Press "Enter" to skip to content

உக்ரேனை ரஷ்யா ஆக்கிரமித்தால் புதின் மீது தனிப்பட்ட பொருளாதார தடை- அமெரிக்கா

பட மூலாதாரம், RUSSIAN DEFENCE MINISTRY

உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்தால் விளாதிமிர் புதின் மீது தனிப்பட்ட தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

மேலும் ரஷ்யாவிற்கு தென்மேற்கு எல்லையில் அமர்ந்திருக்கும் உக்ரைன் நாட்டின் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்தால், அது உலகிற்கு “மிக மோசமான விளைவுகளை” ஏற்படுத்தும் என்று ஜோ பைடன் கூறினார்.

மேற்கத்திய தலைவர்கள் சிலர் கூறும்போது, ரஷ்யா உக்ரேன் மீது படையெடுப்பு நடத்தினால் அதற்கான தக்க பதிலடி கொடுப்போம் என்றும் அது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளனர். இந்நிலையிலேயே ஜோ பைடன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் அமெரிக்காவும் மற்ற நாடுகளும் “பதற்றங்களை அதிகரித்து வருவதாக” ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. மேலும், உக்ரேனுக்குள் நுழைய திட்டமிடுவதாக கூறுவதை மறுக்கிறது. ஆனால் ரஷ்யா 100,000 வீரர்களை எல்லைக்கு அருகாமையில் நிறுத்தியுள்ளது.

இது சம்பந்தமாக ரஷ்ய அதிபர் மாளிகை கூறுகையில், மேற்கத்திய இராணுவக் கூட்டணியான நேட்டோவை, பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக கருதுகிறோம். மேலும், இனிவரும் காலங்களில் உக்ரேன் உட்பட மற்ற கிழக்கு நாடுகளும் நேட்டோவுடன் இணையக் கூடாது என்று வேண்டுகிறோம் என்று கூறியுள்ளது .

இந்த விவகாரத்தில் அமெரிக்கா, நேட்டோவை விரிவுபடுத்துவது தற்போது உள்ள பிரச்னை அல்ல என்றும், ரஷ்ய ஆக்கிரமிப்பு தான் இப்பொழுதுள்ள பிரச்னை என்றும் கூறியுள்ளது.

ரஷ்ய படையெடுப்பு அச்சுறுத்தலால் உக்ரேன் தலைநகர் கிவ்வில் உள்ள மேற்கத்திய தூதரகங்கள் தங்கள் பணியாளர்களைத் திரும்ப வரச்செய்து வருகின்றன.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் மிகப்பெரிய ஆக்கிரமிப்பு

கடந்த செவ்வாயன்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த ஜோ பைடன் , உக்ரேன் மீது படையெடுப்பு ஏற்பட்டால் ரஷ்ய ஜனாதிபதி மீது தனிப்பட்ட முறையில் பொருளாதாரத் தடைகளை விதிபீர்களா? என்ற கேள்விக்கு, “ஆம்” என்று பதிலளித்தார்.

மேலும், உக்ரேனின் எல்லையைத் தாண்டி ஆக்கிரமிப்பு நடவடிக்கை என்று ஒன்று நடந்தால் அது “உலகளவில் ஒரு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்” மற்றும் “இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நடக்கக்கூடிய மிகப்பெரிய ஆக்கிரமிப்பு” அதுவாக இருக்கும் என்று அவர் கூறினார்.

ஜோ பைடன், அமெரிக்க அதிபர்

பட மூலாதாரம், Reuters

கடந்த காலங்களில் சிரியா ஜனாதிபதி பஷர் அல் ஆசாத், வெனிசுலாவின் நிக்கோலஸ் மதுரோ மற்றும் லிபிய முன்னாள் தலைவர் மும்மர் கடாபி உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்கள் மீது அமெரிக்கா தனிப்பட்ட முறையில் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இதில் தலைவர்களின் அந்தந்த நாடுகளுடன் தொடர்புடைய சொத்து மற்றும் பரிவர்த்தனைகளைத் தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா படையெடுத்தால், கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோவின் இருப்பை வலுப்படுத்த கடமைப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார். ஆனால் உக்ரேனுக்கு அமெரிக்க படைகளை அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என்று அவர் மீண்டும் கூறினார்.

கடந்த புதன்கிழமை இங்கிலாந்து வெளியுறவு மந்திரி லிஸ் ட்ரஸ் கே பிபிசியின் டுடே நிகழ்ச்சியில் பேசிய போது, ரஷ்ய தலைவருக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் விதிப்பது சம்பந்தமாக நாங்கள் எதுவும் முடிவு எடுக்கவில்லை என்றும், வணிக ரீதியான தடைகளை மக்கள், வங்கி மற்றும் வணிகம் மீது போடுவோம் என்றும் கூறினார்.

“இங்கிலாந்தின் கூட்டணி நாடுகளும் இதனை செய்ய உள்ளன. இதன்மூலம் ரஷ்யா உக்ரைனுக்குள் நுழைவதை தடுக்க நேரிடும். இதில் நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவதை புதினுக்கு காட்டுவோம்” என்றார்.

ஜோ பைடனின் கருத்துக்கு ரஷ்யா நாடாளுமன்றத்தின் சபாநாயகரான வியாசெஸ்லாவ் வோலோடின், சமூக ஊடகமான டெலிகிராமில் “இறுதியாக, அமெரிக்கத் தலைமை தனக்கு என்ன வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறியுள்ளது. வாஷிங்டன் அதற்கு விசுவாசமான ஒரு ரஷ்ய ஜனாதிபதியை விரும்புகிறது.” என்று பதிவிட்டுள்ளார்.

உக்ரைனை‌ ஆயுதங்கள் மற்றும் மேற்கத்திய ஆலோசகர்களால் நிரப்பியதற்கு, அமெரிக்காவும் நேட்டோவுமே காரணம் என்று அவர் மேலும் கூறினார்.

அமெரிக்கா ஏற்கனவே 8,500 போருக்குத் தயாரான படைவீரர்களை, நேட்டோ நட்பு நாடுகளை வலுப்படுத்த மற்றும் உதவ தயாராக வைத்துள்ளது என்றும் – இது “பெரும் கவலையை” ஏற்படுத்தியதாகவும்‌ ரஷ்யா கூறியது.

வாஷிங்டன், ரஷ்ய நட்பு நாடான பெலாரஸையும் எச்சரித்துள்ளது. பெலாரஸ், உக்ரேன் ஆக்கிரமிப்பிற்கு உதவினால் அதற்கு தக்க பதிலடியை எதிர்கொள்ள நேரிடும் என்று கூறியுள்ளது.

முன்னறிவிப்பின்றி போடப்படும் பொருளாதாரத் தடைகள்

உக்ரேனில் நடந்து வரும் இந்தப் பிரச்னை சம்பந்தமாக நடந்த பேச்சுவார்த்தைகளின் போது, ​​ரஷ்யா மீது படையெடுக்கும் பட்சத்தில் அதற்கு எதிராக “முன்னெச்சரிக்கை இல்லாத” பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்த மேற்கத்திய நாடுகள் ஒப்புக்கொண்டன.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் செவ்வாயன்று, மேற்கத்திய நட்பு நாடுகள் எந்தவொரு ஊடுருவலுக்கும் “கடுமையான” பொருளாதாரத் தடைகளுடன் பதிலடி கொடுக்கும் என்று கூறினார். பிராந்தியத்தில் நேட்டோ நட்பு நாடுகளைப் பாதுகாக்க பிரிட்டன் படைவீரர்களை அனுப்பத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

ரஷ்யாவை ஸ்விஃப்ட் சர்வதேச பரிவர்த்தனை அமைப்பிலிருந்து தடைசெய்வது குறித்தும் பேசினார். அவ்வாறான நடவடிக்கையால், ஐரோப்பிய நாடுகளால் ரஷ்ய தயாரிப்புகளை பணம் கொடுத்து வாங்க முடியாத சூழ்நிலை உருவாகும் என்று ரஷ்ய உயர் அதிகாரிகள் கூறினர்.

இதற்கிடையில் மக்கள் விரும்பத்தக்கதுகோவுடன் பேச்சுவார்த்தை தொடரும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் கூறினார். அவர், வெள்ளிக்கிழமை

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் தொலைபேசியில் பேச உள்ளதாகவும், அப்போது உக்ரேனைப் பற்றிய ரஷ்யாவின் நோக்கங்கள் குறித்து தெளிவாக கேட்டு தெரிந்துகொள்ள போகப்போவதாகவும் தெரிவித்தார்.

Army

பட மூலாதாரம், Getty Images

மேலும், ஜோ பைடன் நிர்வாகம், ரஷ்யா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தை நிறுத்தினால், ஐரோப்பாவிற்கு ஏற்றுமதியை அதிகரிக்க உலகெங்கிலும் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகஸ்தர்களுடன் பேசிக் கொண்டிருப்பதாக கூறியதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

தற்போது ஐரோப்பிய ஒன்றியம் இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவில் மூன்றில் ஒரு பங்கை ரஷ்யா வழங்கி வருகிறது.

செவ்வாயன்று ஒரு தொலைக்காட்சி உரையில் உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பேசியபோது, “நடப்பது எல்லாம் நன்மைக்கு என்று நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால் அது அவ்வளவு எளிமையானது இல்லை.

ஆனால் இந்த இக்கட்டான சூழலில் இருந்து நாம் வெளிவருவோ‌ம் என்ற நம்பிக்கை உள்ளது ,” என்று அவர் கூறினார். “உங்கள் உடலை தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள், உங்கள் மூளையை பொய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள், உங்கள் இதயத்தை பயத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.

ரஷ்யா கடந்த 2014-இல் உக்ரேனின் பகுதியான கிரிமியாவை கைப்பற்றிய பின்னர் கிரிமியா ரஷ்யாவுடன் சேர ஒப்புக்கொண்டு வாக்களித்தது. இதனை மேற்கத்திய நாடுகள் மற்றும் உக்ரேன், சட்டவிரோதமான செயல் என்று கூறின.

ரஷ்யாவின் எல்லைக்கு அருகில் உள்ள கிழக்கு உக்ரேனின் பகுதிகளையும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்படுத்துகின்றனர். அந்த மோதலில் 14,000 உயிர்கள் பலியாகியுள்ளன. 2015 அமைதி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டாலும். அது முழுமையாக அமலாக்கப்படவில்லை என்கிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »