Press "Enter" to skip to content

இலங்கையில் பிபிசி தமிழ் செய்தியாளரைத் தாக்கிய ராணுவம்

இலங்கையில் பிபிசி தமிழ் செய்தியாளரைத் தாக்கிய ராணுவம்

இலங்கையில் பாதுகாப்புப் படையினர் தலைநகர் கொழும்புவில் உள்ள முக்கிய அரசாங்க எதிர்ப்புப் போராட்ட முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி கூடாரங்களை அகற்றினர்.

இதில் போராட்டக்காரர்கள் பலர் படையினரால் தாக்கப்பட்டனர்.

பிபிசி செய்தியாளர்கள் மணிகண்டன், அன்பரசன் எத்திராஜன், ஜெரின் சாமுவேல் ஆகியோர் பிபிசி நேரலையில் செய்திகளை வழங்கிக் கொண்டிருந்தபோது, காணொளி செய்தியாளர் ஜெரின் ராணுவத்தால் தாக்கப்பட்டார். அதோடு, ராணுவ வீரர் ஒருவர் அவருடைய கைபேசியைப் பறித்து, அதிலிருந்து காணொளிக்களை அழித்தார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »