Press "Enter" to skip to content

கேர்ல்ஸ் டூ பார்ன்: $18 மில்லியன் நஷ்ட ஈடோடு காணொளி உரிமைகளை பெண்களுக்கு வழங்க உத்தரவு

பட மூலாதாரம், Getty Images

ஆபாச வலைதளங்களுக்கான, ஆபாசப்பட காணொளிகளை உருவாக்கும் தொழிலில் நூற்றுக்கணக்கானோர் சிக்க வைக்கப்படுகிறார்கள். அப்படி சிக்கவைக்கப்பட்டவர்களுக்கே காணொளிகள் சொந்தம் என்றும், பல மில்லியன் டாலர் நஷ்ட ஈடாகக் கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கேர்ல்ஸ் டூ பார்ன் மற்றும் கேர்ல்ஸ் டூ டாய்ஸ் ஆகிய இரு ஆபாசப்பட வலைதளங்கள் தொடர்பான வழக்கு நீண்ட காலமாக நடந்து வந்தது.

தற்போது அந்த இரு வலைதளங்களும் செயல்படவில்லை. அவ்வலைதளங்கள் எடுத்த ஆபாசப்படக் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள், அப்பெண்களுக்கே சொந்தம், அதன் உரிமை அவர்களையே சேரும் என அமெரிக்க நீதித்துறை தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஆபாச வலைதளத்தினால் பாதிக்கப்பட்ட 400-க்கும் மேற்பட்டோர், இந்த தீர்ப்பினால் தங்கள் காணொளிகளை இணையத்திலிருந்து நீக்குமாறு கோரலாம்.

பாதிக்கப்பட்டோர் தொடர்பான காணொளிகளை நீக்க பார்ன் ஹப், கூகுள் உட்பட பல நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்க உள்ளனர்.

கேர்ல்ஸ் டூ பார்ன் வலைதளத்தில் தயாரிப்பாளர் ரூபென் ஆண்ட்ரே கார்சியா, பெண்களை கட்டாயப்படுத்தி ஆபாசக் காணொளிகளில் தோன்ற வைத்த குற்றத்துக்காக, கடந்த கோடை காலத்தில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

உண்மையில் ஆடைகளுடன் நடிக்கக் கூடிய மாடலிங் பணிகளுக்கான விளம்பரத்துக்குதான் பெண்கள் பதிலளித்தனர், பின் அவர்களிடம் பெயர்குறிப்பிடாமல் எடுக்கப்படும் ஆபாச காணொளிப் பதிவுக்கு கூடுதல் பணம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

கேர்ல்ஸ் டூ பார்ன் வலைதளத்தின் காணொளிகளில் தோன்றிய பெண்களை, கார்சியா அழுத்தம் கொடுத்து பாலியல் நடவடிக்கை கொண்ட படத்தில் நடிக்க வைத்ததாக அப்பெண்கள் கூறியுள்ளனர். மேலும் அக்காணொளிகள் படமாக்கப்படுவதன் உண்மையான நோக்கத்தைக் குறித்து தெரிவிக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.

அக்காணொளிகள் டிவிடிக்கள் மூலம் மட்டுமே விற்கப்படும் என்றும், வெளிநாடுகளில் மட்டுமே விற்பனை நடக்கும் என்றும் கார்சியா பெண்களிடம் கூறினார்.

உண்மையில், சட்ட விரோதமாக எடுக்கப்பட்ட இந்த காணொளிகள், பார்ன் ஹப் உட்பட இணையத்தில் பதிவேற்றப்படுவது தொடர்பாக அறிந்திருந்தார் கார்சியா. பார்ன் ஹப் உலகிலேயே அதிக நபர்கள் பார்வையிடும் ஆபாச வலைதளம் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்ன்ஹப் ஆபாச வலைதளம்

பட மூலாதாரம், NURPHOTO

பாதிக்கப்பட்டோருக்கு ஏற்பட்ட இழப்பைச் சரிகட்ட 18 மில்லியன் அமெரிக்க டாலர் நஷ்டைஈடு, காணொளி மற்றும் புகைப்பட உரிமைகளை சமர்பிக்குமாறு, அமெரிக்க மாவட்ட நீதிபதி ஜேனிஸ் சம்மர்டினோ கிராசியாவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவால் கேர்ல்ஸ் டூ பார்ன் வலைதளத்தால் பாதிக்கப்பட்ட 402 பேருக்கு காணொளி உரிமைகள் கிடைக்க உள்ளது. தங்கள் காணொளிகளை ஒளிபரப்பும் வலைதளங்களுக்கு எதிராக, இந்த காணொளி உரிமையைக் காட்டி, கணினி மயமான மில்லினியம் காப்பிரைட் சட்டத்தின் கீழ் பதிவை நீக்குமாறு கூறலாம்.

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இந்த சட்டத்துக்குப் புறம்பான செயலை எதிர்த்து பெண்கள் போராடி வந்தனர்.

“இது மிகவும் முக்கியமான தீர்ப்பு. இந்தத் தீர்ப்பு அவர்களை அதீத வேதனையில் ஆழ்த்திய, அவர்கள் துன்பத்துக்குக் காரணமான காணொளி மற்றும் புகைப்படங்களின் உரிமத்தை அவர்களுக்கே திரும்ப வழங்குகிறது” என தெற்கு கலிஃபோர்னியா மாவட்ட பொறுப்பு அட்டர்னி ரேண்டி கிராஸ்மென் கூறினார்.

“பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் வாழ்வின் கடினமான காலகட்டத்தை மூட்டைகட்டி வைக்க இது உதவும் என நம்புகிறோம்” என்றும் கூறினார்.

“பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்வை மீண்டும் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள முடியும் என்பது தான் இந்த நீண்டகால செயல்பட்டில் மிகவும் முக்கியமான விஷயம்” என அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் சிறப்பு முகவர் சுசன் டர்னர் கூறினார்.

இந்த சட்ட விரோத செயல்களுக்கு எல்லாம் மூல காரணமாக இருந்த மைக்கெல் ஜேம்ஸ் ப்ராட் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அவர் எஃப்.பி.ஐ முகமையின் தேடப்படும் முக்கிய நபர்களில் ஒருவராக கடந்த செப்டம்பர் 2020-ல் சேர்க்கப்பட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »