Press "Enter" to skip to content

யுக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதற்குச் சாத்தியமான வழித்தடங்கள் என்னென்ன?

  • டேவிட் பிரவுன்
  • பிபிசி நியூஸ்

யுக்ரேன் நாட்டை ஆக்கிரமிக்க தங்கள் நாடு திட்டமிடவில்லை என்று ரஷ்ய அரசு தெரிவிக்கிறது. ஆனால், ரஷ்யா ‘எந்த நேரத்திலும்’ தாக்கக்கூடும் என்று அமெரிக்கா கூறுகிறது.

“அவர்கள் தாக்கவுதற்கு பெரும் முன்னேற்பாடுகளுடன் தயாராக இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம்.” என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த செவ்வாய்கிழமையன்று கூறினார்.

“அவர்கள் தாக்கக்கூடிய சாத்தியமான வழித்தடங்கள் என்ன என்பது அனைவருக்கும் தெரிகிறது.”

யுக்ரேன் எல்லைக்கு அருகில் 1,90,000 துருப்புகள் வரை உள்ள நிலையில், தாக்குதல் நடத்த முடிவு செய்தால், ரஷ்யாவிற்கு பல வழிகள் உள்ளன என்பதை ராணுவ ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.

பெலாரூஸ் வழித்தடம்

யுக்ரேன் நாட்டில் முழுமையான ஆட்சி மாற்றம் செய்வதே ரஷ்யாவின் இலக்கு எனில், வடக்கில் இருந்து தாக்குதல் நடத்துவதற்கு அதிகமான வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்காவைச் சேர்ந்த சி.என்.ஏ (CNA) ஆராய்ச்சி அமைப்பைச் சேர்ந்த மைக்கேல் கோஃப்மேன் கூறுகிறார்.

யுக்ரேன்

பெலாரூஸில், கூட்டு ராணுவப் பயிற்சிகளுக்காக ரஷ்யா 30,000 துருப்புகளைக் கொண்டுள்ளன. இதில், இஸ்கந்தர் (Iskander) குறுகிய தூர ஏவுகணைகள், பல்வேறு ராக்கெட் லாஞ்சர்கள் (rocket launchers), சு-25 (Su 25) தாக்குதல் விமானங்கள் மற்றும் சு-35 (Su-35) போர் விமானங்கள் ஆகியவை அடங்கும். கிழக்கு பகுதியில், ரஷ்ய எல்லைக்கு சற்றே உள்ளே, “ரஷ்யாவின் 41 வது ராணுவம் முழுவதும் எல்லையில் காத்திருக்கிறது”, என்று கோஃப்மேன் கூறுகிறார்.

யுக்ரேன்

பட மூலாதாரம், RUSSIAN DEFENCE MINISTRY

பெலாரூஸிலிருந்து யுக்ரேன் தலைநகரமான கீவ் மீதான படையெடுப்பு, செர்னோபில் அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள வெளியேற்ற மண்டலத்தை தவிர்ப்பதாக இருக்கலாம்.

இது ரஷ்யாவின் தரப்பில், நோவி யுர்கோவிச்சி (Novye Yurkovichi) மற்றும் ட்ரொபோர்ட்னோவிலிருந்து (Troebortno) வரலாம் என்று சென்டர் ஃபோர் குழல்ட்டஜிக் அண்ட் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் என்ற மையத்தைச் சேர்ந்த சேத் ஜோன்ஸ் தெரிவிக்கிறார்.

க்ரைமியாவிலிருந்து வரும் பாதை

ரஷ்யா படையெடுப்பைத் தொடங்கினால், க்ரைமியாவில் இருந்து ஒரு தாக்குதலை ‘நிச்சயம் நடத்தும்’ என்று இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபோர் குழல்ட்டஜிக் ஸ்டடிஎஸ் என்ற அமைப்பைச் சேர்ந்த பென் பாரி கூறுகிறார்.

ஒரு வலுவான போரில் “ஒருங்கிணைந்த பீரங்கி தாக்குதலுடன் கூடிய சக்தி வாய்ந்த படைகளின் அணிவகுப்புடன் ” யுக்ரேன் உள்ளே நுழைய ரஷ்யா வேகமாக முயற்சி செய்யும் என்றும் அவர் கூறுகிறார். க்ரைமியாவிலிருந்து யுக்ரேனை நோக்கி ரஷ்யா முன்னேறி சென்றால், டினீப்பர் ஆற்றின் கிழக்கே பெரும் எண்ணிக்கையிலான யுக்ரேனிய துருப்புகளை நிறுத்தக்கூடும் என்று அவர் கூறுகிறார்.

க்ரைமியாவிலும், மேற்கு, கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளிலும், ரஷ்யப் படைகள் இருக்கும் நிலையில் , யுக்ரேனிய துருப்புகள் சுற்றி வளைக்கப்படும்.

வரைபடம்

ரஷ்ய துருப்புகள் மேற்கில் கேர்சன் (Kherson) மற்றும் ஒடேசா (Odesa) பகுதிகளையும், கிழக்கில் மேலிடோபால் (Melitopol) மற்றும் மரியுபால் (Mariupol) பகுதிகளையும் ஆக்கிரமிக்க முயற்சி செய்யலாம். இது க்ரைமியாவிற்கும் ரஷ்ய பிரிவினைவாதிகளால் கட்டுப்படுத்தப்படும் பகுதிகளுக்கும் இடையே ஒரு இணைப்பை உருவாக்கும்.

ரஷ்யாவின் படையெடுப்பு என்பது, தற்போது கருங்கடலில் (Black Sea) உள்ள அவர்களின் கடற்படைகளையும் ஈடுபடுத்துவதாக இருக்கலாம். இப்பகுதியில், படைவீரர்கள், ஆயுதம் தாங்கிய வாகனங்கள் மற்றும் முக்கிய போர் டேங்குகளை நிலைநிறுத்தும் திறன் கொண்டவை ரஷ்யாவின் கப்பல்கள்.

யுக்ரேன்

கிழக்கில் இருந்து நடத்தக்கூடிய தாக்குதல்

2014 ஆம் ஆண்டு ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் லுஹான்ஸ்க் (Luhansk) மற்றும் டொனெட்ஸ்க் (Donetsk) ஆகிய இரண்டு முக்கிய நிலபரப்புகளின் பெரும் பகுதிகளை கைப்பற்றினர்.

லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் ஆகிய பகுதிகளில், சுமார் 15,000 பிரிவினைவாதிகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. அவர்கள் ரஷ்யாவின் படையெடுப்புக்கு உதவக்கூடும்.

இந்த எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக யுக்ரேன் கூறுகிறது.

ரோஸ்டோவ் பகுதியில், ரஷ்யாவின் எல்லையில் நிரந்தரமாக சுமார் 10,000 துருப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் பல சமீபத்தில் வந்தடைந்துள்ளன.

டாங்க்

பட மூலாதாரம், Getty Images

ரஷ்யா கிழக்கிலிருந்து தாக்குதல் நடத்தினால் , அதன் துருப்புகள் க்ரைமியாவை நோக்கி படையெடுத்து, யுக்ரேனின் தென்கிழக்கு கடற்கரைப் பகுதியில் தரைப்பாலத்தை உருவாக்கலாம்.

யுக்ரேன்

அவர்கள் பெல்கோரோடில் (Belgorod) இருந்து கார்கிவ் (Kharkiv) மற்றும் கிரெமென்சுக் (Kremenchuk) வழியாக செல்லலாம். கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், ரஷ்ய மொழி பேசுபவர்களைப் பாதுகாக்க கிழக்கில் இருந்து ஒரு தாக்குதலை ரஷ்யா தொடங்கலாம்.

ஒரு வரம்புக்கு உட்பட்ட தாக்குதலிலும், நாட்டின் பிற பகுதிகளில் உள்ள வான் பாதுகாப்பு மற்றும் பிற முக்கிய ராணுவ படை உள்கட்டமைப்புகள் மீது குண்டுவீச்சுகள் நடக்கக்கூடும் என்று பாரி சுட்டிக்காட்டுகிறார்.

ரஷ்யாவின் எந்த ஒரு படையெடுப்பும், சைபர் தாக்குதல்கள், தவறான தகவல்களைப் பரப்புதல் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் ஆகியவற்றுடன் கூடிய, பல வழித்தடங்களின் இருந்தும் ஒரே சமயத்தில் தாக்குவதாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

யுக்ரேன் மீது குறிப்பிடத்தக்க சைபர் தாக்குதல்களை நடத்துவது ரஷ்யாவின் வரம்புக்கு உட்பட்ட வழியாக இருக்கலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள். இது எல்லையை ஆக்கிரமிக்காமல், யுக்ரேனின் முக்கிய கட்டமைப்பை முடக்கும் நோக்கமாக இருக்கலாம்.

இறுதியாக எந்தவொரு தாக்குதலின் சரியான விவரங்களும் ரஷ்ய அரசின் அரசியல் நோக்கங்களைப் பொறுத்தே இருக்கும் என்று கோஃப்மேன் கூறுகிறார். ஆனால், அவர்கள் அதை தெளிவாக வெளிப்படுத்தவில்லை.

கிராபிக்ஸ் – பிரினா ஷா மற்றும் ஜோ பார்தோலோமியூவ்

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »