Press "Enter" to skip to content

அமெரிக்கா தனது இந்தோ- பிசிஃபிக் அறிக்கையில் இந்தியா குறித்து கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images

இந்தோ-பிசிஃபிக் பிராந்தியம் தொடர்பான தனது கொள்கை குறித்த அறிக்கையை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இந்தியா தற்போது முக்கியமான புவிசார் அரசியல் சவால்களால் சூழப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சீனா மற்றும் உண்மையான எல்லைகட்டுப்பாட்டுக் கோடு தொடர்பான அதன் நிலைப்பாடு காரணமாக இந்த சவால் ஏற்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தின் பிராந்தியம் குறித்த முதல் அறிக்கையாகும்.

இந்த அறிக்கையில், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அதிகரித்து வரும் ஒத்துழைப்பு வலியுறுத்தப்பட்டுள்ள அதே வேளையில், சீனா மீது கடுமையாக குறிவைக்கப்பட்டுள்ளது.

இந்தோ-பிசிஃபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் நிலையை வலுப்படுத்துவது பற்றியும், இந்தியாவின் வலுவான ஆதரவுடன் பிராந்திய தலைமை வகிப்பது பற்றியும் இந்த அறிக்கை பேசுகிறது.

இந்த அறிக்கையை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ட்வீட் செய்துள்ளார்.

“எங்கள் இந்தோ-பிசிஃபிக் உத்தியானது, ஒரு சுதந்திரமான, கட்டுப்பாடுகள் அற்ற, இணைக்கப்பட்ட, வளமான, பாதுகாப்பான மற்றும் மீள்திறன் கொண்ட ஒரு பிராந்தியத்திற்கான நெடுநோக்குபார்வையை கொண்டுள்ளது. இந்தோ-பிசிஃபிக் பகுதியில் உள்ள ஒரு நாடு என்ற நிலையில் அந்த தொலைநோக்கு பார்வையை நனவாக்க எங்கள் கூட்டாளிகளுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.”

“தெற்காசியாவில் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்காக அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயல்படுவோம் மற்றும் பிராந்திய குழுக்கள் மூலம் செயல்படும் செயல்தந்திர ஒத்துழைப்பை நாங்கள் தொடர்ந்து உருவாக்குவோம்,” என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

“அதே நேரத்தில் சுகாதாரம், விண்வெளி மற்றும் சைபர்ஸ்பேஸ் போன்ற புதிய பகுதிகளில் நாங்கள் ஒத்துழைக்கிறோம். எங்கள் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை ஆழமாக்குகிறோம் மற்றும் சுதந்திரமான,கட்டுப்பாடுகளற்ற இந்தோ-பிசிஃபிக் பிராந்தியத்தை பராமரிக்க பணியாற்றுகிறோம்.”

அமெரிக்கா தனது அறிக்கையில் இந்தியாவை ஒத்த எண்ணம் கொண்ட கூட்டாளி என்றும் கூறியுள்ளது.

குவாட் கூட்டத்தில் பிரதமர் மோதி

பட மூலாதாரம், குவாட் கூட்டம்

இந்தோ-பிசிஃபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் பங்கு

“தெற்காசியாவிலும், இந்தியப் பெருங்கடலிலும் ஒரே எண்ணம் கொண்ட கூட்டாளியாக இந்தியா இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். இந்தியா தென்கிழக்காசியாவுடன் தீவிரமாக தொடர்புகொண்டுள்ளது. அது குவாட் மற்றும் பிற பிராந்திய மன்றங்களுக்கு ஒரு உந்து சக்தி மற்றும் பிராந்திய வளர்ச்சிக்கான இஞ்சின் போன்றது,” என்று இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியா குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்கிறது என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி பிடிஐ செய்தி முகமையிடம் கூறினார்.

“இந்தியா முக்கியமான சவால்களை எதிர்கொண்டுள்ளது. மெய்யான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் சீனாவின் நடத்தை இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் கண்ணோட்டத்தில், மற்ற ஜனநாயக நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கான பல வாய்ப்புகளை நாங்கள் காண்கிறோம். மக்களின் கருத்துக்களை புரிந்துகொள்ளும் ஒரு நாட்டுடன் நாங்கள் பணியாற்றுகிறோம். இதன்மூலம் பிராந்தியத்தில் உள்ள அவசரப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் பணியாற்றமுடியும்,” என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

டிரம்ப் நிர்வாகத்திற்கும் பாராட்டு

அறிக்கையை வெளியிட்ட அந்த அதிகாரி, டிரம்ப் அரசு உட்பட முன்னாள் அமெரிக்க அரசுகள் இந்தோ-பிசிஃபிக் பிராந்தியத்தில் சிறப்பாகப் பணியாற்றியதாகக் கூறினார்.

குவாட் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்று வரும் வேளையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. குவாட் நாடுகளில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை அடங்கும். பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவது குறித்து இந்த நாடுகள் வெள்ளிக்கிழமை கவலை தெரிவித்தன.

இந்தோ-பிசிஃபிக் பிராந்தியத்தில் பொருளாதாரம், செயல்தந்திரம், ராணுவம் மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றின் பலம் காரணமாக சீனா செல்வாக்கு செலுத்துகிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உலகில் மிகவும் செல்வாக்கு மிக்க சக்தியாக இருக்க சீனா விரும்புகிறது.

சீனா மீதான தாக்குதல்

அமெரிக்கா மற்றும் இந்தியா

பட மூலாதாரம், Getty Images

சீனாவின் ஆக்கிரமிப்பு உலகம் முழுவதும் பரவியுள்ளதாகவும், ஆனால் இந்தோ-பிசிஃபிக் பகுதியில்தான் இது மிக அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா மீதான பொருளாதார அழுத்தம் முதல் இந்தியாவுடனான உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் மோதல் வரை, தைவான் மீதான அழுத்தம் மற்றும் கிழக்கு-தெற்கு சீனக் கடலில் உள்ள அண்டை நாடுகளை மிரட்டி அச்சுறுத்துவது வரை, சீனாவின் நடத்தையின் சுமைகளை எங்கள் நட்பு நாடுகளும், கூட்டாளிகளும் சந்திக்கவேண்டி உள்ளது.

சீனா, மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டங்களை மீறுகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடல் வழிப்போக்குவரத்து சுதந்திரம் மற்றும் இந்தோ-பிசிஃபிக் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை, செழுமை ஆகியவற்றைக் கொண்டுவரும் பிற கொள்கைகள் இதில் அடங்கும்.

ஷி மற்றும் மோடி

பட மூலாதாரம், Getty Images

“இந்தோ-பிசிஃபிக் பிராந்தியத்திற்கும் உலகிற்கும் நன்மை பயக்கக்கூடிய வகையில், கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை சீனா மாற்றுமா என்பதை அடுத்த பத்தாண்டுகளில் எங்கள் கூட்டு முயற்சிகள் தீர்மானிக்கும்,”என்று அறிக்கை மேலும் கூறுகிறது.

“அமெரிக்கா தனது முயற்சிகள் மூலம் நமது வலிமைக்கான அடித்தளத்தில் முதலீடு செய்கிறது. தன் கூட்டாளிகள் மற்றும் நட்பு நாடுகளுடன் தன் பார்வையை பொருத்த முயற்சிக்கிறது. மேலும் நமது பகிரப்பட்ட நலன்கள், எதிர்காலத்திற்கான பார்வை ஆகியவற்றைப் பாதுகாக்க சீனாவுடன் போட்டியிடுகிறது.”

“நாங்கள் சர்வதேச ஒழுங்கை வலுப்படுத்துவோம். பகிரப்பட்ட நன்மதிப்புகளின் அடிப்படையில் இதை செய்வோம். மேலும் 21 ஆம் நூற்றாண்டின் சவால்களை சந்திக்க அதை சீர்திருத்துவோம்” என்றும் அறிக்கை கூறுகிறது.

“எங்கள் நோக்கம் சீனாவை மாற்றுவது அல்ல. ஆனால் அது செயல்படும் செயல்தந்திர சூழலை வடிவமைப்பதாகும். கூடவே அமெரிக்காகவுக்கும், அதன் நட்பு நாடுகள் மற்றும் கூட்டாளிகளுக்கு சாதகமாக இருக்கும் விதமாக, உலகில் செல்வாக்கு சமநிலையை ஏற்படுத்த வேண்டும்.”

75 ஆண்டுகளாக, பிராந்திய அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை ஆதரிக்க அமெரிக்கா வலுவான மற்றும் நீடித்த பாதுகாப்பு இருப்பை பராமரித்து வருகிறது என்று அறிக்கை கூறுகிறது. அந்தப் பாத்திரத்தை விரிவுபடுத்தி நவீனப்படுத்துகிறோம். தனது நலன்களைப் பாதுகாப்பதற்கும், அமெரிக்கப் பகுதி மற்றும் அதன் நட்பு நாடுகள் மற்றும் பங்காளிகளுக்கு எதிரான ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்கும் தனது திறன்களை அதிகரித்து வருகிறது.

தலைவர்கள்

பட மூலாதாரம், NICOLAS DATICHE

ஒருங்கிணைந்த எதிர்ப்பை வலுவாக்குதல்

பிராந்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான ஒற்றுமையை அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒற்றுமையானது கூட்டாளிகள் மற்றும் பங்காளிகளுடன் ஆழமான ஒத்துழைப்பை உள்ளடக்கியது.

கூடவே தைவான் ஜலசந்தியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுதல். கொரிய மற்றும் ஜப்பானிய நட்பு நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், கொரிய தீபகற்பத்தின் முழுமையான அணுவாயுதமயமாக்கல் தடுப்பை முன்னெடுத்துச்செல்வது ஆகியவை இதில் அடங்கும்.

இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவதில் கடந்த நான்கு அமெரிக்க அரசுகள் முக்கிய பங்கு வகித்ததாக செய்தியாளர்களின் ஒரு கேள்விக்கு பதிலளித்த மூத்த அதிகாரி, கூறினார்.

“குவாடில் இந்தியாவின் பங்கு முக்கியமானது. பிராந்தியப் பிரச்சனைகளில் வெளிப்படையாகப் பேசும் திறன், அத்தியாவசியப்பொருட்களை வழங்குவதற்கு ஒன்றிணைந்து செயல்படுதல் மற்றும் ஒத்துழைப்பின் வழிகளை மேம்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும், ” என்று அந்த அதிகாரி கூறினார்.

ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளை ஒப்பிடும்போது பல வழிகளில் இந்தியா மிகவும் தனித்தன்மையான இடத்தில் உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

கற்றுக்கொண்டேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »