Press "Enter" to skip to content

‘தென்னிந்திய மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டுவிடக் கூடாது’ – திமுக எம்.பி. கனிமொழி நேர்காணல்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

‘தென்னிந்திய மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டுவிடக் கூடாது’ – திமுக எம்.பி. கனிமொழி நேர்காணல்

பெண்களை அங்கீகரிப்பதில் சமூகத்தில் தற்போது தயக்கம் இருப்பதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பிபிசி தமிழுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார்.

பெண்கள் தன்னிச்சையாக செயல்பட முடியாத சூழல்தான் தற்போதும் உள்ளதாக குறிப்பிட்ட கனிமொழி, மகளிர் இடஒதுக்கீடு மசோதா விரைவாக செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பெண்களின் உழைப்புக்கான மரியாதை இல்லாத சூழலில், இந்த நிலையை மகளிர் இடஒதுக்கீடு மசோதா மாற்றும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படும்போது தென் இந்திய மாநிலங்களுக்கு மிகப்பெரிய இழப்பாக மாறிவிடக்கூடாது என்றும் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் போன்றவற்றில் முன்னேற்றம் அடைந்ததற்காகவே தென் இந்திய மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டுவிடக் கூடாது என்றும் கனிமொழி வலியுறுத்தினார். (முழு தகவல் காணொளியில்)

தயாரிப்பு: சாரதா வி

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: நிஷாந்த்

மகளிர் இடஒதுக்கீடு மசோதா- கனிமொழி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »