Press "Enter" to skip to content

தாய்லாந்து மக்களின் அலகு குத்தும் திருவிழா: நூற்றாண்டுகளாக நடக்கும் சடங்கு

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தாய்லாந்து மக்களின் அலகு குத்தும் திருவிழா: நூற்றாண்டுகளாக நடக்கும் சடங்கு

அலகு குத்திக்கொள்ளும் திருவிழாக்கள் நீங்கள் அறியாதவை அல்ல. ஆனால், நீங்கள் பார்க்கும் இந்த திருவிழா நடப்பது தமிழ்நாட்டில் அல்ல, தாய்லாந்தில்.

தாய்லாந்தின் புகழ்பெற்ற ‘9 பேரரச தெய்வங்கள்’ திருவிழாவில்தான் இந்த சடங்கு நடைபெறுகிறது. 9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பக்தர்கள் மாமிச உணவைத் தவிர்த்து தாவர உணவை மட்டுமே எடுத்துக்கொள்கின்றனர். பின்னர், துரதிர்ஷ்டத்தை நீக்குவதற்காக தங்கள் உடலை அலகினால் துளைத்து கடவுளுக்கு அர்ப்பணிக்கின்றனர் என்று பக்தர்கள் சொல்கின்றனர்.

நூற்றாண்டுகாலப் பழமை வாய்ந்த இந்த சடங்குகளில், தற்போது நவீன பாதுகாப்பு அம்சங்கள் பின்பற்றப்படுகின்றன.

தாங்கள் குத்திக்கொள்ள விரும்பும் அலகுகளை பக்தர்களே தேர்வு செய்து கொள்ளலாம். மருத்துவ உதவிக்கு செவிலியர்களும் தயார் நிலையில் வைக்கப்படுவர். இந்த சமயத்தில், உணவும் நீரும்தான் பெரும் சவால்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »