Press "Enter" to skip to content

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீசை ‘சுருட்டிய’ இந்தியாவின் தீப்தி சர்மா

பட மூலாதாரம், Getty Images

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் குரூப் சுற்று ஆட்டம் தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் இன்று நடைபெற்றது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி மட்டையாட்டம்கை தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் ஏற்கனவே இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்து 2வது ஆட்டத்தில் களமிறங்கியது.

இந்தியா முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய உற்சாகத்தில் மோதியது.

தீப்தியின் சுழலில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸின் சரிவு சரியாக 2வது சுற்றில் இருந்து தொடங்கியது. இந்திய வீராங்கனை பூஜா வீசிய அந்த 2வது ஓவரின் முதல் பந்திலேயே வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை ஹேய்லே மேத்யூஸ் மட்டையிலக்குடை பறிகொடுத்தார்.

மீதமிருந்த 5 பந்துகளும் டாட் பால்களாக மாறின. அந்த சுற்றில் 1 மட்டையிலக்கு மட்டுமின்றி மெய்டன் ஓவராக மாற்றி வெஸ்ட் இண்டீஸுக்கு அதிர்ச்சி கொடுத்தார் பூஜா. 14வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் தீப்தி வீசினார்.

ஆட்டத்தின் 3வது பந்திலும் 6வது பந்திலும் மட்டையிலக்குடை வீழ்த்தினார். களத்தில் பொறுமையாக ஆடிக்கொண்டிருந்த கேம்பெல்லே 30 ரன்னிலும் யெய்லர் 42 ரன்னிலும் விடைபெற்றனர்.

இது இந்தியாவுக்கு மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது. தீப்தியின் அடுத்தடுத்த சுழலில் சிக்கிய வெஸ்ட் இண்டீசால் மீண்டு வர முடியாமலேயே போனது.

துல்லியமாக பந்துவீசிய தீப்தி சர்வதேச போட்டிகளில் 100 மட்டையிலக்குகளை கைப்பற்றிய முதல் இந்திய வீராங்கனை எனும் சாதனையைப் படைத்தார்.

20 சுற்றுகள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 மட்டையிலக்கு இழப்பிற்கு 118 ஓட்டங்கள் மட்டுமே சேர்த்தது. இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 4 ஓவர்களை வீசிய 3 மட்டையிலக்குகளை கைப்பற்றியதோடு வெறும் 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார்.

கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

அடித்து ஆடிய இந்தியா

119 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. ஆட்டத்தை அதிரடி பாணியில் நகர்த்திய ஷஃபாலி வர்மா முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகளை விளாசினார். அடுத்த ஓவரிலும் பந்துகள் பவுண்டரி சென்ற வண்ணம் இருந்தன. 2 ஓவர்களில் 14 ரன்களை சேர்த்தது இந்தியா.

ஸ்மிரிதி மந்தானா 10 ஓட்டங்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த ஜெமிமா ரோட்ரிகசும் 1 ஓட்டத்தில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

கேப்டன் ஹர்மன் ப்ரீத் ஜோடி சேர்ந்து ரன்களை சேர்த்தனர். 23 பந்துகளில் 28 ஓட்டங்கள் விளாசி ஷஃபாலி விடைபெற்றார்.

இருப்பினும் கேப்டனுடன் இணைந்து பொறுப்புடன் ஆடிய ரிச்சா கோஷ் அதிகபட்சமாக 44 ஓட்டங்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணி 18வது ஓவரிலேயே 6 மட்டையிலக்கு வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசித்தது. வெஸ்ட் இண்டீஸை சுருட்டிய தீப்தி சர்மாவுக்கு ப்ளேயர் ஆஃப் தி மேட்ச் விருது கிடைத்தது.

இந்தியாவின் வெற்றி தொடருமா?

கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் என அடுத்தடுத்து 2 வெற்றிகளை ருசித்து புள்ளிப்பட்டியலில் 2ம் இடைத்தில் உள்ளது இந்திய அணி. நெட் ஓட்டத்தை ரேட் அடிப்படையில் இங்கிலாந்து முதல் இடம் வகிக்கிறது. சனிக்கிழமை நடைபெறும் குரூப் சுற்று ஆட்டத்தில் பலம் வாய்ந்த இங்கிலாந்துடன் மோதுகிறது இந்திய அணி. தோல்வியை சந்தித்திராத இரு அணிகளும் முழு திறனுடன் மோத உள்ளதால் இந்த ஆட்டம் முக்கிய கவனத்தை பெற்றுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »