Press "Enter" to skip to content

யுக்ரேனிய மோதல்: ரஷ்ய அழிவுகர தாக்குதலுக்கு முன்பும் பின்பும் உள்ள காட்சிகள்

  • விஷ்வல் ஜர்னலிசம் குழு
  • பிபிசி நியூஸ்

பட மூலாதாரம், EPA

யுக்ரேனின் பல நகரங்களில் ரஷ்யா நடத்தி வரும் ஏவுகணை தாக்குதல்களில் பல நகரங்கள் மற்றும் கிராமங்களை கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன. கடந்த வாரம் யுக்ரேன் மீது ரஷ்யா மேற்கொண்ட படையெடுப்பிற்குப் பிறகு பொதுமக்கள் வாழும் பகுதிகளில் ஏற்பட்ட சில அழிவுகளை விவரிக்கும் படங்களை இங்கே வழங்குகிறோம்.

ரஷ்ய படைகள் யுக்ரேன் தலைநகர் கீயவில் இருந்து சிறிது தூரத்தில் இருக்கும் நிலையில், நகரின் மீது வான் தாக்குதல்கள் கடுமையாக நடந்துள்ளன.கீழே உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கடந்த சனிக்கிழமை அதிகாலையில் ரஷ்ய ஏவுகணையால் தாக்கப்பட்டது.

யுக்ரேன் ரஷ்யா

சிறிய நகரமான இர்பின், கீயவில் இருந்து வடமேற்கே 20 கிமீ (12 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. கடந்த வாரம் தொடங்கிய ரஷ்யா மற்றும் யுக்ரேனிய படைகளுக்கு இடையிலான மோதலில் இந்த நகரம் முக்கிய இலக்காக இருக்கிறது. பீரங்கி மற்றும் வான் தாக்குதல்கள் அப்பகுதியில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளன,

அத்தகைய ஒரு தாக்குதலால் முற்றிலும் அழிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதியின் படம் கீழே.

யுக்ரேன் ரஷ்யா

யுக்ரேனின் இரண்டாவது பெரிய நகரான கார்ஹிவ், பல நாட்களாக ரஷ்யர்களின் தீவிர வான்வழி தாக்குதலுக்கு இலக்கானது. அந்த நகரின் மையப்பகுதி அப்படியொரு தாக்குதலில் மோசமாக சேதமடைந்துள்ளது.

புதன்கிழமையன்று கண்மூடித்தனமான ஷெல் தாக்குதலால் நகரின் குடியிருப்பு மற்றும் பிற பகுதிகள் “இரவு முழுவதும் தாக்கப்பட்டதாக” யுக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர், இது சாத்தியமான போர்க்குற்றம் எனக்கூறி, அது குறித்து ஐக்கிய நாடுகளின் வழக்கறிஞர்கள் விசாரித்து வருகின்றனர்.

யுக்ரேன் ரஷ்யா
யுக்ரேன் ரஷ்யா

கீயயேவில் இருந்து வட மேற்கே 60 கிமீ (40 மைல்) தொலைவில் உள்ள போரோடியங்காவில், ரஷ்ய போர் விமானங்கள் பல குடியிருப்பு கட்டடங்களை இலக்கு வைத்து அழித்துள்ளன. வியாழக்கிழமை முதல் ட்ரோன் காட்சிகள் அழிவின் தீவிரத்தைக் காட்டுகிறது, கட்டடங்களின் எச்சங்கள் இன்னும் பற்றி எரிகின்றன. இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக பல வாகனங்கள் வீதிகளில் சிதறிக்கிடக்கின்றன.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கீயவின் வடகிழக்கில் 120 கிமீ (75 மைல்) தொலைவில் உள்ள செர்னீஹிவ், வடக்கிலிருந்து படையெடுத்து வரும் ரஷ்ய படைகளால் சமீபத்திய நாட்களில் கடும் ஷெல் தாக்குதலை எதிர்கொண்டது.

பள்ளிகள் மற்றும் உயரமான அடுக்குமாடி கட்டடம் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் வியாழக்கிழமை 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

யுக்ரேன் ரஷ்யா
யுக்ரேன் ரஷ்யா

செர்னீஹிவின் வடக்கே அமைந்துள்ள அருகிலுள்ள கிராமமான ரிவ்னோபிலியாவின் செயற்கைக்கோள் படங்கள், ரஷ்ய படைகளின் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து தரையில் பள்ளங்கள் மற்றும் எரியும் வீடுகளிலிருந்து புகை வெளியேறுவதைக் காட்டுகிறது.

யுக்ரேன் ரஷ்யா

டொமினிக் பெய்லி, மைக் ஹில்ஸ், லூசி ரோட்ஜர்ஸ் மற்றும் ஜோ பார்தோலோமிவ் ஆகியோரால் இந்த படங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »