Press "Enter" to skip to content

யுக்ரேன் மோதல்: புதினுக்கு நிழலாக விளங்கும் உள் வட்டாரம் – அறியப்படாத தகவல்கள்

  • பால் கிர்பி
  • பிபிசி செய்திகள்

பட மூலாதாரம், RUSSIAN PRESIDENCY

விளாதிமிர் புதின் இப்போது ஒரு தனி மனிதராக நின்று ரஷ்ய ராணுவத்தை மிக ஆபத்தான போர்ச் சூழலுக்கு இட்டுச் செல்கிறார், இது அவரது நாட்டின் பொருளாதாரத்தையே சீரழிக்கும் அச்சுறுத்தலாக முன் நிற்கிறது.

அவர், அண்மையில் நடந்த இரண்டு ஆலோசனைக் கூட்டத்தில் தனக்கு மிகவும் நெருக்கமான ஆலோசகர்களிடமிருந்தும் இடைவெளி விட்டே அமரிந்திருந்த காட்சிகள் வெளியாயின.

படைகளின் தலைமைத் தளபதியாக, படையெடுப்புக்கான இறுதிப் பொறுப்பு அவரிடமே உள்ளது, ஆனால் அவர் எப்போதும் ஆழ்ந்த விசுவாசமுள்ள நபர்களையே நம்பியிருந்தார், அவர்களில் பலர் ரஷ்யாவின் பாதுகாப்பு சேவைகளில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர். அவர் அதிபராக இருக்கும் இந்த மிக மோசமான தருணத்தில் அவர் யாருடைய ஆலோசனைக்குக் காது கொடுக்கிறார் என்ற கேள்வி எழுகிறது.

அப்படி ஒருவருக்கு அவர் செவி மடுப்பதாக இருந்தால், அவர், புதினின் நீண்ட நாள் நம்பிக்கைக்குரியவரும் யுக்ரேனிலிருந்து ராணுவப் படைகள் அனைத்தையும் கலைக்கவும் மேற்கு நாடுகளின் ராணுவ அச்சுறுத்தலிலிருந்து ரஷ்யாவைக் காக்கவும் புதினை வழிமொழிபவருமான ஷெர்கே ஷோய்கு ஆவார்.

அதிபருடன் வேட்டையாடவும் மீன் பிடிக்கவும் அடிக்கடி சைபீரியா சென்று வந்தவர். புதினின் வாரிசாகவும் இவரே கடந்த காலங்களில் கருதப்பட்டார்.

ஆனால், இந்த மேசையின் இன்னொரு கோடியில், ஆயுதப் படைகளின் தலைவருக்கு அருகில் சாதாரணமாக அமர்ந்திருக்கும் அவரது இந்த அசாதாரண புகைப்படத்தைப் பார்த்தால், இவரது குரல் எந்த அளவுக்கு புதினின் காதுகளைச் சென்றடையும் என்ற சந்தேகம் எழுகிறது.

“கீயவ் மீதான தாக்குதலில் படைகளுடன் அணிவகுத்துச் சென்று ஒரு பாதுகாப்பு அமைச்சராக, இந்தப் போரை வென்றெடுத்திருக்க வேண்டியவர் ஷோய்கு” என்று ஆயுத மோதல் விவகாரங்களில் நிபுணரான வேரா மிரோனோஃபா கூறுகிறார்.

line

உங்களது கதையை சொல்ல விரும்புகிறோம்: நீங்களோ அல்லது நண்பரோ, உறவினரோ யுக்ரேனில் இருக்கிறீர்களா?

தற்போது யுக்ரேனில் இருக்கும் தமிழர்களை தொடர்பு கொள்ள விரும்புகிறோம். அங்கு நீங்கள் எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள்? அல்லது யுக்ரேனில் இருந்து வெளியேறி அண்டை நாடுகளில் இருக்கிறீர்களா? உங்களது அனுபவங்களை கீழே உள்ள படிவத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். பிபிசி தமிழில் இருந்து விரைவில் உங்களை தொடர்பு கொள்கிறோம். உங்கள் அனுபவங்களை பிபிசி தமிழ் இணையதளத்தில் பிரசுரிக்கலாம்.

2) Q&A Ukraine

உங்கள் கேள்விகளுக்கு பதில்: யுக்ரேன் மோதலில் இந்தியாவின் மீதான தாக்கம்

யுக்ரேன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அந்த மோதலின் தாக்கம் உலக அளவிலோ அல்லது உங்களது அன்றாட வாழ்வில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் பற்றியோ நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பலாம். உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். அதன் அடிப்படையில் அடுத்துவரும் செய்திகளை உங்களுக்கு வழங்குகிறோம்.

2014 இல் கிரைமியாவை ராணுவம் கைப்பற்றியதன் பெருமை இவரையே சார்ந்திருந்தது. அவர் GRU ராணுவ புலனாய்வு அமைப்பின் பொறுப்பாளராகவும் இருந்தார், இங்கிலாந்தில் உள்ள சாலிஸ்பரியில் 2018 இல் நடந்த கொடிய தாக்குதல் மற்றும் 2020-ல் சைபீரியாவில் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி மீதான ஆபத்தான தாக்குதல் ஆகிய இரண்டு நச்சுக் கலப்புக் குற்றங்களில் இவர் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

விளாதிமிர் புதின்

பட மூலாதாரம், REUTERS/KREMLIN

இந்தப் படத்தில் இவர் மிகவும் மோசமாகவே காட்சியளிப்பதாக மிரோனோஃபா கூறினாலும், ரஷ்ய பாதுகாப்பு நிபுணரும் எழுத்தாளருமான ஆண்ட்ரி சோல்டடோஃப், இன்னமும் அதிபருக்கு ஆலோசனை கூறும் செல்வாக்கு மிக்க குரலாகவே ஷோய்கு இருப்பதாகக் கூறுகிறார்.

“ஷோய்கு ராணுவத்தின் பொறுப்பாளர் மட்டுமல்ல, அவர் ஓரளவு சித்தாந்த ரீதியாகவும் உறுதியாக உள்ளார். ரஷ்யாவில் சித்தாந்தம் என்பது பெரும்பாலும் வரலாறு சார்ந்தது என்பதால், இவர் கருத்துருவாக்கம் இன்னும் செல்லுபடியாகும்” என்று அவர் கூறுகிறார்.

ரஷ்யா - புதினின் தளபதிகள்

படைத் தலைவர் என்ற முறையில், யுக்ரேனை ஆக்கிரமித்துப் பணியை விரைவாக முடிப்பது அவரது வேலையாக இருந்தது.

அவர் 1999 செச்சென் போரில் ராணுவத்தை வழிநடத்திச் சென்று, விளாதிமிர் புதினின் ராணுவப் பிரச்சாரங்களில் முக்கியப் பங்கு வகித்துள்ளார். மேலும் யுக்ரேனுக்கான ராணுவத் திட்டமிடலில் முன்னணியில் இருந்தார், கடந்த மாதம் பெலாரூஸில் ராணுவப் பயிற்சிகளை இவர் மேற்பார்வையிட்டார்.

ரஷ்ய நிபுணர் மார்க் கலியோட்டியால் “நிர்தாட்சணியமான, கொடூரமானவர்” என்று வர்ணிக்கப்பட்ட ஜெனரல் ஜெராசிமோஃப் கிரைமியாவை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான ராணுவ நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்தார்.

யுக்ரேன் மீதான படையெடுப்பின் தடுமாறுதல் மற்றும் துருப்புக்கள் மத்தியில் ஊக்கமின்மை காரணமாக அவர் இப்போது ஓரங்கட்டப்பட்டுள்ளதாகச் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் ஆண்ட்ரி சோல்டடோஃப் இதை ஒப்புக்கொள்ளவில்லை. “புதினால் ஒவ்வொரு சாலையையும் ஒவ்வொரு பட்டாலியனையும் கட்டுப்படுத்த முடியாது, அது அவருடைய பொறுப்பு.” என்கிறார். மேலும், பாதுகாப்பு அமைச்சர் தனது பணியை விரும்பினாலும், அவருக்கு ராணுவப் பயிற்சி இல்லாமல் நிபுணர்களை நம்பியிருக்க வேண்டிய நிலையில் குறிப்பாக இது முக்கியத்துவம் பெறுகிறது” என்று அவர் கூறுகிறார்.

ரஷ்யா - புதினின் தளபதிகள்

லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் ரஷ்ய அரசியலின் இணைப் பேராசிரியராக இருக்கும் பென் நோபல், “மேற்கு நாடுகள் ரஷ்யாவை வெல்லத் துடிப்பதாகக் கருதி, பருந்துபோல் கண்காணிப்பவர்” என்று பத்ருஷேவைக் குறிப்பிடுகிறார்.

ரஷ்யாவின் இரண்டாவது நகரமாக அறியப்படும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க், லெனின்கிராட் என்றழைக்கப்பட்டுக்கொண்டிருந்த 1970-களிலிருந்தே புதினுக்கு விசுவாசமாக இருந்து வரும் மூன்று பேரில் இவரும் ஒருவர்.

பாதுகாப்புச் சேவையின் தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோஃப் மற்றும் வெளிநாட்டு உளவுத்துறை தலைவர் செர்கே நரிஷ்கின் ஆகியோர் மற்ற இரண்டு முக்கியஸ்தர்களாக உள்ளனர். அதிபருக்கு மிக நெருக்கமானவர்கள் அனைவரும் சிலோவிகி அல்லது அமலாக்குபவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர், ஆனால் இந்த மூவரும் இன்னும் நெருக்கமாக உள்ளனர்.

நிகோலாய் பத்ருஷேவ் போல அதிபரின் மீது செல்வாக்கு செலுத்தக்கூடியவர்கள் மிக அரிதே. கம்யூனிஸ்ட் காலத்தில் பழைய கேஜிபியில் அவருடன் பணியாற்றியது மட்டுமல்லாமல், 1999 முதல் 2008 வரை அதன் வாரிசு அமைப்பான FSB இன் தலைவராக அவருக்கு அடுத்துப் பொறுப்பேற்றவர் இவர்.

படையெடுப்புக்கு மூன்று நாட்களுக்கு முன்பு, ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தில், பத்ருஷேவ், ரஷ்யாவை உடைப்பதே அமெரிக்காவின் “உறுதியான இலக்கு” என்ற தனது கருத்தை முன்வைத்தார்.

இந்த அமர்வு ஒரு அசாதாரணமான நாடக அரங்கு போலக் காட்சியளித்தது. அதிபர் ஒரு மேசைக்குப் பின்னால் அமர்ந்திருக்க, அவருடைய பாதுகாப்புக் குழுவினர் ஒவ்வொருவராகச் சென்று, யுக்ரேனில் உள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் சுதந்திரத்தை அங்கீகரிப்பது குறித்து தங்கள் கருத்தை வெளிப்படுத்தினார்கள்.

நிகோலாய் பத்ருஷேவ் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். “அவர் மிகச் சிறந்த போர் முழக்கத்தை முன்னெடுத்தார். மேலும் புதின் தீவிர நிலையை நோக்கி முன்னேறியதில் ஒரு பொருள் உள்ளன” என்று பென் நோபல் கூறுகிறார்.

ரஷ்யா - புதினின் தளபதிகள்

அதிபர் புதின், பாதுகாப்புச் சேவைகளிடமிருந்து பெறும் தகவல்களை வேறு எந்த ஆதாரத்தையும் விட அதிகமாக நம்புகிறார் என்றும் அலெக்சாண்டர் போர்ட்னிகோஃப் புதினின் மிக நெருங்கிய உள் வட்டத்தில் ஒரு பகுதியாகக் காணப்படுகிறார் என்றும் அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லெனின்கிராடின் கேஜிபியிலிருந்து மற்றொரு முதுபெரும் தலைவரான இவர், நிகோலாய் பத்ருஷேவை அடுத்து, FSB இன் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

இருவருமே அதிபருக்கு நெருக்கமானவர்கள் என்று அறியப்பட்டவர்கள், ஆனால் பென் நோபல் குறிப்பிடுவது போல்: “இவர்களில் உண்மையில் அதிக அதிகாரம் பெற்றவர் யார் என்பதைத் தெளிவாகக் கூற இயலாது”

FSB, மற்ற சட்ட அமலாக்கச் சேவைகளில் கணிசமான செல்வாக்கைக் கொண்டுள்ளதுடன் தனது பிரத்யேகமான சிறப்புப் படைகளையும் கொண்டுள்ளது.

அவர் முக்கியமானவர் தான் என்றாலும், அவர் ரஷ்யத் தலைவரை எதிர்க்கவோ, மற்றவர்களைப் போலவே ஆலோசனை வழங்கவோ இயலாது என்று ஆண்ட்ரே சோல்டடோஃப் கருதுகிறார்.

ரஷ்யா - புதினின் தளபதிகள்

பழைய லெனின்கிராட் ஜாம்பவான்கள் மூவரில் ஒருவரான செர்கெ நரிஷ்கின் தனது பணிக்காலத்தின் பெரும்பகுதி, அதிபர் புதினுடனே பணியாற்றியுள்ளார்.

அப்படியிருக்க, பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் போது அவர் கருத்தில் அதிருப்தி அடைந்ததை அடுத்து அவருக்கு நேர்ந்த சங்கடம் மிகவும் வியப்பை அளிக்கிறது.

நிலைமையை மதிப்பிடுமாறு அவரிடம் கேட்கப்பட்டபோது, புலனாய்வுத் தலைவர் குழப்பமடைந்து, தெளிவின்றி உரையாற்றத் தொடங்க, அதிபரே குறுக்கிட்டு, “விவாதம் அதைப் பற்றியில்லை” என்று கூறினார்.

தொலைக்காட்சி பார்வையாளர்களுக்கு இந்தக் காட்சியை அப்படியே ஒளிபரப்பியது அதிபர் மாளிகை.

“இது மிகவும் அதிர்ச்சியளித்தது. அவர் அத்தனைக்கும் அசராமல் உறுதியாக இருந்தார்” என்று பி பி சி-யிடம் தெரிவித்தார் பென் நோபில். இந்தச் சூழலின் தீவிரத்தில் செயலிழந்தார் மார்க் கலியோட்டி. ஆனால், தனது நெருக்கமானவர்களுடன் இப்படி விளையாடுவதில் புதினுக்கு ஒரு அலாதி சுகம் உள்ளது என்று ஆண்ட்ரி சோல்டடோஃப் கூறுகிறார்.

செர்கே நரிஷ்கின் 1990 களில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிலும் 2004 இல் புதினின் அலுவலகத்திலும் பணியாற்றி அவருடன் நிழல் போலத் தொடர்ந்துள்ளார். இறுதியில் பாராளுமன்றத்தின் சபாநாயகராகவும் ஆனார். அவர் ரஷ்ய வரலாற்றுச் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார், மேலும் அதிபரின் செயல்களுக்குக் கருத்தியல் அடிப்படைகளை வழங்குவதில் அவர் மிகவும் முக்கியமானவராகவும் இருந்துள்ளதாக சோல்டடோஃப் கூறுகிறார்.

கடந்த ஆண்டு அவர் பிபிசியின் மக்கள் விரும்பத்தக்கதுகோ நிருபர் ஸ்டீவ் ரோசன்பெர்க்கிற்கு பேட்டி அளித்தார், அதில் ரஷ்யா நச்சுக் கலப்பு மற்றும் சைபர் தாக்குதல்களை நடத்தவில்லை என்றும் பிற நாடுகளின் தேர்தல்களில் தலையிடவில்லை என்றும் மறுத்தார்.

ரஷ்யா - புதினின் தளபதிகள்

18 ஆண்டுகளாக ரஷ்யாவின் மூத்த ராஜதந்திரியாக இருந்து, முடிவெடுப்பதில் அவருக்கு பெரிய பங்கு இல்லையென்றாலும் ரஷ்யாவின் தரப்பைத் தொடர்ந்து, உலகிற்கு முன்வைத்துள்ளார்.

விளாதிமிர் புதின், தனது கடந்த கால விசுவாசிகளையே அதிகம் நம்பியுள்ளார் என்பதற்குச் சான்று 71 வயதான செர்கே லேவ்ரோஃப்.

இவர், கடந்த மாதம் அவர் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸின் ரஷ்யப் புவியியல் அறிவைப் பற்றி கேலி செய்யவும் அதற்கு முந்தைய ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெலை அவமானப்படுத்தவும் முயன்றார் என்பது இவரது குணத்தை விளக்கப் போதுமானவை

ஆனால், அவர் நீண்ட காலமாக யுக்ரேன் விவகாரத்திலிருந்து விலக்கியே வைக்கப்பட்டிருந்தார். தனது முரட்டுத் தனமான விரோத குணத்தையும் மீறி, அவர் யுக்ரேன் விவகாரத்தில், ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளை ஆதரித்ததால், ரஷ்ய அதிபர், அவரைப் புறக்கணிக்க முடிவு செய்தார்.

காணொளி இணைப்பு காரணமாக, ரஷ்யாவின் படையெடுப்பை அவர் ஆதரித்துப் பேசியதால், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பெரும்பாலானோர் வெளிநடப்பு செய்ததை அவர் பொருட்படுத்தவும் இல்லை.

ரஷ்யா - புதினின் தளபதிகள்

புதினின் பரிவாரங்களில் அரிதாக ஒரு பெண் முகம். இவர், ரஷ்யாவின் படைகள் வெளிநாட்டிற்குச் செல்வதை அங்கீகரிக்கும் மேல்சபை வாக்கெடுப்பின் மேற்பார்வையாளராக இருந்தார். இந்த வாக்கெடுப்பை அடுத்து, ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியது.

வாலன்டினா மத்வியென்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கைச் சேர்ந்த மற்றொரு புதின் விசுவாசி ஆவார், அவர் 2014 இல் கிரைமியாவை ரஷ்யாவுடன் இணைப்பதற்கு உதவினார்.

ஆனால் அவள் முதன்மை முடிவெடுப்பாளராகக் கருதப்படவில்லை. அப்படிப் பார்த்தால், பெரிய முடிவுகளை எடுப்பவர்கள் யார் என்று யாரும் உறுதியாகச் சொல்ல முடியாது.

ரஷ்யாவின் பாதுகாப்புக் குழுவில் உள்ள மற்ற எந்த ஒரு உறுப்பினரையும் போலவே, ரஷ்யத் தலைவர் ஏற்கனவே தனது முடிவை எடுத்திருக்கக்கூடிய நிலையில், ஒரு கூட்டு விவாதத்தின் சாராம்சத்தை முன்வைப்பதே அவரது பங்கும் கூட.

ரஷ்யா - புதினின் தளபதிகள்

அதிபரின் முன்னாள் மெய்க்காப்பாளரான இவர், இப்போது ரஷ்யாவின் தேசிய காவல்படையான ரோஸ்க்வார்டியாவைத் தலைமையேற்று நடத்துகிறார். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அதிபர் புதினால் ரோமானியப் பேரரசின் பிரிட்டோரியன் காவல்படை பாணியில் ஒரு தனிப்பட்ட ராணுவமாக உருவாக்கப்பட்டது இந்த அமைப்பு.

தனது சொந்த பாதுகாப்புக் காவலரை இதற்குத் தலைமை தாங்கச் செய்வதன் மூலம், அவர் தனக்கான விசுவாசத்தை உறுதி செய்தார். மேலும் விக்டர் ஜொலொடோஃப் இந்தப் படையினரின் எண்ணிக்கையை 4,00,000 ஆக உயர்த்தினார்.

சில நாட்களுக்குள் படையெடுப்பை முடிப்பதே அசல் ரஷ்ய திட்டம் என்றும் ராணுவம் பின்னடைவைச் சந்தித்ததையடுத்து, ரஷ்யாவின் தேசியக் காவலர் படை தலைமையேற்றது என்றும் வேரா மிரோனோஃபா கருதுகிறார்.

பிரச்சனை என்னவென்றால், தேசிய காவல் படையின் தலைவருக்கு ராணுவப் பயிற்சி இல்லாததாலும் அவரது படைக்கு டாங்கிகள் இல்லாததாலும் அவர்களும் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்.

புதின் செவி சாய்க்கும் மற்றவர் யார்?

பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் மிகப்பெரிய பொறுப்பு பிரதம அமைச்சர் மிக்கேல் மிஷுஸ்தினுக்கு இருந்தாலும், போர் குறித்து எந்தக் கருத்தையும் வெளியிட அதிகாரமில்லை.

மாஸ்கோ மேயர் செர்கே சோபியானின் மற்றும் அரசு எண்ணெய் நிறுவனமான ரோஸ்நேப்ட்-ன் தலைவரான ஐகோர் செச்சின் ஆகியோரும் அதிபருக்கு நெருக்கமானவர்கள் என்று அரசியல் ஆய்வாளர் யெவ்ஜெனி மின்சென்கோ கூறுகிறார்.

அதிபரின் குழந்தை பருவ நண்பர்களாக இருந்த கோடீஸ்வர சகோதரர்கள் போரிஸ் மற்றும் ஆர்கடி ரோட்டன்பெர்க் ஆகியோர் நீண்ட காலமாக நெருங்கிய நம்பிக்கையாளர்களாக இருந்து வருகின்றனர். 2020ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் இதழ் ரஷ்யாவின் பணக்கார குடும்பம் என்று இவர்களைப் பெயரிட்டது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »