Press "Enter" to skip to content

டெலிகிராம் செயலி பெண்களுக்கு ஆபத்தானதா?

டெலிகிராம் செயலி பெண்களுக்கு ஆபத்தானதா?

சாரா (பெயர் மாற்றபட்டுள்ளது) ஒரு நபருடன் அந்த புகைப்படத்தை பகிர்ந்தார். ஆனால் அது,18,000 பின்தொடர்பவர்கள் கொண்ட ஒரு டெலிகிராம் குழுவில் பகிரப்பட்டது. அவர்களுள் கியூபாவின் ஹாவனா நகரிலுள்ள அவரது பகுதிகளிலிருந்து இருப்பவர்கள். இப்போது வீதிகளில் இருக்கும் அடையாளம் தெரியாத நபர்கள் அவரது நிர்வாண புகைப்படத்தைப் பார்த்திருப்பார்கள் என்று அவர் அஞ்சுகிறார். “நான் வெளியில் செல்ல விரும்பவில்லை. என் நண்பர்களுடன் நான் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள விரும்பவில்லை. நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதுதான் உண்மை”. என்கிறார்.

இதில் அவர் மட்டும் இல்லை. டெலிகிராம் செயலியை பல மாதங்களாக ஆய்வு செய்ததில், குறைந்தப்பட்சம் 20 நாடுகளில், ரகசியமாகப் படப்பிடித்த அல்லது திருடப்பட்ட அல்லது தவறுதலாக வெளியான ஆயிரக்கணக்கான படங்களை,பல குழுக்கள் பகிர்வது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பிரச்னையை செயலி சரிசெய்கிறது என்பதற்கு மிக குறைந்த ஆதாரமே உள்ளது.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »