Press "Enter" to skip to content

யுக்ரேன் மீதான ரஷ்ய ராணுவ நடவடிக்கை – கள படங்கள்

பட மூலாதாரம், Getty Images

மாஸ்கோ நேரப்படி, அதிகாலை 5.55 மணிக்கு யுக்ரேனுக்கு ராணுவ தாக்குதலை அறிவித்தார் புதின். சில நிமிடங்களுக்குப் பிறகு யுக்ரேனில் முதல் ஷெல் மற்றும் ஏவுகணைகள் ஏவப்பட்டன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கார்கிவ் அருகே உள்ள சுகுயேவில் உள்ள ராணுவ விமான நிலையத்தில் இருந்து கருப்பு புகை எழுகிறது

பட மூலாதாரம், Getty Images

யுக்ரேனின் ராணுவ கட்டமைப்பு மற்றும் எல்லை பாதுகாப்புப் பிரிவுகள் மீது ரஷ்யா முதலில் தாக்குதலை தொடங்கியதாக, யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கார்கிவ் அருகேயுள்ள சுகுயேவின் இராணுவ விமான நிலையத்தில் இருந்து எழும்பும் கருப்புப் புகையை வேதனையோடு பார்க்கும் பெண்

பட மூலாதாரம், Getty Images

கீஃப்-ல் உள்ள போரிஸ்பில் சர்வதேச விமானநிலையம் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்த விமான தளங்களுள் ஒன்று எனவும், கீஃப்,ட்னிப்ரோ, கார்கிஃப், மரியுபோல் ஆகிய பெருநகரங்களில் உள்ள ராணுவ தலைமையகங்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகள் ஆகியவற்றிலும் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக, யுக்ரேன் ராணுவம் தெரிவித்துள்ளது.

கீஃப்-ல் ஒரு தெருவில் உள்ள ஷெல் எச்சங்களை காவல்துறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்

பட மூலாதாரம், Getty Images

ரஷ்ய படைகளின் வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளதாக, யுக்ரேன் காவல்துறை தெரிவித்துள்ளது.

மக்கள், சிலர் பைகள் மற்றும் சூட்கேஸ்களை எடுத்துக்கொண்டு, கீஃப்-ல் உள்ள ஒரு மெட்ரோ நிலையத்திற்குச் செல்கின்றனர்

பட மூலாதாரம், Getty Images

யுக்ரேன் மீது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ராணுவ நடவடிக்கையை அறிவித்ததைத் தொடர்ந்து, யுக்ரேன் தலைநகர் கீஃபில் பெரும்பாலான மக்கள் பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) நிலையங்களில் அடைக்கலம் புகுந்தனர்.

கிழக்கு உக்ரைன் நகரமான சுகுவே மீது நடந்த குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு, ஓர் இடிந்த கட்டிடத்தில் இருந்து மக்கள் வெளியேறினர்

பட மூலாதாரம், Getty Images

பெரும்பாலானோர் பேருந்துகள் மூலம் நகரத்தை விட்டு வெளியேறுகின்றனர். மேலும், பலர் கார்களிலும் நகரத்தை விட்டு வெளியேற முயற்சித்ததால், பல கார்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

கீஃப்-ல் உள்ள ஒரு கல்லெண்ணெய் நிலையத்திற்கு மக்கள் வரிசையில் நிற்கிறார்கள்

பட மூலாதாரம், Getty Images

விமானப்படை தாக்குதல் நடைபெறுவதை உணர்த்தும் எச்சரிக்கை ஒலி கீஃப் முழுவதும் ஒலித்ததைத் தொடர்ந்து மக்கள் மெட்ரோ நிலையங்களில் அடைக்கலம் புகுந்தனர். பெரும்பாலானோர் தங்கள் உடைமைகளையும் கொண்டு வந்தனர்.

மக்கள் கிஃப்-ல் உள்ள வோக்சல்னா மெட்ரோ நிலையத்தில் தஞ்சம் அடைகின்றனர்

பட மூலாதாரம், Getty Images

ரஷ்யாவின் 5 விமானங்கள் மற்றும் ஒரு உலங்கூர்தியை சுட்டு வீழ்த்தியதாக, யுக்ரேன் ஆயுதப்படைகள் தெரிவித்துள்ளன. “அமைதியாக இருங்கள். யுக்ரேன் ஆதரவாளர்களை நம்புங்கள்” என, யுக்ரேன் ஆயுதப்படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிஃப்-ல் உள்ள ஒரு பண இயந்திரம் நிலையத்தில் பணம் எடுக்க மக்கள் வரிசையில் நிற்கின்றனர்

பட மூலாதாரம், Getty Images

ஆனால், ரஷ்ய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக யுக்ரேன் கூறுவதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் மறுத்துள்ளது.

தலைநகரில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் ஒரு பெண் சிலுவையை ஏந்தி பிரார்த்திக்கிறார்

பட மூலாதாரம், Getty Images

யுக்ரேன் நகரங்களை தாங்கள் தாக்கவில்லை என்றும், விமானத் தாக்குதல் தடுப்பு வசதிகள், துல்லியத் தாக்குதல் நடத்தும் விமானப் படை ஆயுதங்கள் போன்ற ராணுவ இலக்குகளையே தாக்குவதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிழக்கு யுக்ரேன் நகரமான சுகுவேயில் குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு மக்கள் ஓர் அழிக்கப்பட்ட கட்டிடத்திற்கு வெளியே நிற்கிறார்கள்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வியாழன் அன்று, ஜி7 தலைவர்களைச் சந்திப்பதாகவும் அமெரிக்காவும் நட்பு நாடுகளும் “ரஷ்யா மீது கடுமையான தடைகளை விதிக்கும்” என்றும் கூறிய அவர், “யுக்ரேனுக்கும் அதன் மக்களுக்கும் நாங்கள் தொடர்ந்து ஆதரவையும் உதவியையும் வழங்குவோம்,” என்று கூறினார்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »