Press "Enter" to skip to content

ரஷ்யா மீது தடைகள் கடுமையானால் என்ன நடக்கும்? யாருக்கு பாதிப்பு?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ரஷ்யா மீது தடைகள் கடுமையானால் என்ன நடக்கும்? யாருக்கு பாதிப்பு?

கடந்த செவ்வாயன்று அமெரிக்கா ரஷ்யா மீது தடைகளை விதித்தது. இந்தத் தடைகள் ரஷ்ய ராணுவத்திற்கு நிதியுதவி செய்யும் மிக முக்கியமான இரண்டு வங்கிகள் மீது விதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த தடையால் அவை, இனி வருங்காலங்களில் அமெரிக்காவுடன் தொழில் செய்யவோ, அமெரிக்க நிதி கட்டமைப்பில் பரிவர்த்தனைகளில் ஈடுபடவோ முடியாது.

ரஷ்யா தனி நாடாக அங்கீகரித்துள்ள, கிளர்ச்சியாளர் வசமுள்ள பகுதிகளான லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் ஆகிய பகுதிகளில் இருப்போருடன் அமெரிக்கர்கள் வணிகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளுக்குத் தங்கள் ராணுவத்தினரை அனுப்ப அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. ஆனால் அவர்கள் இன்னும் அனுப்பப்படவில்லை என்று கூறுகிறது.

அமெரிக்கா தடை விதித்திருந்தாலும், சில அமெரிக்க சிநிறுவனங்கள் அந்த பகுதிகளில் இன்னும் செயல்பட்டு வருகின்றன. யுக்ரேன் மீது படை எடுத்தால் அமெரிக்கா மீண்டும் பல தடைகளை ரஷ்யா மீது பிறப்பிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.

பிரிட்டனும் ரஷ்யாவுக்கு எதிராக சில தடைகளை விதித்துள்ளது. “ரஷ்யா மீது முதல் பகுதி தடைகளாக பொருளாதாரத் தடைகளை ஐந்து ரஷ்ய வங்கிகள் மற்றும் மூன்று ரஷ்ய தொழிலதிபர்கள் மீது பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன. நிலைமை மோசமாகும்பட்சத்தில் தடைகள் கடுமையாக்கப்படும்”, என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

இது குறித்து விரிவாக அறிய இந்த காணொளியைப் பாருங்கள்.

ISOWTY

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »