகாம்

பட மூலாதாரம், Getty Images

சர்வதேச செஞ்சிலுவைச் சங்க கூட்டமைபின் (IFRC) உள்ளூர் தலைவர் ஆல்பர்டோ பொகனெக்ரா கூறுகையில், “இந்த அசுரப் புயல் ஒரு சரக்கு ரயிலைப் போல கடலோர மக்களைத் தாக்கும் வகையில் பயமுறுத்துகிறது” என்றார்.

சுற்றுலாப் பயணி

பட மூலாதாரம், Getty Images

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளிகள், கடற்கரைப் பகுதிகளில் இருந்து குடும்பங்களை வெளியேற்ற பிலிப்பின்ஸ் கடலோர காவல்படை உதவுவதைக் காட்டுகின்றன.

மழை

பட மூலாதாரம், Getty Images

புயல் கடுமையாகத் தாக்கியிருந்தாலும், இதுவரை உயிரிழப்பு அல்லது காயம் பற்றிய தகவல் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த புயல்கள் அடிக்கடித் தாக்குவது வழக்கம். ஆண்டுக்கு சராசரியாக 20 புயல்கள் பிலிப்பின்ஸை தாக்குகின்றன.

2020 நவம்பரில் கோனி என்ற சூப்பர் புயல் பெரும் உயிரிழப்பையும் பேரழிவையும் ஏற்படுத்தியது. 2013இல் ஹையான் புயல் 6,000 க்கும் மேற்பட்டவர்களின் உயிரைப் பறித்தது. அதன் பிறகு நாட்டைத் தாக்கிய மிக சக்திவாய்ந்த புயல் கோனியாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »