Press "Enter" to skip to content

இந்தியாவில் மது விருந்து, போதை, பணம், மிரட்டல்: ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் பிரெண்டன் டெய்லர்

இன்றைய நாளிதழ்கள் சிலவற்றிலும் மற்றும் அவற்றின் இணையதள பக்கங்களில் இன்று வெளியான முக்கிய செய்திகளின் சுருக்கத்தை இங்கே வழங்குகிறோம்.

தன்னை சூதாட்ட வலையில் சிக்கவைக்க இந்தியாவில் நடந்த சம்பவத்தை ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிரெண்டன் டெய்லர் விவரித்துள்ளது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று இந்தி தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த நாளிதழ் செய்தியில், ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரெண்டன் டெய்லர். இவர் கடந்த ஆண்டு செப்டம்பரில் தனது ஓய்வை அறிவித்தார். பிரெண்டன் டெய்லர் வெளியிட்டுள்ள அறிக்கை ஜிம்பாப்வே மட்டுமல்லாமல், இந்திய கிரிக்கெட் உலகத்தையும் சற்று அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

இந்திய பயணத்தின்போது இந்திய தொழிலதிபர் ஒருவரால் அவருக்கு ஏற்பட்ட சங்கடமான நிகழ்வைதான் அந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது. அதில், “இரண்டு வருடங்களுக்கும் மேலாக நான் ஒரு சுமையைச் சுமந்து வருகிறேன். இது கடந்த சில காலங்களாக மனரீதியாக என்னை கஷ்டப்படுத்தியது. சமீபத்தில்தான் இந்தக் கதையை நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தேன். அந்த வகையில் இப்போது பொதுமக்களுக்கும் பகிர்ந்துகொள்கிறேன்.

அக்டோபர் 2019 பிற்பகுதியில் இந்திய தொழிலதிபர் ஒருவர் அணுகி, ஜிம்பாப்வேயில் டி20 போட்டிகள் நடத்துவதற்கான ஸ்பான்சர்ஷிப் குறித்து விவாதிக்க என்னை இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தார். இந்த விவாதத்துக்காக எனக்கு ரூ.15 லட்சம் வரை தரப்படும் என்றார்.

சர்வதேச போட்டிகளில் ‘ஸ்பாட் பிக்சிங்’ செய்ய வேண்டும் என்றும், அதற்கு சம்மதிக்காவிட்டால் அந்த காணொளியை பொதுவெளியில் வெளியிடுவோம் என்று அச்சுறுத்தினார்கள். அந்த ஆறு பேரின் மிரட்டலால் என் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என பயந்து வேறுவழியில்லாமல், அவர்கள் சொன்னதற்கு சம்மதம் தெரிவித்தேன். எனக்கு 15,000 டாலர்கள் கொடுத்தார்கள். இந்த தொகை ஸ்பாட் பிக்சிங்கிற்கான முன்தொகை என்றும் வேலை முடிந்ததும் கூடுதலாக 20,000 டாலர்கள் தரப்படும் என்றார்கள்.

இந்த தருணங்களில் அந்த தொழிலதிபர் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்கத் தொடங்கினார். ஆனால் நான் கொடுக்கவில்லை. இந்தக் குற்றம் தொடர்பாக ஐ.சி.சி.யிடம் நான்கு மாதங்கள் கழித்து புகார் தெரிவித்தேன். நான்கு மாதம் என்பது மிக நீண்ட தாமதம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஐசிசியிடம் புகார் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தியற்கு காரணம் என் குடும்பத்தின் பாதுகாப்பும் நலனும்தான். அதில் நம்பிக்கை ஏற்பட்ட பின்னரே ஐசிசியை அணுகினேன்.

தனது தவறை வெளிப்படையாக பிரெண்டன் டெய்லர் ஒப்புக்கொண்டது அவருக்கு பாராட்டுகளை தேடித் தந்துள்ளது. அதேபோல் சர்வதேச வீரர்கள் பலர் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். இவ்வாறு தி இந்தி தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா இடையூறுகளில் இருந்து சிறப்பாக மீண்டுள்ள இந்திய பொருளாதாரம்

பொருளாதார நிபுணர்

பட மூலாதாரம், DailyThanthi

கொரோனா இடையூறுகளில் இருந்து இந்திய பொருளாதாரம் சிறப்பாக மீண்டுள்ளது என பொருளாதார நிபுணர் அரவிந்த் பனகரியா தெரிவித்துள்ளதாக தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பெருந்தொற்றுக்கு மத்தியில் இந்திய பொருளாதாரத்தின் நிலை குறித்து பிரபல பொருளாதார நிபுணரும், நிதி ஆயோக்கின் முன்னாள் துணைத்தலைவரும், அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக பொருளாதார துறை பேராசிரியரான அரவிந்த் பனகரியா கூறியதாவது:-

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பெருந்தொற்றால் தூண்டப்பட்ட இடையூறுகளில் இருந்து இந்திய பொருளாதாரம் சிறப்பாக மீண்டுள்ளது. இந்த மீட்பு நீடித்து 7 முதல் 8 சதவீத வளர்ச்சி விகிதம் மீட்டெடுக்கப்படும். 2022-23 நிதி ஆண்டில் நிதி பற்றாக்குறையை அரை முதல் ஒரு சதவீத அளவுக்கு மத்திய அரசு குறைக்க வேண்டும்.

இந்திய பொருளாதாரம் கொரோனாவுக்கு முந்தைய மொத்த உள்நாட்டு உற்பத்தி நிலைமைக்கு திரும்பி உள்ளது. தனியார் நுகர்வு மட்டும், கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு கீழே உள்ளது.

தற்போது நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) அல்லது தடுப்பசியின் பல்வேறு மாறுபாடுகளால் கடந்த கால நோய்த்தொற்றுகள் காரணமாக மக்கள்தொகையில் பெரும்பகுதியினர் தற்போது நோய் எதிர்ப்பு பொருளை பெற்றிருக்கின்றனர்; இதனால் தொற்று நோய் உள்ளூர் கட்டத்தில் நுழைவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது என்பது தொற்றுநோயியல் நிபுணர்கள் மத்தியில் எழுந்துள்ள கருத்து ஆகும். இது உண்மையாக நடந்தால் பொருளாதார மீட்பு நிலைத்திருக்கும். 7 முதல் 8 சதவீத வளர்ச்சி சாத்தியப்படும் என்று பனகரியா கூறியுள்ளதாக தெரிவிக்கிறது தினத் தந்தி.

வாக்களிப்பதைக் கட்டாயமாக்க 86 % இந்தியர்கள் விருப்பம்: ஆய்வில் தகவல்

வாக்காளர்

பட மூலாதாரம், Dinamani

12வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில் வாக்களிப்பதை கட்டாயமாக்க 86 விழுக்காடு இந்தியர்கள் விரும்புவது தெரியவந்துள்ளது என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் 4 லட்சம் பேரிடம் பப்ளிக் ஆப் என்கிற சமூக வலைதளம் ஒரு ஆய்வு நடத்தியது. இதன்படி, மொத்தம் 80 சதவீதம் பேர் தற்போதைய வாக்களிப்பு முறையில் நம்பிக்கை தெரிவித்தனர்.

வாக்களிப்பது என்பது சமூக வளர்ச்சிக்கு இந்திய குடிமக்களின் முக்கிய பங்களிப்பாகும். வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டுமா? என்கிற கேள்விக்கு 86 சதவீதம் பேர் ஆம் என்று பதிலளித்தனர் என்கிறது இந்த ஆய்வு.

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 60 சதவீதம் பேர் 30 வயதிற்கு உட்பட்டவர்கள். எதை அடிப்படையாக வைத்து வாக்களிப்பீர்கள் என்கிற கேள்விக்கு, களத்தில் உள்ள வேட்பாளர் கடந்த முறை எப்படி செயல்பட்டார் என்பதை வைத்து என்று 34 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். அனைத்து வேட்பாளர்களையும் விரிவாக ஆராய்ந்து அதனடிப்படையில் வாக்களிப்போம் என்று 31 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

மக்கள் வாக்களிக்க தவறுவது ஏன் என்று இந்த ஆய்வில் கேட்கப்பட்டது. இதற்கு, வாக்குப் பதிவின் போது உள்ளூரில் இல்லாமல் இருப்பது, வேறு நகரில் இருப்பது போன்ற காரணங்கள் என்று 30.04 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். எனினும் 56.3 சதவீதம் பேர் வாக்களிக்க தவறியதே இல்லை என்று தெரிவித்துள்ளனர்.இந்த ஆய்வில் பங்கேற்ற 79.5சதவீதம் பேர் தங்களது வாழ் நாளில் ஒரு முறையாவது வாக்களித்திருப்பதாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட மானியத்தில் ஆண்டுக்கு ரூ. 20 ஆயிரம் கோடி உள்கட்டமைப்பு

100 நாள் வேலை

பட மூலாதாரம், Times of India

இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா அங்கில நாளிதழ் செய்தியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், கஷ்டத்தில் இருக்கும் ஏழைகளுக்கு நிவாரணம் அளிப்பதாகக் கருதலாம். ஆனால், அந்த ஏழை ‘பயனாளிகள்’ ஆண்டுக்கு ரூ, 20 ஆயிரம் கோடிக்கு மேல் உட்கட்டமைப்பை உருவாக்க மானியம் பெறுகிறார்கள் என்று அதன் ஊதிய மசோதாவின் ஆய்வு தெரிவிப்பதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், கோவிட் தாக்கத்தால் ஏழை மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தனர். இந்த காலகட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தின் கீழ் நல்ல ஊதியம் வழங்கியதன் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் ரூ. 42, 000 கோடியை அரசு சேமித்துள்ளது. . குறைந்த பட்ச ஊதியம் உத்தரபிரதேசத்தில் ரூ. 201 முதல் கர்நாடகத்தில் ரூ. 441 வரை உள்ளது. கிட்டத்தட்ட எந்த மாநிலத்திலும் குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படவில்லை.

வேலைவாய்ப்பு மையத்தின் இயக்குநர் பேராசிரியர் ரவி எஸ் ஸ்ரீவஸ்தவா கூறிகையில், இது அடிப்ப்டை கிராம உள்கட்டமைப்பை உருவாக சிறந்த திட்டமாகும். தொழிலாளர்கள் வருவாயை அதிகரிக்கும். இது ஒரு சமுகத் திட்டம். உரிய ஊதியத்தை வழங்குவதற்கான மொத்த செலவு அதிகம் இருக்கது என்கிறார் என டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »