Press "Enter" to skip to content

கோலியின் அசத்தல் தொடக்கம், டுப்ளெஸ்ஸியின் சரவெடி – பட்டாசாக வெடித்த பெங்களூரு ‘கே.ஜி.எஃப்’

பட மூலாதாரம், BCCI/IPL

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பெங்களூரு, லக்னெள அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னெள அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். லக்னெள அணி இந்தப் போட்டியில், மார்க் வுட், ஆவேஷ் கான் ஆகியோரை ஆடும் லெவனில் களமிறக்கியது.

இன்றைய போட்டியின் முதல் பந்துவீச்சு சுற்றுஸில் பெங்களூரு அணியின் கே.ஜி.எஃப் ஆக களமிறங்கிய கோலி, கிளென் மேக்ஸ்வெல், ஃபாஃப் டுப்ளெஸ்ஸி, கேஜிஎஃப் காட்டிய ஆக்ஷனை போலவே சுவாரஸ்யம் குறையாத அதிரடியால் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளார்கள்.

பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி, ஃபாஃப் டுப்ளெஸ்ஸி களமிறங்கினார்கள். முதல் ஓவரை ஜெய்தேவ் உனாத்கத் வீசியபோது, விராட் கோலி பவுண்டரி ஷாட்டுக்கான முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், அவரது செயல்பாட்டைக் கணித்து ஃபீல்டிங்கை திறமையாகத் தொடங்கியது லக்னெள.

விராட் கோலி பந்து வீச்சாளர்களைத் தொடர்ந்து சிந்திக்க வைக்கும் வகையில் ஆடிக்கொண்டே இருந்தார். அவர் க்ரீஸ் லைனுக்கு முன்னும் பின்னும் தொடர்ச்சியாக நகர்ந்துகொண்டே இருந்தது, பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சு நீளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதன்விளைவாக ஆவேஷ் கான் வீசிய இரண்டாவது சுற்றில் அடுத்தடுத்து சிக்ஸ், ஃபோர் என்று அவர் திட்டமிட்டு அடித்தார். வழக்கமாக தொடக்கத்தில் அதிரடி காட்டுவது விராட் கோலியின் அணுகுமுறை அல்ல. ஆனால், இந்தப் போட்டியில் தொடக்கத்திலேயே பவுண்டரி ஷாட்டுகளுக்கான அவரது நோக்கம் தெளிவாகத் தெரிந்தது.

சின்னசாமி மைதானத்தைப் பொறுத்தவரை, பந்துவீச்சாளர்கள் செய்யும் சிறு தவறுகள்கூட பெரிய இழப்புகளை அவர்களது அணிக்குக் கொண்டுவரக்கூடும். அத்தகைய பிழைகளைச் செய்ய வைத்து, பயன்படுத்தியும் கொண்டார் கோலி.

ஆரம்பத்திலேயே அவர் பந்துகளைப் பறக்கவிடத் தொடங்கவே அதைத் தடுக்க, க்ருணால் பாண்ட்யாவை களமிறக்கியது லக்னெள.

அவர் ஏற்கெனவே இரண்டு முறை கோலியின் மட்டையிலக்குடை வீழ்த்தியுள்ளார். முந்தைய ஆட்டத்தில் கொல்கத்தாவின் சுழற்பந்து வீச்சாளர்களிடம்தான் கோலி, டுப்ளெஸ்ஸி இருவருமே ஆட்டமிழந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதை உணர்ந்து லக்னெள 3வது ஓவரிலேயே க்ருணாலை களமிறக்கியது. ஆனால், அவரது சுற்றில் அதற்கான பலன் கிடைக்கவில்லை.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

கோலியின் அதிரடியால் அதிர்ந்த சின்னசாமி அரங்கம்

சின்னசாமி மைதானத்திற்கும் கோலிக்கும் இடையிலான நெருக்கமான பிணைப்பு இன்றைய போட்டியிலும் வெளிப்பட்டது. அவர் முதல் சுற்றில் இருந்தே பல்வேறு அதிரடி முயற்சிகளை மேற்கொண்டார். ஆவேஷ் கான், க்ருணால், மார்க் வுட் என்று ஒவ்வொருவரது பந்துகளையும் முழுமையாக அவதானித்து, சிக்ஸ், ஃபோர் என்று அடித்துக் கொண்டிருந்தார்.

லக்னெளவின் பவுலர்களை நிலைகொள்ளவே விடாமல் தொடர்ந்து அவரது பேட்டில் இருந்து பட்டாசாக வெடித்த பவுண்டரி ஷாட்கள், பந்துவீச்சாளர்களை அழுத்ததிலேயே வைத்திருந்தது. பவர் பிளே முடிவில் விராட் கோலி நான்கு பவுண்டரி, மூன்று சிக்ஸ் அடித்திருந்தார்.

பெங்களூரு அணி, 56 ரன்களை எடுத்திருந்தது. குறிப்பாக, பவர் பிளேவின் இறுதி சுற்றில் மார்க் வுட் பந்துவீச்சில், நேராக அவரது தலைக்கு மேலேயே சிக்சர் ஷாட் அடித்தபோது, கோலியின் ஆட்டத்தைக் கொண்டாடிய ரசிகர்களின் ஆனந்தக் கூச்சல் பெருகியது. அதிலும், அவர் ஒன்பதாவது சுற்றில் 36 பந்துகளில் அரை சதம் அடித்தபோது, சின்னசாமி மைதானமே அதிர்ந்தது.

கோலி, டுப்ளெஸ்ஸிக்கு எதிராக லக்னெளவின் சுழற்பந்து தாக்குதல் தொடர்ந்தது. ஆனால், ரவி பிஷ்னோய், க்ருணால் என்று இருவரின் தாக்குதலையும் உணர்ந்த இருவருமே நிதானித்து பவர் பிளேவுக்கு அடுத்த மூன்று ஓவர்களிலும் சிங்கிள்ஸ் மட்டுமே ஆடினார்கள். ஆனால், 10வது சுற்றில் மீண்டும் சிக்சரோடு அதிரடியை மீண்டும் தொடங்கினார்.

தொடக்கத்தில் இருந்து கோலிக்கு பக்கபலமாக நின்று ஈடுகொடுத்துக் கொண்டிருந்த டுப்ளெஸ்ஸி, 9வது ஓவர் வரை நிதானத்தைக் காட்டினார். அதற்குப் பிறகு அவரும் பந்துகளைப் பறக்கவிடத் தொடங்கினார். க்ருனால், ரவி பிஷ்னோய் போன்ற இன்று குறிப்பிடத்தக்க அளவில் மட்டையிலக்கு எடுக்க முடியாமல் திணறினார்கள்.

ஆனால், அமித் மிஷ்ரா அதைச் சாதித்துக் காட்டினார். அவரை களமிறக்கி ராகுல் புத்திசாலித்தனமாக காய் நகர்த்தினார். அவரது ஷார்ட் பால் ஒன்றை பவுண்டரி ஷாட் அடிக்க கோலி முயன்றார்.

ஆனால், அதை மார்கஸ் ஸ்டாய்னிஸ் கேட்ச் பிடித்து கோலியை வெளியேற்றினார். 44 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சர் அடித்து 61 ரன்களோடு விராட் கோலி வெளியேறினார்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

டுப்ளெஸ்ஸி, மேக்ஸ்வெல் கூட்டணியின் சரவெடி

டுப்ளெஸ்ஸி, மேக்ஸ்வெல்லின் மட்டையாட்டம்கை கணித்து அதற்கேற்ப லக்னெள வீரர்கள் பந்துவீசினார்கள். டுப்ளெஸ்ஸிக்கு வீசும்போது பந்து ஸ்டம்ப் லைனிலேயே பிட்ச் ஆனது அவரது மட்டையாட்டம்கை தடுத்துக் கொண்டிருந்தது.

அதையும் தாண்டி இந்தப் போட்டியில் தனது முதல் சிக்சரை பிஷ்னோய் வீசிய 15வது சுற்றில் அடித்தார். அடுத்த பந்திலேயே லெக் சைடில் 115 மீட்டர் தொலைவுக்கு மீண்டுமொரு சிக்ஸ். அவரைத் தொடர்ந்து பிஷ்னோய் வீசிய கடைசி ‘நானும் அடிப்பேன்’ எனக் கூறி தன் பங்குக்கு மேக்ஸ்வெல்லும் ஒரு சிக்ஸ் அடித்தார்.

12வது சுற்றில் கோலி அவுட்டான பிறகு அடுத்த இரண்டு ஓவர்களிலும் ஓட்டத்தை ரேட் பெரிதும் அடி வாங்கியது. 14 ஓவர் முடிவில் ஆர்சிபி 117 ரன்களே எடுத்திருந்தது. ஆனால், அடுத்த மூன்று ஓவர்களில் டுப்ளெஸ்ஸி, மேக்ஸ்வெல் இருவரும் விளாசத் தொடங்கினார்கள்.

பெங்களூரு அணி ஒரு திட்டத்தோடுதான் களமிறங்கியிருந்தது. ஆனால், மிடில் ஓவர்களில் தவறவிட்டுவிட்டார்கள். அமித் மிஷ்ரா, மார்க் வுட் பந்துவீச்சில் சற்றுத் திணறினார்கள். ஒரு மட்டையிலக்குடை மட்டுமே இழந்துள்ள நிலையில், 17 ஓவர்களில் ஆர்சிபி 160 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

மேக்ஸ்வெல் போன்ற பேட்ஸ்மேன் மைதானத்தின் அனைத்துப் பகுதிகளையும் தனது ஆதிக்கத்தின்கீழ் கொண்டு வந்துவிடுவார். இது பவுலர்களுக்கு பெரிய அழுத்தத்தைக் கொடுக்கும். அத்தகைய அழுத்தத்தைத் தாண்டி உனத்கத் வீசிய ஒரு யார்க்கர் பந்தில் மேக்ஸ்வெல் அடித்த ஷாட்டை க்ருனால் பாண்ட்யா ஒரு கேட்ச் வாய்ப்பைத் தவறவிட்டார்.

அது எவ்வளவு பெரிய தவறு என்பதைக் காட்டும் வகையில், டுப்ளெஸ்ஸி, மேக்ஸ்வெல் இருவரும் ஆளுக்கொரு சிக்சரை அடுத்தடுத்து விளாசினார்கள். உனாத்கத் முன்பு நிறைய ரன்களை கொடுத்துவிட்டதால், இந்தப் போட்டியில் தனது அணுகுமுறையை மாற்றிப் பார்த்தார். ஆனாலும் அவரது யார்க்கர் பந்துகளில் தொடர்ந்து இருவரும் பந்துகளை பவுண்டரி லைனை நோக்கிப் பறக்கவிட்டுக் கொண்டிருந்தார்கள்.

தொடக்கத்தில் மெதுவாகத் தொடங்கினாலும் மேக்ஸ்வெல் தான் இன்னும் தனது ஃபார்மை இழந்துவிடவில்லை என்பதைக் காட்டும் விதமாக 19வது சுற்றில் அரை சதத்தை 24 பந்துகளில் பூர்த்தி செய்தார். இறுதி ஓவரின் 5வது பந்தில் 29 பந்துகளுக்கு 59 ரன்களை எடுத்து மேக்ஸ்வெல், மார்க் வுட் பந்துவீச்சில் கிளீன் போல்டாகி வெளியேறினார்.

டுப்ளெஸ்ஸி 46 பந்துகளில் 79 ரன்களுடன் களத்தில் நின்று கொண்டிருந்தார். 53 பந்துகளில் அவர்களது கூட்டணி 115 ரன்களை குவித்தது.

மிடில் ஓவர்களின்போது இருவரும் சற்றுத் திணறியிருந்தாலும், அடுத்தடுத்து போட்டி போட்டு விளாசிக் கொண்டிருந்தார்கள். டுப்ளெஸ்ஸி ஆரம்பத்தில் 30 பந்துகளில் 33 என்ற நிலையில் இருந்தார். அதற்குப் பிறகு எதிர்கொண்ட பந்துகளில் சரவெடியாய் வெடித்தார்.

மொத்தம் 5 பவுண்டரி, 5 சிக்ஸ் அடித்தார். மேக்ஸ்வெலும் 6 சிக்ஸ், 3 பவுண்டரி ஷாட்களை விளாசினார். அவர்களது கூட்டணி வழிநடத்திச் சென்ற முதல் பந்துவீச்சு சுற்றுஸில் 2 மட்டையிலக்கு இழப்புக்கு பெங்களூரு 212 ரன்களை எடுத்தது.

மட்டையாட்டம்கை தொடங்கிய லக்னௌ அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி

லக்னௌ அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களாக கைல் மேயர்ஸ், கே.எல். ராகுல் கூட்டணி 213 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது. ஆனால், முதல் ஓவரை வீசிய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் கைல் மேயர்ஸை டக் அவுட்டாக்கி அதிர்ச்சி கொடுத்தார்.

அதைத் தொடர்ந்து, தீபக் ஹூடா, ராகுலுடன் கூட்டணி சேர்ந்தார். சிராஜ், டேவிட் வில்லி, வேன் பார்னெல் மூவரது பந்துவீச்சையும் எதிர்கொள்ள லக்னௌ வீரர்கள் ஆரம்பத்தில் சற்றுத் தடுமாறினார்கள். குறிப்பாக நான்காவது சுற்றில் பார்னெல் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தீபக் ஹூடா மட்டையிலக்கு கீப்பர் தினேஷ் கார்திக் கைக்கு கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதையடுத்து அதே சுற்றில் க்ருனால் பாண்ட்யாவும் டக் அவுட்டாகி வெளியேறினார். பவர் பிளே முடிவதற்குள்ளாகவே லக்னௌ மூன்று மட்டையிலக்குடுகளை இழந்து, 37 ரன்களை எடுத்திருந்தது.

ஆனால், கே.எல்.ராகுலுடன் 5வது ஓவர் தொடக்கத்தில் கூட்டணி சேர்ந்த மார்கஸ் ஸ்டாய்னிஸ், 8 ஓவர்களுக்கு உள்ளாகவே 2 சிக்சர், 5 பவுண்டரிகளை அடித்து மங்கிக் கொண்டிருந்த லக்னௌவின் நம்பிக்கை ஒளியை மீண்டும் பற்ற வைத்தார். ஏழாவது சுற்றில் அடுத்தடுத்து, 6, 4, 4, 8வது ஓவரி ஒரு சிக்ஸ் மற்றும் ஒரு பவுண்டரி என்று விளாசி வீழ்ந்துகொண்டிருந்த ஓட்டத்தை ரேட்டை தூக்கி நிறுத்தினார்.

ஸ்டாய்னிஸ், கே.எல்.ராகுல் கூட்டணி 9 ஓவர் முடிவில் 30 பந்துகளில் 53 ரன்கலை எடுத்திருந்தது. பத்தாவது சுற்றில் 25 பந்துகளில் 52 ரன்களை எடுத்து ஸ்டாய்னிஸ் அரை சதத்தை பூர்த்தி செய்தார். லக்னௌ ஆரம்பத்தில் மோசமான நிலையில் இருந்தது. ஆனால், ஆட்டத்தின் போக்கை ஸ்டாய்னிஸ் கடகடவென மடைமாற்றிவிட்டார்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

ஆர்சிபி-யை அச்சுறுத்திய நிகோலஸ் பூரன்

அந்தப் பக்கம் டுப்ளெஸ்ஸி விளாசினால், இந்தப் பக்கம் நான் விளாசுவேன் என்று சிக்சரும் ஃபோருமாக அவர் அடித்த ஷாட்கள் பவுண்டரி லைனை நோக்கிப் பறந்தன. அவரது அணுகுமுறையே சிங்கிள்ஸ் ஓடுவதாக இருக்கவில்லை, பவுண்டரிக்கு பறக்கவிடுவதன் மூலம் ரன்களை குவிப்பதாக மட்டுமே இருந்தது. 10 ஓவர் முடிவில் லக்னௌ 91 ரன்களை எடுத்திருந்தது.

அவரது மட்டையிலக்குடை எடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் ஆர்சிபி இருந்தது. ஆனால், 11வது சுற்றில் இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிய கர்ண் ஷர்மா பந்துவீச்சில் மீண்டும் சிக்சரை நோக்கமாக வைத்து ஸ்டாய்னிஸ் ஒரு ஷாட் அடித்தார். ஆனால், ஷாபாஸ் அகமது கையில் அழகாகச் சென்று அமர்ந்த பந்து அவரது மட்டையிலக்குடை வீழ்த்தி வெளியேற்றியது. 30 பந்துகளில் 65 ரன்களை எடுத்து ஸ்டாய்னிஸ் வெளியேறினார்.

கர்ண் ஷர்மாவுக்கு அவரது பந்துவீச்சு மீது இருந்த நம்பிக்கையும் சாமர்த்தியமும் 11வது சுற்றில் வெளிப்பட்டது. அதற்கு முந்தைய பந்தில்தான் ஸ்டாய்னிஸ் அட்டகாசமான ஒரு சிக்ஸ் அடித்திருந்தார். இருப்பினும் அடுத்த பந்தை அதைவிட ஸ்லோ பாலாக, வைடாக வீசினார். அதில் முந்தைய சிக்ஸ் கொடுத்த நம்பிக்கையோடு மீண்டும் விளாச முயன்ற ஸ்டாய்னிஸ், கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அதற்கு அடுத்து நிகோலஸ் பூரன் களமிறங்கினார். ஆனால், 12வது ஓவரிலேயே கே.எல்.ராகுல் மட்டையிலக்குடை வீழ்த்தினார் சிராஜ். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே அவர் வீசிய லெந்த் பாலை டீப் ஸ்கொயர் லெக்கில் ராகுல் அடித்தார். அதை சற்று உள்ளே ஓடி வந்து கோலி கேட்ச் பிடித்து ராகுலை வெளியேற்றினார்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

பெங்களூரு பவுலர்களுக்கு கருணையின்றி பதிலடி கொடுத்த பூரன்

இரண்டாவது சுற்று இக்கட்டான நிலையில் லக்னௌ அணி இருந்தபோது பூரன் களமிறங்கினார். ஆனால், அவரது ஆட்டம் அணியை மிகச் சாவதானமாக வெற்றி பெறும் சூழலுக்குக் கொண்டு சென்றது.

இருந்தாலும், கடைசி இரண்டு ஓவர்களை பதற்றமான சூழ்நிலைக்குக் கொண்டு சென்றார்கள் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள்.

அமித் மிஷ்ராவுக்கு பதிலாக லக்னௌவின் இம்பாக்ட் பிளேயராக கொண்டுவரப்பட்ட ஆயுஷ் பதோனி, நிகோலஸ் பூரனுடன் கூட்டணி சேர்ந்தார். 12வது ஓவர் முடியும் நிலையில் 48 பந்துகளில் 97 ஓட்டங்கள் லக்னௌவுக்கு தேவைப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து வரிசையாக விழுந்த மட்டையிலக்குடுகள் ஓர் அச்சுறுத்தலை உருவாக்கியிருந்தது.

இருப்பினும், 4 பவுண்டரி, 6 சிக்சரோடு சேர்த்து 15 பந்துகளில் 51 ரன்களை எடுத்து இந்த ஐபிஎல் தொடரின் அதிவேக அரைசதத்தை விளாசிய நிகோலஸ் பூரன், பெங்களூருவுக்கு அச்சுறுத்தலாக நின்றிருந்தார். அவர் இருக்கும் வரை, லக்னௌ அணிக்கு இலக்கை அடைவது அவ்வளவு பெரிய சவாலாக இருக்கப் போவதில்லை என்ற நிலை நிலவியது.

ஆர்சிபி ஐந்தாவது மட்டையிலக்குடை எடுத்த பிறகு ஒரு பெரிய வேலை முடிந்தது என்று நினைத்தார்கள். ஆனால் அது எவ்வளவு பெரிய தவறு என்பதை பூரன் அவர்களுக்குக் காட்டிக் கொண்டிருந்தார்.

அதுவரைக்கும் குதூகலித்துக் கொண்டாடிக் கொண்டிருந்த ஆர்சிபி ரசிகர்கள் மத்தியில் மயான அமைதி நிலவியது. களத்தில் பூரன் செய்துகொண்டிருந்ததை அவர்களால் நம்ப முடியாமல் திகைத்திருந்தார்கள்.

பெங்களூரு அணி 16 ஓவர் முடிவில் ஒரு மட்டையிலக்கு இழப்பிற்கு 160 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ஆனால், 16 ஓவர் முடிவில் 5 மட்டையிலக்கு இழப்பிற்கு லக்னௌ 185 ரன்களை எடுத்திருந்தது.

முதல் பந்துவீச்சு சுற்றுஸில் ஆர்சிபியின் கேஜிஎஃப் வீரர்கள் கொடுத்த அடிக்கு, கொஞ்சமும் கருணை காட்டாமல் அட்டகாசமானதொரு பதிலடியை பூரன் எதிரணிக்கு தனி ஆளாக வழங்கிக் கொண்டிருந்தார்.

படபடப்பை ஏற்படுத்திய இறுதி ஓவர்

முதல் பந்துவீச்சு சுற்றுஸில் சிறப்பாகச் செயல்பட்டும்கூட, இரண்டாவது பந்துவீச்சு சுற்றுஸில் அதைத் தக்க வைக்க முடியவில்லையே என்ற திகைப்பில் பெங்களூரு வீரர்கள் நின்றிருந்தார்கள். கே.எல்.ராகுல், ஸ்டாய்னிஸ் என்று முக்கிய மட்டையிலக்குடுகளை எடுத்த பிறகும் தோல்வியைத் தழுவியதை அவர்களால் நம்ப முடியவில்லை.

ஆனால், 17வது சுற்றில் முகமது சிராஜ் கச்சிதமாக பூரனின் மட்டையிலக்குடை எடுத்து, ஆர்சிபிக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது எனக் கூறினார். பூரன் வகை வகையாக பல்வேறு ஷாட்களை வெளுத்தார். ஆனால், மிக அழகான ஃபுல் டாஸ் பந்தை சிராஜ் வீசியபோது, அதை டவுன் லெக் சைடில் பூரன் ஷாட் அடித்தார். ஆனால், அகமது அதை கேட்ச் பிடித்து அணியின் நம்பிக்கையை மீட்டெடுத்தார்.

குறிப்பாக 19வது சுற்றில் ஆயுஷ் பதோனி அருமையான பவுண்டரி ஷாட் ஒன்றை அடித்தார். ஆனால், அதற்கு அடுத்த பந்தில் சிக்சர் ஷாட் ஒன்றை அடித்திருந்தாலும் அவர் ஹிட் மட்டையிலக்குடாக வெளியேறினார். கடைசி சுற்றில் 6 பந்துகளுக்கு 5 ஓட்டங்கள் தேவையாக இருந்தது. அந்த நேரத்தில் அந்த ஓவரை வீச வந்தார் ஹர்ஷல் பட்டேல். அவர் இதுவரைக்கும் குறிப்பிடத்தக்க ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

ஆனால், ஆர்சிபிக்கு மிக முக்கியமாக இருந்த இந்த 20வது ஓவரின் இரண்டாவது பந்தில் மார்க் வுட்டை கிளீன் போல்ட் செய்து வெளியேற்றினார்.

அடுத்து, 5வது பந்திலும் உனாத்கத் மட்டையிலக்குடையும் வீழ்த்தினார். இரண்டு ரன்களை எடுத்தால் வெற்றி என்று இருந்த நேரத்தில், உனாத்கத் அடித்த லாங் ஷாட்டை டுப்ளெஸ்ஸி கேட்ச் பிடித்து அவரை வெளியேற்றினார்.

ஒரு பந்தில் ஒரு ஓட்டத்தை என்று இருந்த நிலையில், ஹர்ஷல் பட்டேல் பந்தை வீச முன்வரும்போதே அவர் பக்கம் நின்றிருந்த பிஷ்னோய் ஓட்டத்தை எடுக்க ஓடத் தொடங்கிவிட்டார்.

அதை நல்வாய்ப்பாகப் பயன்படுத்தி ஹர்ஷல் பட்டேல் ஆவரை ஓட்டத்தை அவுட் செய்திருக்கலாம். ஆனால், அந்த வாய்ப்பைத் தவறவிட்டார். பெங்களூரு அணியின் பந்துவீச்சு பலவீனமாக இருப்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.

அதோடு நிற்காமல், மிக எளிமையாக ஓட்டத்தை அவுட் செய்யும் வாய்ப்பு தினேஷ் கார்த்திகிற்கு கிடைத்தது. ஆனால், அந்த வாய்ப்பையும் அவர் தவறவிட்டார். லக்னௌ அணி அந்த ஒரு ஓட்டத்தில் எடுத்து ஒரு மட்டையிலக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அந்த இறுதி ஓவர் இரு அணிகளுக்கும் ஏற்படுத்திய பதற்றத்தை வார்த்தைகளில் விவரித்துவிட முடியாது. இறுதியாக அந்த ஒரு ஓட்டத்தில் எடுத்து வெற்றியைத் தழுவிய பிறகு, தனது ஹெல்மட்டை ஓங்கி தரையில் வீசியெறிந்து, ஆசுவாசத்தையும் மகிழ்ச்சியையும் ஆவேஷ் கான் ஒருங்கே வெளிப்படுத்தினார்.

லக்னௌ அணி 213 ஓட்டங்கள் என்ற இலக்கை இறுதி வரை போராடி வெற்றியைப் பெற்றதன் மூலம், தான் ஒரு வலிமையான அணி என்று மீண்டும் நிரூபித்துள்ளது.

இந்த ஐபிஎல் தொடர் கணிக்க முடியாத அளவுக்கு சுவாரஸ்யமாக இருப்பதை அடுத்தடுத்து ஒவ்வொரு போட்டியும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »