Press "Enter" to skip to content

இந்தியா – பாகிஸ்தான் இடையே சமய சுற்றுலா – உறவுகளை மேம்படுத்தும் முன்முயற்சியா இது?

  • வாத்சல்யா ராய்
  • பிபிசி செய்தியாளர்

பட மூலாதாரம், ASIF HASSAN/AFP VIA GETTY IMAGES

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்கும் வகையில், ஒவ்வொரு மாதமும் சமய வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் திட்டத்தை பாகிஸ்தான் இந்து கவுன்சில் மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணியில் இரு நாட்டு அரசுகளும் ஒத்துழைப்பதாக அந்த கவுன்சில் கூறுகிறது.

இந்தியா, அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த இந்து பக்தர்கள் புத்தாண்டை முன்னிட்டு பாகிஸ்தானில் புதுப்பிக்கப்பட்ட 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பரம்ஹன்ஸ் ஜி மகராஜ் கோயிலில் பிரார்த்தனை செய்தனர்.

இந்த இந்து யாத்ரீகர்கள் குழுவில் மொத்தம் 173 பக்தர்கள் உள்ளனர். இவர்களில் ஐந்து முதல் ஆறு பேர் அமெரிக்கர்கள். சிலர் ஸ்பெயினிலிருந்தும் சிலர் துபாயிலிருந்து வந்துள்ளனர். அதில் சுமார் 160 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இந்த பக்தர்கள் பாகிஸ்தானில் உள்ள இந்து மற்றும் சீக்கிய வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வருகின்றனர்.

இது ஒரு புதிய முன்முயற்சி என்றும், இதன் மூலம் 74 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் மேம்படும் என எதிர்பார்க்கலாம் என்றும் பாகிஸ்தான் இந்து கவுன்சில் தலைவர் மருத்துவர் ரமேஷ் குமார் வாக்வானி கூறுகிறார். தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான மருத்துவர் ரமேஷ், 2002 முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார்.

“இப்போது தொடங்கப்பட்டுள்ள இந்த அன்பை, முன்னோக்கி கொண்டுசென்று நான் இந்தியாவில் குவாஜா நிஜாமுதீன் மற்றும் அஜ்மீர் ஷெரீஃபுக்கு பக்தர்களை அழைத்துச்செல்வேன். ஒவ்வொரு மாதமும் இதுபோன்ற சமய யாத்திரைக்கு ஏற்பாடு செய்ய திட்டம் உள்ளது. இதனால் இரு நாட்டு மக்களும் நெருங்கி வருவார்கள். இரு தரப்பிலும் உள்ள வெறுப்புணர்சியை முடிவுக்கு கொண்டுவர இது உதவும் என்று நான் நம்புகிறேன்,”என்று அவர் தெரிவித்தார்.

இது பாகிஸ்தான் இந்து கவுன்சிலின் முயற்சி மட்டுமா அல்லது இரு நாட்டு அரசுகளுக்கும் இதில் பங்கு உள்ளதா? என்று கேட்டதற்கு, “இதை பாகிஸ்தான் இந்து கவுன்சிலின் முன்முயற்சி என்று நீங்கள் அழைக்கலாம்,” என்றார்.

கவுன்சில் இதற்காக பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. மேலும் இப்போது ஏர் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்யப் போகிறது,” என்று மருத்துவர் ரமேஷ் குறிப்பிட்டார்.

“இரு நாட்டு அரசுகளின் உதவி இல்லாமல் இது சாத்தியமில்லை. இதற்கு அரசுகள் அனுமதி அளித்துள்ளன. அதனால்தான் மக்களுக்கு விசா கிடைக்கிறது. பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.”

டேரி கிராமத்தின் ஸ்ரீ பரம்ஹன்ஸ் ஜி மகாராஜ் கோயில்

சபையின் இந்த முயற்சியின் கீழ், 173 யாத்ரீகர்கள் அடங்கிய குழு பாகிஸ்தானில் உள்ள இந்து மற்றும் சீக்கிய வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்றுகொண்டிருக்கிறது. பயணத்தின் ஆரம்பத்தில் டேரி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ பரம்ஹன்ஸ் ஜி மகராஜ் கோயிலுக்கு இந்தக்குழு சென்றது. கோவிலில் சந்த் ஸ்ரீ பரம்ஹன்ஸ் ஜி மகராஜின் சமாதி உள்ளது.

இந்து பக்தர்களின் இந்தக்குழு, நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகரின் அழைப்பின் பேரில் திங்கட்கிழமை அவரை சந்திப்பதோடுகூடவே, தலைமை நீதிபதியையும் சந்திக்கவுள்ளது.

மத்திய பிரதேசத்தின் குவாலியரில் இருந்து சமய சுற்றுலாவுக்காக பாகிஸ்தானுக்குச் சென்ற மகாத்மா பரம் நித்யானந்தா என்ற பக்தர், இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளார்.

“நாங்கள் டேரி சாஹிப்பை பார்த்துவிட்டுத் திரும்புகிறோம். எல்லா இடங்களிலும் எங்களுக்கு நல்ல வசதி செய்யப்பட்டது. பாகிஸ்தான் ஏர்லைன்ஸ், விமான நிலையத்தில் நல்ல ஏற்பாடுகளைச் செய்திருந்தது. காவல்துறையும் உதவி செய்தது,”என்று அவர் குறிப்பிட்டார்.

2020 டிசம்பர் மாதம் அடிப்படைவாத இஸ்லாமிய கட்சியைச் சேர்ந்த ஒரு கும்பல், கைபர் பக்தூங்வா மாகாணத்தின் கரக் மாவட்டத்தில் உள்ள டேரி கிராமத்தில் இருந்த கோயிலை சூறையாடித் தீ வைத்தது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் கடும் கண்டனத்திற்கு உள்ளானது.

“பாகிஸ்தான் அரசு எங்களுக்கு ஆதரவாக இருந்தது. இப்போது கோயில் முழுமையாக புனரமைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் முயற்சியால், இங்கு எல்லா வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அதனால்தான் டேரி கோவிலில் இருந்து சமய சுற்றுலாவைத் தொடங்கினோம்,” என்று மருத்துவர் ரமேஷ் கூறினார்.

இந்த கோவில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள கரக் மாவட்டத்தில் உள்ள டேரி கிராமத்தில் புகழ்பெற்ற இந்து துறவி ஸ்ரீ பரம் ஹன்ஸ் ஜி மகராஜின் வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த சமாதியில் அமைந்துள்ளது.

கடந்த ஆண்டு, பாகிஸ்தான் தலைமை நீதிபதி குல்சார் அகமது, தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக கோயிலுக்கு வந்திருந்தார். ஒவ்வொரு மனிதனுக்கும் தன் மதத்தைப் பாதுகாக்க உரிமை உண்டு என்று அப்போது அவர் தெரிவித்தார்.

2017ஆம் ஆண்டு, பாகிஸ்தான் தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் தலைமையிலான மூன்று பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, கடாஸ்ராஜ் கோயிலின் மோசமான நிலை குறித்து தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது.

கடாஸ்ராஜ் கோவிலில் ராமர், சிவன், அனுமன் சிலைகள் இல்லாததற்கு அதிருப்தி தெரிவித்த நீதிமன்றப்பிரிவு, இந்த விஷயத்தில் நிர்வாகம் அலட்சியம் காட்டுவது ஏன் என்று கேட்டுள்ளது.

உலகம் முழுவதிலுமிருந்து இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கோயிலுக்கு வருகிறார்கள், கோயிலில் சிலைகள் இல்லை என்றால், பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மை இந்துக்களைப் பற்றி அவர்களுக்கு என்ன அபிப்ராயம் ஏற்படும் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

தெற்காசியாவின் முக்கியத் தலைவர்கள்

பட மூலாதாரம், PIB

இந்த கோயில் ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆனால் அது இடிக்கப்பட்ட பிறகு இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி அகமது, கோயிலை சரிசெய்ய உத்தரவிட்டார்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்தியா – பாகிஸ்தான் இடையேயான உறவில் பதற்றம் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட நின்றுபோயுள்ளது.

இருப்பினும், சமீபத்தில் இரு நாட்டு அரசுகளும் சீக்கிய யாத்ரீகர்களுக்காக கர்தார்பூர் வழித்தடத்தை திறந்துவிட்டன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தப்பாதை திறக்கப்பட்ட பிறகு, பல இந்திய சீக்கியர்கள் குருத்வாரா தர்பார் சாஹிப் சென்று வழிபட்டனர்.

கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக மூடப்பட்ட கர்தார்பூர் பாதை, 20 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »