Press "Enter" to skip to content

யுக்ரேன் – ரஷ்யா மோதல்: விளாதிமிர் புதினுக்கு ரஷ்யர்கள் பாராட்டா கண்டனமா? கள நிலவரம்

அதிர்ச்சி, அச்சம், திகைப்பு. யுக்ரேன் நிலவரம் குறித்து ரஷ்யாவின் தலைநகரம் மக்கள் விரும்பத்தக்கதுகோவில் இருக்கும் பலரின் மனநிலையை விவரிக்க பொருத்தமான வார்த்தைகள் தற்போதைக்கு இவைதான். அதேசமயம், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் நடவடிக்கை கண்டனத்துக்குரியதா அல்லது பாராட்டுக்குரியதா என்ற விவாதமும் இருக்கத்தான் செய்கிறது.

இதுகுறித்து ரஷ்ய தலைநகரில் மக்கள் மனநிலை என்ன என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

நன்கு உடையணிந்த இரண்டு இளைஞர்கள் பிபிசியுடன் பேசியபொழுது, அதில் ஒருவர், யுக்ரேனுக்குள் ரஷ்யா நுழைந்த விவகாரம் குறித்து எந்தவித சலனம் இல்லாமல் நிதானமாக இருந்தார்.

அவர் பேசியபோது, “ஆம். நாங்கள் ஏதோ கேள்விப்பட்டோம். ஆனால், முழுமையாக என்னவென்று தெரிந்துகொள்ள எங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை” என்று தெரிவித்தார்.

உடனடியாக அவரைக் குறுக்கிட்டுப் பேசிய அவரது நண்பர், முதலாமவர் பேசியதை உறுதி செய்தபடியே பேசினார். இவர் பேசியபோது, “நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். இதுவரை எங்கள் வாழ்நாளில் நாங்கள் போரைப் பார்த்ததே இல்லை. ஆனால், இப்போது பார்க்கவிருக்கிறோம்” என்றார். நீல நிற உடையணிந்திருந்த அந்த நபர் பார்ப்பதற்கு சற்று பரிதாபமாகவும் தெரிந்தார்.

தங்கள் நாடு செய்வது அவமானமாக உள்ளது என்ற நபர்

தொடர்ந்து பேசியவர், “என்ன செய்வதென்று தெளிவாகத் தெரியவில்லை என்பதோடு இது பயமாகவும் இருக்கிறது. அதற்கும் மேலாக எங்கள் நாடு செய்யும் செயலை எண்ணி அச்சமாகவும் அவமானமாகவும் கூட இருக்கிறது. என் நண்பர்கள் வட்டத்தில் தற்போதுள்ள மிகப் பொதுவான மனநிலை இதுதான்” என்று தெரிவித்தார்.

தற்போது ஆட்சியில் இருக்கும் ஆட்சியாளர்களுக்காக நான் வாக்களித்ததில்லை. என்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்தேன். தற்போது ரஷ்யாவில் இருக்கும் ஒரு நபர், செய்ய முடிந்தது போராடுவது தான். நான் போறாட்டங்க்களுக்குச் சென்றேன். ஆனால், இப்போது அங்கு எதுவும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. எல்லோருமே பெரும் பயத்தில் இருக்கிறார்கள்.

இந்த வரிசையில், ஒரு பெண் மிகவும் குழப்பத்தில் இருக்கிறார். இவர் போருக்கு எதிரான மனநிலை கொண்டவர் என்றபோதும், இந்தச் செய்திக்குப் பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறார் அவர். இவர் பேசும்போது “அரசியல்வாதிகள், அவர்களுக்கும் துன்பப்படும் சாதாரண மக்களுக்கும் இடையேயான விஷயங்களை தீர்த்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். இது என் குடும்பத்துக்கு எந்த விதத்திலும் நன்மை பயக்காது.” என்றார்.

மாஸ்கோவில் ஒரு பெண்

யுக்ரேனுக்குள் ரஷ்யா நுழைந்ததை எதிர்க்கும் மனநிலை உள்ள பலரும் மக்கள் விரும்பத்தக்கதுகோவின் மத்தியப் பகுதியில் இருக்கும் புஷ்கின் சதுக்கத்தில் போராடுவதற்காகக் கூடினர். காவல்துறை உள்ளே வந்து கலைந்து போக அறிவுறுத்தும் முன்பாக இங்கு சுமார் 200க்கும் மேற்பட்டோர் கூடியிருக்கக்கூடும் என்று தெரிவிக்கிறார் பிபிசி ரஷ்ய சேவையின் அனஸ்தேசியா கோல்பேவா.

இங்கு ‘போர் வேண்டாம்’ என்று குரலெழுப்பத் தொடங்கும் ஒவ்வொருவரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் ஒரு இளைஞர் இது தொடர்பாக பிபிசியிடம் பேசும்போது, “நான் நாள் முழுக்க அழுதுகொண்டிருந்தேன். யுக்ரேனில் மக்கள் மடிந்து கொண்டிருக்கின்றனர். குழந்தைகள் இறக்கின்றனர். எதிர்த்துப் போராடும் ஆண்களும் இறக்கின்றனர். அதன்பிறகு? நாங்கள். 19-20 வயதுள்ள நாங்கள் போராடுவதற்காக அங்கு அனுப்பப்பட வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

அவரிடம், உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் பேரணியில் கலந்து கொள்ள அச்சமாக இருக்கிறதா என்று கேட்டோம். அதற்கு பதிலளித்த அந்த மாணவர், “இல்லை. இது எங்களுக்கு அச்சமாக இல்லை. உண்மையில் யுக்ரேனிலும் அதன் எல்லையிலும் நடப்பவைதான் அச்சுறுத்தலாக இருக்கின்றன.”

ரஷ்யாவை ஆதரிக்கிறேன். புதினை அல்ல என்ற நபர்

இந்நிலையில், போராட்டங்களைக் கடந்து, யுக்ரேன் மற்றும் ரஷ்யா இரண்டையுமே ஆதரிப்பதாகக் கூறுகிறார் இந்த நேவி ஊதா நிறச் சட்டை அணிந்த நபர். அதேசமயம், ரஷ்யாவை ஆதரிப்பதாகக் கூறும் இந்த நபர், ரஷ்ய அதிபர் புதினை ஆதரிக்கவில்லை என்றும் சொல்கிறார். ரஷ்யாவில் அரிதினும் அரிதாகக் கேட்கப்படும் ஒன்றாக இருக்கிறது இந்த வெளிப்படையான கூற்று,

மேலும், “இது நம் தலைவர்களின் நில-அரசியல் வேட்கைகளை திருப்திப்படுத்துவதற்காக செய்யப்பட்டது” என்றும் பேசினார்.

உள்நுழைவு சரிதான்:

ஆனால், மூத்த குடிமக்கள் மூவர், இரண்டு நடுத்தர வயதினர் மற்றும் ஒரு வயதான பெண் ஆகியோர் ரஷ்யாவின் உள்நுழைவை பெருமளவு ஆதரிக்கின்றனர்.

அதுபோக, யுக்ரேனில் இருக்கும் ரஷ்யர்களைப் பாதுகாப்பது குறித்தும் பேசுகின்றனர். குறிப்பாக யுக்ரேனின் இந்த நிலைமைக்கு யுக்ரேனியர்களின் சொந்தத் தவறுகள்தான் காரணம் என்றும், வரலாறு நெடுகிலும் அவர்கள் சிக்கலானவர்களாகவே இருந்து வந்துள்ளனர் குற்றம் சாட்டுகின்றனர்.

இளஞ்சிவப்பு நிறத்தில் மேலாடை அணிந்திருந்த பெண்

இளஞ்சிவப்பு நிறத்தில் மேலாடை அணிந்திருந்த இந்தப் பெண்ணும் யுக்ரேனில் இருக்கும் ரஷ்யர்களைக் குறித்துக் கவலை கொள்கிறார். ஆனால், யுக்ரேனில் இருக்கும் யுக்ரேனியர்கள் குறித்துக் கேட்டபோது,

யுக்ரேனியர்கள் பெரும்பாலும் தீவிரவாதிகளே என்றும் இந்தத் தகவலை ஊடகங்களிலும் யுட்யூப் வழியாகவும் இவர் அறிந்ததாகவும் பதிலளித்தார்.

அதேபோல, இது ஒரு அமைதிக்கான ஏலம். பிறகு எல்லாம் சரியாகிவிடும் என்கிறார் இன்னொரு முதியவர்.

ரோஸ்டோவில், தெற்கு ரஷ்யாவின் ஒரு பிராந்தியத்தில், யுக்ரேனின் பிரிவினைவாத பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் பகுதியில், மக்கள் விரும்பத்தக்கதுகோவை விட அதிகமாக அச்சம் நிறைந்த மனநிலை காணப்படுகிறது.

ரோஸ்டாவில் ஒரு இளம்பெண்

எங்களுக்கு அருகிலேயே நடப்பதால் இந்த சம்பவங்கள் குறித்து கவலையாகவே இருக்கிறது. ஆனால், என்ன நடந்தது என்று எங்களுக்கும் முழுமையாகத் தெரியவில்லை.

அதே சமயம், தொலைக்காட்சிகளில் பார்க்கும் செய்திகளை நாங்கள் அப்படியே நம்புவதில்லை என்கிறார் சிவப்பு நிறத்தில் பளீரென்று ஆடை அணிந்திருக்கும் இந்தப் பெண்மணி.

ரோஸ்டாவில் ஒரு ஆண்

இவர்களைப் போலவே, தன் கவலையை மறைக்க முடியாமல் தவிக்கிறார் இந்தப் பெரியவரும். “ஏற்கனவே ஒரு பெரிய போரில் நாம் வென்றிருக்கிறோம். இப்போது மீண்டும் நமக்குள்ளேயே போர் புரிந்து கொண்டிருக்கிறோம்? என்று அழுத்தமான கேள்வியை நம்முன் வைக்கிறார்.

இந்த வரிசையில், யுக்ரேனுக்குள் ரஷ்யாவின் உள்நுழைவு என்பது ஒரு நல்ல முடிவு என்றும் பொருளாதார தடை உள்ளிட்ட எந்த விதமான தடைகளும் வளமிக்க, பெரியதுமான நம் நாட்டை மண்டியிடச் செய்து விட முடியாது என்றும் தெரிவிக்கிறார்.

ISOWTY

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »