Press "Enter" to skip to content

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி: கியூபாவில் 2 வயது முதல் தொடங்கிய திட்டம் – மற்ற நாடுகளில் என்ன நிலவரம்?

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி மருந்து செலுத்தும் திட்டம் இன்று தொடங்கியது. இதன்படி தமிழ்நாட்டிலும் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

ஆனால், இந்தியாவுக்கு முன்பே வேறு சில நாடுகள் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி விட்டன. அவை குறித்து இங்கே பார்க்கலாம்.

ஐரோப்பிய நாடுகள்

கடந்த மே மாதம் ஐரோப்பிய மருந்துகளுக்கான முகமைகள் ஃபைசர் தடுப்பு மருந்தை 12 – 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு வழங்கலாம் என்று ஒப்புதல் வழங்கியது.

அதன்படி வெவ்வேறு ஐரோப்பிய நாடுகளும் இந்த முடிவை செயல்படுத்த தொடங்கின

ஃபிரான்ஸில் 12 – 17 வயதுக்கு உட்பட்டவர்களில் 66 சதவீதம் பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பு மருந்து செலுத்தபப்ட்டுள்ளது. 52 சதவீதம் பேருக்கு இரு டோஸ் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

ஃபிரான்ஸில் 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் பொது போக்குவரத்து, கடைகள், அருங்காட்சியகம் மற்றும் பிற பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.

டென்மார்க் மற்றும் ஸ்பியினிலும் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஜெர்மனியில் டெல்டா திரிபு பரவத் தொடங்கியதிலிருந்து 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்படலாம் என அறிவிக்கப்பட்டது.

ஸ்வீடனை பொறுத்தவரை 12 – 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏதேனும் தீவிர மருத்துவ பிரச்னைகள் இருந்தால் மட்டுமே தடுப்பு மருந்து அனுமதி வழங்கப்படுகிறது.

செக் குடியரசில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து வழங்கப்படுகிறது.

பிரிட்டனில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. அங்கு 18க்கு உட்பட்டவர்களுக்கு ஃபைசர் – பயோஎன்டெக் தடுப்பு மருந்து வழங்கப்பட்டு வந்தது. பின் மாடர்னா தடுப்பு மருந்துக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

ஐரோப்பிய நாடுகளை தவிர்த்து நார்வேயில் 12 – 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து வழங்கப்படுகிறது.

தடுப்பு மருந்து

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவை பொறுத்தவரை 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஃபைசர் தடுப்பு மருந்து வழங்கபப்ட்டு வருகிறது. இதில் மூன்று வார இடைவெளியில் இருடோஸ் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் டெல்டா திரிபு அதிகரித்திருந்தபோதே, அங்கு 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.

சீனாவில் கொரோனா தடுப்பு மருந்தை செலுத்தும் இயக்கத்தை விரிவுப்படுத்தும் நோக்கிலும் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அடையும் நோக்கிலும் கடந்த அக்டோபர் மாதம் 3-11 வயது குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக குளோபல் டைம்ஸ் ஊடகம் தெரிவித்திருந்தது.

மத்திய கிழக்கில் பஹ்ரைனில் சினோஃபார்ம் தடுப்பு மருந்தை 3-11 வயது குழந்தைகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என ராயட்டர்ஸ் செய்தி முகமையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல், ஓமன் மற்றும் செளதி அரேபியாவில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஃபைசர் தடுப்பு மருந்து வழங்க ஒப்புக் கொள்ளப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஜிம்பாப்வே, அர்ஜென்டீனா, கோஸ்டா ரிக்கா, பிரேசில் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டு வருவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கியூபாவில் இரு வயது முதல் தடுப்பு மருந்து வழங்கும் பணி தொடங்குவதாக தி நியூயார்க் டைம்ஸ் தளத்தில் கடந்த செப்டம்பர் செய்தி வெளியாகியிருந்தது.

உலகிலேயே 2 வயது முதல் கொரோனா தடுப்பு மருந்து செலுத்த தொடங்கிய ஒரே நாடு கியூபாதான்.

இஸ்ரேலில் அதிகரித்து வரும் ஒமிக்ரான்

தடுப்பு மருந்து

பட மூலாதாரம், Reuters

உலகளவில் அதிகப்படியானவர்கள் தடுப்பு மருந்து செலுத்தி கொண்ட நாடாக இருக்கும் இஸ்ரேலில் தற்போது ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது.

ஏற்கெனவே அந்நாட்டில் நான்காம் டோஸ் செலுத்தும் பணி தொடங்கிவிட்டது.

இந்நிலையில் இஸ்ரேலில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் அந்த நாடு மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அடையக்கூடும் என உயர் சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இது நோய் தொற்றால் அல்ல தடுப்பு மருந்தால் ஏற்பட வேண்டும் என நச்மேன் ஆஷ் தெரிவித்துள்ளார்.

மந்தை நோய் எதிர்ப்பு சக்தி என்பது, நோயிலிருந்து பாதுகாக்கும் வகையில் போதுமான மக்களுக்கு தடுப்பு மருந்து செலுத்திவிடுவதோ அல்லது அந்த நோய்க்கு எதிரான ஆன்டிபாடிகள் மக்கள் மத்தியில் உருவாகியிருப்பதா ஆகும்.

இஸ்ரேலின் மக்கள்தொகை சுமார் ஒன்பது மில்லியன். இதில் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு இரு டோஸ் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுவிட்டது. இருப்பினும் மூன்றாம் டோஸ் பெறுவதற்கு தகுதியுடைய பலருக்கு மூன்றாம் டோஸ் கிடைக்க பெறவில்லை.

இந்நிலையில் மருத்துவ பாதிப்புகள் மற்றும் முதியோர் இல்லங்களில் உள்ள முதியோர்களுக்கு நான்காம் டோஸ் வழங்கப்படும் என இஸ்ரேல் அண்மையில் அறிவித்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »