Press "Enter" to skip to content

1971 இந்தியா பாகிஸ்தான் போர்: வங்கதேசம் பிறந்ததில் இந்திரா காந்தியின் பங்கு

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

1971 இந்தியா பாகிஸ்தான் போர்: வங்கதேசம் பிறந்ததில் இந்திரா காந்தியின் பங்கு

1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில், இந்தியா வெற்றியடைந்தது. வங்கதேசம் என்ற தனி நாடு உருவாகக் காரணமாக இருந்த இந்தப் போரில் கிடைத்த வெற்றியை, பாகிஸ்தான் படைகள் சரணடைந்த நாளான டிசம்பர் 16, ஒவ்வோர் ஆண்டும் வெற்றி தினமாக (Victory Day)அனுசரிக்கப்படுகிறது.

அதுவரை கிழக்கு பாகிஸ்தானாக இருந்த நிலப்பகுதி, இந்தப் போருக்குப் பிறகுதான் வங்கதேசம் என்ற தனி நாடாக புதுப்பிறவி எடுத்தது. அதற்கு வித்திட்ட, 1971-ம் ஆண்டு சுமார் 13 நாட்கள் நடந்த, அந்தப் போர் குறித்துத் தெரிந்துகொள்வதற்கான ஒரு குட்டி ப்ளாஷ்பேக் தான் இது.

கிழக்கு பாகிஸ்தானில், மேற்கு பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெறுவதற்காகப் போராடிக் கொண்டிருந்தார்கள். மார்ச் 26, 1971 அன்று, கிழக்கு பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக மேற்கு பாகிஸ்தானிடமிருந்து பிரிய வேண்டுமென்ற கோரிக்கையை அறிவித்தது.

பாகிஸ்தானில், வங்காள மொழி பேசிய மக்கள் மோசமாக நடத்தப்பட்டதோடு, தேர்தல் முடிவுகளிலும் குளறுபடி செய்யப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கிழக்கு பாகிஸ்தான் மக்கள், மேற்கு பாகிஸ்தானுக்கு எதிராக விடுதலைப் போரை தொடங்கினார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »