Press "Enter" to skip to content

2021ஆம் ஆண்டில் உலகை திரும்பிப் பார்த்து ரசிக்க வைத்த சிறந்த படங்கள்

பட மூலாதாரம், Getty Images

கவிஞரும் கலை வரலாற்றாசிரியருமான கெல்லி க்ரோவியர் இந்த வருடத்தின் மிகவும் வியப்பூட்டிய சிறந்த புகைப்படங்களைத் தேர்ந்தெடுத்தார் – காஸாவில் குண்டுவீசப்பட்ட படுக்கையறையிலிருந்து வெளியே பார்க்கும் ஒரு பெண்ணின் படங்கள், அமெரிக்க கேபிடல் கலவரம், இந்திய சுகாதார ஊழியர்களின் படங்கள் போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை. அவற்றை இங்கே வழங்குகிறோம்.

உலோக சிறுவன், இந்தோனீசியா, 2021

இந்தோனீசியாவின் டெபோக் வீதிகளில் எட்டு வயது சிறாரின் பிச்சை எடுக்கும் படம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. அந்த சிறாரின் தோல் உலோக நிற வண்ணப்பூச்சு மற்றும் சமையல் எண்ணெயின் நச்சு கலவை முலாமால் பிரதிபலித்தது. இந்த கவலை அந்த சிறுவனை ஒரு சிலை போல உருவகப்படுத்தியது.

ஆல்டி மனுசியா சில்வர் (அல்லது “சில்வர் மென்”) என்று அழைக்கப்படும் இந்த சிறார், பிச்சை எடுப்பதற்காக இந்த ஆபத்தான மாறுவேடத்தை பூண்டார். நெரிசலான நகர வீதியில் எஃகு நீரோட்டத்தில் தோன்றிய ஆல்டியின் உருவம் பிச்சை எடுக்கும் சமூகத்தின் நிலை பற்றி பேச வைத்தது.

காஸா சிறுமி, 2021

Girl looks out of bombed bedroom wall at a bombed building in Gaza

பட மூலாதாரம், Getty Images

2014 முதல் இஸ்ரேலுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையிலான கொடூரமான மோதலில், மே 24ஆம் தேதியன்று அன்று காஸாவின் பெய்ட் ஹனூனில் ஒரு சிறுமியின் வீடு வெடிகுண்டு வீச்சுக்கு இலக்கானது (ஹமாஸிடமிருந்து ஏவப்பட்ட ராக்கெட்டுக்கு பதிலடியாக நடந்த வான்வழித் தாக்குதல்களில் கட்டடம் இலக்கானது). அந்த சிறுமியின் உருவம் – செருப்பு மற்றும் இடிபாடுகளுக்கு இடையே வெறுங்காலுடன் நின்றதாக இருந்தது. அந்த துளைக்கப்பட்ட சுவரின் வழியாக அடிவானத்தை உற்றுப் பார்க்கும் சிறுமயின் படம் காண்போரின் இதயத்தை பிளக்க வைத்தது.

COP26 பேச்சு, துவாலு, நவம்பர் 2021

Man in suit submerged in water

பட மூலாதாரம், Reuters

கிளாஸ்கோவில் நடந்த ஐநா காலநிலை மாநாட்டில் உரையாற்றிய பசிபிக் தீவு நாடான துவாலுவின் வெளியுறவு அமைச்சர் சைமன் கோஃப், கடல் நீர் மட்டம் உயரும் மற்றும் வேகமான காலநிலை நெருக்கடி தனது தாழ்வான தேசத்தை எவ்வாறு அச்சுறுத்துகிறது என்பதை விளக்குவதற்காக கடல் நீரில் தொடை அளவு ஆழமான கடல் பகுதியில் நின்றபடி பேசினார்.

“எங்களைச் சுற்றி தண்ணீர் பெருகுவதால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்” என்று கோஃப் வலியுறுத்தினார்.

விண்வெளி வீரர்கள், இஸ்ரேல், 2021

Astronauts in Israeli desert

பட மூலாதாரம், Getty Images

இஸ்ரேலின் நெகேவ் பாலைவனத்தில் உள்ள ராமன் பள்ளத்தில் செவ்வாய் கிரகத்திற்கான பயிற்சிப் பயணத்தின் போது ஒரு ஜோடிஇரு விண்வெளி வீரர்கள் விண்வெளி உடையில் அருகருகே நகர்கின்றனர்.

உலகின் மிகப்பெரிய “மக்தேஷ்” (ஒரு விண்கல் தாக்கம்), இதய வடிவ பள்ளத்தாக்கு ஆஸ்திரியா, ஜெர்மனி, இஸ்ரேல், நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகிய ஆறு நாடுகளின் விண்வெளி வீரர்களுக்கு மெய் உணர்வை கொடுத்தது.

செவ்வாய் கிரகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் உத்தேச நிலைமைகளுக்கு ஏற்றாற்போன்ற பயிற்சி அனுபவத்தை இந்த பகுதி விண்வெளி உடைகளில் இருந்தவர்களுக்கு கொடுத்தது.

எதிர்ப்பாளர்கள், ஸ்காட்லாந்து – நவம்பர் 2021

Protesters wearing oil jugs as masks and pouring petrol outside gates

பட மூலாதாரம், Getty Images

கடந்த நவம்பர் மாதம் கிளாஸ்கோவில் நடந்த COP26 ஐ.நா காலநிலை மாற்ற மாநாட்டின் போது, Ocean Rebellion குழுவின் செயற்பாட்டாளர்கள் ஸ்காட்லாந்தின் Grangemouth என்ற பகுதியில் உள்ள INEOS ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் மைய ஆலைக்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்தனர்.நெகிழி (பிளாஸ்டிக்) கல்லெண்ணெய் குடங்களை கோரமான முகமூடிகளாகப் பயன்படுத்தியதற்காக, “ஆயில் ஹெட்ஸ்” என்று அழைக்கப்படும், பிரச்சாரகர்கள் வியத்தகு முறையில் எண்ணெயைத் துப்பி, போலி பணத்தை வீசியெறிந்து, முதலீட்டாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் நடத்தையை விளக்கும் வகையில் போராட்டம் செய்தனர்.

டைவர், சீனா – ஜனவரி 2021

A swimmer suspended in the air mid-dive into a frozen lake

பட மூலாதாரம், Getty Images

கடந்த ஜனவரி மாதம், வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள ஷென்யாங்கில் உள்ள குளிர்ந்த ஏரியில் இருந்து உயரும் பனிக்கட்டியிலிருந்து ஒரு பெண் குதிக்கும் புகைப்படம் எடுக்கப்பட்டது.கசப்புத்தன்மை வாய்ந்த அந்த ஏரிக்கு மேல் கண்ணாடி பரப்பு போல பனி உறைந்திருந்தது. அந்த சூழ்நிலையில் எடையற்ற நபர் போல அந்தரத்தில் மிதப்பது போல அந்த பெண்ணின் படம் பதிவு செய்யப்பட்டது.

குப்பை ஏரி, செர்பியா – 2021

A lake at the bottom of mountains filled with rubbish floating on the surface

பட மூலாதாரம், Getty Images

மேற்கு பால்கனில் உள்ள ப்ரிபோஜ் நகருக்கு அருகில் உள்ள லிம் நதியில் குப்பைகள் குவிந்து கிடக்கும் ஒரு கோரமான பனிப்பாறையின் புகைப்படம் மூச்சடைக்கக் கூடிய அளவிற்கு பயங்கரமாக காட்சியளித்தது.

தளர்வான கழிவு மேலாண்மை நடவடிக்கைகளின் ஒருங்கிணைவு, சட்டவிரோதமாக கொட்டுதல் அதிகரிப்பு மற்றும் இப்பகுதியில் வெள்ளம் – குப்பைகளை ஒரே இடத்தில் சங்கமிக்க உதவியிருக்கிறது.

கேப்பிடல் கலவரம், அமெரிக்கா – ஜனவரி 2021

Crowds with flags inside the US Capitol building

பட மூலாதாரம், Getty Images

ஜனவரி 6 ஆம் தேதி அமெரிக்க கேப்பிட்டலின் ரோட்டுண்டாவில் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் கேபிடல் காவல்துறையினருடன் வன்முறையில் மோதிய புகைப்படங்கள் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனின் வெற்றி அறிவிப்பை டிரம்ப் ஆதரவாளர்கள் எதிர்த்தனர். மேலும், அவர்கள் அத்துமீறி கேப்பிடல் ஹில் கட்டடத்துக்குள் நுழைந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அந்த கட்டடத்தின் பல அறைகளை அவர்கள் சூறையாடினர்.

ஆக்ஸிஜன் பையன் – கென்யா, 2021

Boy in mask attached to plant pot

பட மூலாதாரம், Environmental Photographer of the Year 2021

2021ஆம் ஆண்டின் நவம்பரில் சுற்றுச்சூழல் புகைப்படக் கலைஞரில் சிறந்த படைப்பாளிகள் அறிவிக்கப்பட்டனர். காலநிலை நடவடிக்கை பிரிவில் தேர்வான படம் ஒட்டுமொத்த உலகின் நிலையை விளக்கும் வகையில் கருதப்பட்டது.

ஒரு சிறாரின் படம், முககவசம் மற்றும் சுவாசக் கருவி வழியாக ஆக்ஸிஜன் தொட்டியைப் போல அவருக்கு அருகில் நிற்கும் ஒரு தொட்டியில் செடியுடன் இணைக்கப்பட்டவாறு எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் நைரோபியில் எடுக்கப்பட்டது.

ஓவியம், பிரான்ஸ்அக்டோபர் 2021

A renaissance painting being covered by firemen on ladders

பட மூலாதாரம், Getty Images

2021ஆம் ஆண்டு அக்டோபரில் பிரான்சின் போர்டியாக்ஸில் ஒரு ஒத்திகையின்போது செயின்ட்-ஆண்ட்ரே தேவாலயத்தில் உள்ள பல பொக்கிஷங்களில் ஒன்றைப் பாதுகாக்க பிரெஞ்சு தீயணைப்பு வீரர்கள் ஒரு தீயில்லாத போர்வையை உயர்த்தி கலைப்படைப்பை மறைக்க முற்பட்டது பதிவு செய்யப்பட்டது.

அவர்கள் மறைத்த ஓவியம் 17ஆம் நூற்றாண்டின் பிளெமிஷ் மக்கள் விரும்பத்தக்கதுடர் ஜேக்கப் ஜோர்டான்ஸால் உருவாக்கப்பட்டது, மேலும் தடிமனான இருளுக்கு எதிராக வினிகரில் நனைத்த கடற்பாசிகள் பொருத்தப்பட்ட நீண்ட சறுக்குகளால் குத்தப்பட்ட வேதனையுடன் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை அந்த படைப்பு சித்தரித்திருந்தது.

சிறார்கள், எத்தியோப்பியா – ஜூலை 2021

Two children standing under lone tree

பட மூலாதாரம், Getty Images

2021ஆம் ஆண்டு ஜூலை மாதம், எத்தியோப்பியாவின் கோண்டார் நகரின் வடகிழக்கில் உள்ள டபாட் கிராமத்திற்கு அருகில், எரிட்ரியன் அகதிகளுக்கான எதிர்கால முகாமில் ஒரு மரத்தின் கீழ் இரு சிறார்கள் நின்று புகைப்படம் எடுத்தனர். சூழ்ந்திருந்த மூடுபனியில் நின்றிருந்த அவர்கள் ஆதரவற்று யாருமற்ற பகுதியில் நிற்பதை பிரதிபலிப்பதாக இருந்தது.

சுகாதார ஊழியர்கள், இந்தியா – அக்டோபர் 2021

A nurse holding a vaccination vile while others stand behind to form the pose of the Goddess Durga

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியின் 100 கோடி டோஸ் செலுத்தப்பட்டதை குறிக்கும் வகையில், பெங்களூரில் உள்ள ராமையா மருத்துவமனையின் செவிலியர்கள் நான்கு பேர், இந்துக்கள் பரவலாக போற்றும் துர்கா தேவியின் (வலிமை மற்றும் வலிமையுடன் தொடர்புடைய) உருவத்தை பிரதிபலிக்கும் வகையில் புகைப்படத்துக்கு பாவனை கொடுத்தது பரவலாக ரசிக்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »