Press "Enter" to skip to content

“கொரோனா பேரிடர் இன்னும் முடிவை நெருங்கக்கூட இல்லை ” – எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்

பட மூலாதாரம், Getty Images

உலக சுகாதார அமைப்பின் தலைவர் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று இன்னும் முடிவை “நெருங்கக் கூட இல்லை” என்று உலகத் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முனைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயசஸ், புதிதாக ஆதிக்கம் செலுத்தும் ஒமிக்ரான் திரிபு லேசனாது மற்றும் வைரஸால் ஏற்படும் அச்சுறுத்தலை நீக்கியுள்ளது என்ற அனுமானத்திற்கு எதிராக எச்சரித்தார்.

சில ஐரோப்பிய நாடுகளில் புதிய நோயாளிகள் அதிகமாகப் பதிவானதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பிரான்சில் செவ்வாய்க் கிழமையன்று கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் புதிதாக நோய்த்தொற்றுக்கு ஆளாகியதாக தரவுகள் காட்டுகின்றன.

ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது, மருத்துவர் டெட்ரோஸ் செய்தியாளர்களிடம், ஒமிக்ரான் திரிபு கடந்த வாரத்தில் உலகம் முழுவதும் 1.8 கோடி பேருக்குப் புதிதாகத் தொற்று ஏற்பட வழிவகுத்தது.

சராசரியாக, இந்தத் திரிபு குறைந்த தீவிர்த் தன்மை கொண்டதாக நிரூபிக்கப்பட்டிருந்தாலும், “இதுவொரு லேசான நோய் என்ற விவரிப்பு தவறாக வழிநடத்துகிறது,” என்று அவர் கூறினார்.

“ஒமிக்ரான் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கும் உயிரிழப்புகளுக்கும் காரணமாகிறது. மேலும், கடுமை குறைவாகவுள்ள பாதிப்புகளும்கூட சுகாதார வசதிகளை மூழ்கடிக்கின்றன.

உலகளவில் ஒமிக்ரானின் தொற்றுகளின் எண்ணிக்கை நம்பமுடியாத அளவு அதிகரித்து வருகிறது. மேலும் புதிய கொரோனா திரிபுகள் உண்டாகவாய்ப்புள்ளது. அதனால்தான் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு முக்கியமானதாக உள்ளது,” என்று அவர் உலக தலைவர்களை எச்சரித்தார்.

மேலும், “தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள விகிதம் குறைவாக உள்ள பல நாடுகளைப் பற்றி நான் குறிப்பாகக் கவலைப்படுகிறேன். ஏனெனில், மக்கள் தடுப்பூசி போடாததால், கடுமையான நோய் மற்றும் உயிரிழப்பு அபாயம், பல மடங்கு அதிகமாக உள்ளது,” என்று அவர் கூறினார்.

உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலை நடவடிக்கைகளுக்கான பிரிவின் இயக்குநர் மருத்துவர் மைக் ரயான், ”ஒமிக்ரானின் பரவல் அதிகரிப்பது, மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுக்கும். குறிப்பாக குறைவான மக்களுக்கே தடுப்பூசி போட்டுள்ள நாடுகளில் இது அதிகமாக இருக்கும்,” என்று எச்சரித்தார்.

ஐரோப்பா முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா

புதிய ஒமிக்ரான் திரிபு பரவுவதால் ஐரோப்பா முழுவதும் புதிய கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுகள் அதிகரித்து வருகின்றன.

ஒமிக்ரான் திரிபு பரவல்

பட மூலாதாரம், Getty Images

டென்மார்க்கில், செவ்வாய்க்கிழமை அன்று 33,493 பேர் கோவிட்-19 தொற்றுக்குப் பாதிக்கப்பட்டனர். அதேநேரத்தில் இத்தாலியில் சுகாதார அதிகாரிகள் 228,179 பேருக்கு தொற்று பாதிப்பு உள்ளதாகப் பதிவு செய்துள்ளனர். இதற்கு முந்தைய நாளின் எண்ணிக்கை, 83,403 ஆக இருந்தது.

இதற்கிடையில், ஃபிரான்ஸ் செவ்வாய்க்கிழமை 464,769 பேருக்கு நோய்த்தொற்று இருப்பதைப் பதிவு செய்தது. திங்கள் கிழமையன்று, 102,144 பேருக்கு கோவிட் இருந்தது. ஒரே நாளில் நான்கு மடங்கு அதிகமாகத் தொற்றுப் பரவல் நிகழ்ந்துள்ளது. நோய்த்தொற்றுகள் இப்போது வாராந்திர சராசரியாக ஒரு நாளைக்கு 3,00,000 என்ற எண்ணிக்கையைக் கடந்துள்ளன.

சமீபத்திய எழுச்சி மிகுந்த பரவலுக்கு மத்தியில், பிரெஞ்சு அமைச்சர்கள் ஆசிரியர் சங்கங்களோடு ஒரு சச்சரவை எதிர்கொள்கின்றனர். அவர்கள் அரசின் கோவிட் சோதனை மற்றும் தனிமைப்படுத்தல் நெறிமுறைகளை எதிர்த்து இந்த வாரம் இரண்டவது பெரிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த நெறிமுறைகள் வகுப்புகளைக் கடுமையாக சீர்குலைப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.

நாட்டின் பாதி ஆரம்பப் பள்ளிகள் மூடப்படுவதற்குக் காரணமாக இருந்த, கடந்த வாரத்தின் ஒரு நாள் வெளிநடப்பைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வகுப்பு இடையூறுகள் சமாளிக்க முடியாததாகிவிட்டதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். பல பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு சிரமப்படுகின்றனர் மற்றும் மாணவர்கள் சோதனைகளுக்ககக் காத்திருக்கும்போது, பெற்றோர் மருந்தகங்களுக்கு வெளியெ நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

ஃபிரான்ஸ் செவ்வாய்க்கிழமை 464,769 பேருக்கு நோய்த்தொற்று இருப்பதாகப் பதிவு செய்தது.

பட மூலாதாரம், கோவிட் 19 பரவல்

ஏற்கெனவே உச்சத்தை எட்டியிருக்கலாம்

சில ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் அலை ஏற்கெனவே உச்சத்தை எட்டியிருக்கலாம் என்பதற்கான சில ஆரம்ப அறிகுறிகள் உள்ளன.

அயர்லாந்தில் சமீபத்திய நாட்களில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளன. சுகாதாரத் துறை அமைச்சர் ஸ்டீஃபன் டோனெல்லி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் மாத இறுதிக்குள் தளர்த்தப்படலாம் என்று மாநில ஒளிபரப்பாளரான ஆர்.டி.இ-யிடம் கூறினார்.

இரண்டரை மாதங்களுக்கு முன்பு ஒமிக்ரான் அலை தொடங்கியதில் இருந்து புதிய நோய்த்தொற்றுகள் முதன்முறையாக வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன என்று ஸ்பெயின் அரசின் தகவல்கள் காட்டுகின்றன. இருப்பினும் வல்லுநர்கள் தரவை அதிகமாகப் படிப்பது குறித்து எச்சரித்தனர்.

இரண்டரை மாதங்களுக்கு முன்பு ஓமிக்ரான் அலை தொடங்கியதில் இருந்து புதிய நோய்த்தொற்றுகள் முதன்முறையாக வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன என்று ஸ்பெயினின் அரசாங்க தகவல்கள் காட்டுகின்றன – இருப்பினும் தரவுகளுக்கு உள்ளேயே அதிகமாகக் கவனம் செலுத்துவது குறித்து வல்லுநர்கள் எச்சரித்தனர்.

இங்கிலாந்தில், தினசரி நோய்த்தொற்றுகள் குறைந்து வருவதால், அரசாங்க அமைச்சர்கள் புதன்கிழமை கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கட்டுப்பாடுகளை மதிப்பாய்வு செய்யவுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »