Press "Enter" to skip to content

கொரோனா தடுப்பூசி முதல் இலங்கை அழகிப் போட்டி வரை: பிபிசி தமிழில் 2021இல் அதிகம் படிக்கப்பட்ட 10 கட்டுரைகள்

பட மூலாதாரம், Getty Images

2021ஆம் ஆண்டு ஒருசில நாட்களில் முடிவுக்கு வரப்போகிறது. இந்த ஆண்டு கொரோனா இரண்டாம் அலை நம் எல்லோர் வாழ்விலும் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி சென்றிருக்கும் ஆனால் அதையும் தாண்டி சில செய்திகள் மக்களின் கவனத்தை பெற்றுள்ளது. பிபிசி தமிழில் 2021ஆம் ஆண்டு அதிகம் படிக்க பட்ட முதல் பத்து கட்டுரைகளை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

1. கடந்த 2019ஆம் ஆண்டில் இந்த உலகில் தொடங்கிய கொரோனா இன்னும் நம்மை விட்டப்பாடில்லை. டெல்டா, ஒமிக்ரான் என ஏதோ ஒரு ரூபத்தில் அச்சுறுத்தி கொண்டே வருகிறது. இருப்பினும் ஓர் ஆறுதல் தரும் விஷயமாக அதிகப்படியான மக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இருப்பினும் தொடக்கத்தில் அதுகுறித்த சந்தேகங்கள் மக்கள் மத்தியில் பரவலாக இருந்தன.

அந்த தருணத்தில் நமது நேயர்களுக்கு தடுப்பூசி குறித்து உள்ள சந்தேகங்களை அவர்களிடம் பிபிசி தமிழின் சமூக ஊடக பக்கங்களின் வாயிலாக கேட்டு அதற்கான விடையை நிபுணர்களிடம் பேசி கட்டுரையாக வழங்கினோம்.

கட்டுரையை படிக்க:

2. பிபிசி தமிழின் அறிவியல் கட்டுரைகளுக்கு என்றுமே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக அறிவியல் அதிசயம் என்ற தலைப்பில் நாம் பல்வேறு கட்டுரைகளை பகிர்ந்து வருகிறோம். அந்த வரிசையில் சைபீரியாவில் 24 ஆயிரம் ஆண்டுகளாக பனியில் உறைந்திருந்த ஒரு நுண்ணிய பல செல் உயிரினம் மீண்டும் உயிரித்தெழுந்துள்ளது என்று வெளியான ஓர் ஆராய்ச்சி குறித்து வெளியிட்டிருந்த கட்டுரை கடந்த ஆண்டில் அதிக வரவேற்பை பெற்ற கட்டுரைகளில் ஒன்றாக உள்ளது.

கட்டுரையை படிக்க:

3. இஸ்ரேலிய அரசாங்கம், காயமடைந்த ராணுவ வீரர்களுக்கு பாலியல் துணைவராகப் ஒருவரை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கிறது அதுவும் அரசாங்கப் பணத்தில். இதுகுறித்து வெளியான செய்தி அதிகம் படிக்கப்பட்ட செய்திகளில் ஒன்றாக உள்ளது.

கட்டுரையை படிக்க:

4. தமிழககத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்காக பிபிசி தமிழ் பல்வேறு தனித்துவமான கட்டுரைகளை வழங்கியது. அந்த முயற்சியில் ஒரு பகுதியாக, வெவ்வேறு துறையை சேர்ந்த நான்கு பெண்எந்திர இருசக்கரக்கலன் (பைக்)கர்கள் பிபிசி தமிழ் குழுவினரோடு சுமார் 1,300 கி.மீ., பயணித்து சாமானியர்களின் வாழ்வாதார பிரச்னைகளை பேசி, அந்த கதைகளை கட்டுரையாகவும், காணொளியாகவும் வழங்கினோம்.

தென்கரும்பலூர்

அந்த வரிசையில் இங்கே இணைக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தென்கரும்பலூர் கிராமத்தை சேர்ந்த செளந்தர்யாவின் கதையை பதிவு செய்திருந்தனர் பிபிசி தமிழ் குழுவினர்.

கட்டுரையை படிக்க:

5. இணையதளத்திலும் சமூக ஊடகங்களிலும் பல தவறான கூற்றுகள் அறிவியல் ரீதியான காரணங்கள் எனும் பெயரில் உலா வருகின்றன. அவற்றில் சிலவற்றுக்கான உண்மையான காரணங்கள் என்ன என்பதை விளக்கி ‘Myth Buster’ எனும் பெயரில் பிபிசி தமிழ் தொடராக வெளியிட்டது.

பூமி

பட மூலாதாரம், STOCKTREK IMAGES INC / ALAMY

அந்த வரிசையில் லெமூரியா கண்டம் என்ற ஒன்று உண்மையாகவே இருந்ததா? அங்கு தமிழர்கள் வாழ்ந்தனரா? இந்த கூற்றிற்கான பின்னணி என்ன என்பதை விளக்கிய இந்த கட்டுரை அதிகம் படித்த கட்டுரைகளில் ஒன்றாகவுள்ளது.

கட்டுரையை படிக்க:

6. தொடக்கத்தில் சொன்னதுபோல இந்த ஆண்டு கொரோனாவின் இரண்டாம் அலை நம் அனைவரின் வாழ்விலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியா முழுவதுமே மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமலும், ஆக்சிஜன் இல்லாமலும், ரெம்டிசிவிர் மருந்து கோரியும் பலர் தவித்து நின்றனர். பலர் தங்களின் குடும்ப உறுப்பினர்களை காப்பாற்ற இயலாமல், எங்கு செல்வது யாரிடம் கேட்பது போன்று திக்கு தெரியாமல் நின்ற பல உருக்கமான நிகழ்வுகளை கேட்டோம். அந்த வரிசையில் மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் தன் உறவினரை இழந்த நிதி ஷர்மா, ஆறு மாத கர்ப்பமாக இருந்த தனது மனைவியையும் இழந்த சச்சின் சையின் ஆகியோரின் கதை இது.

கட்டுரையை படிக்க:

7. உடல்நலம், ஆரோக்கியம் குறித்த செய்திகளை பிபிசி தமிழ் தொடர்ந்து வழங்கி கொண்டு வருகிறது. மனநலம் தொடர்பான ஒரு தொடரையும் சில மாதங்களுக்கு முன் பிபிசி தமிழ் வெளியிட்டிருந்தது. அதில் வெளிவந்த இந்த கட்டுரை மனப் பதற்றம் ஏன் வருகிறது? அதற்கான அறிகுறிகள் என்ன? என்பதை விளக்குகிறது.

கட்டுரையை படிக்க:

8. இதுவும் கொரோனா தடுப்பு மருந்து குறித்த ஒரு செய்திதான். கோவிஷீல்டு, கோவேக்சின் போன்ற கொரோனா தடுப்பு மருந்துகள் ஏற்படுத்தும் விளைவுகள் என்ன? என்ஃபைலாக்சிஸ் என்பது என்ன? போன்ற விளக்கங்களை தரும் கட்டுரை இது.

கட்டுரையை படிக்க:

9. பருவநிலை மாற்றம் குறித்து நாம் வெளியிட்டுள்ள பல்வேறு செய்திகளில் இதுவும் ஒன்று. ஈகோ-ஃப்ரெண்ட்லி பாலுறவு என்றால் என்ன? கழிவற்ற கருத்தடை பொருட்கள் என்றால் என்ன என விளக்குகிறது இந்த கட்டுரை.

கட்டுரையை படிக்க:

10. இலங்கையில் திருமதி இலங்கை அழகிப் போட்டியில் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டு, கிரீடம் சூட்டப்பட்ட பெண்ணிடமிருந்து, அதே மேடையில், அடுத்த சில நிமிடங்களில் கீரிடம் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை செய்தியாக வழங்கியபோது நேயர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

கட்டுரையை படிக்க:

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »