Press "Enter" to skip to content

இந்திய அணியின் ‘ஆக்ரோஷ’ சோதனை முயற்சியில் வெளிப்பட்ட பலவீனம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

ராஜ்கோட்டில் நேற்று நடந்த இந்திய அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றது. ‘ஆக்ரோஷமான மட்டையாட்டம்’ என்ற உத்தியை கையாண்டு இந்த தொடரில் இரு அணிகளும் வெற்றியை கண்டுள்ளன. இந்த உத்தி அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள உலகக் கோப்பையில் கை கொடுக்கும் என பெரும்பாலான அணிகள் நம்புகின்றன.

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில், முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 7 மட்டையிலக்கு இழப்புக்கு 352 ஓட்டங்கள் சேர்த்தது. 353 ஓட்டங்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.4 ஓவர்களில் 286 ஓட்டங்களில் சுருண்டு 66 ஓட்டங்களில் தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. உலகக் கோப்பைத் தொடரில் ஒருநாள் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அணி என்ற பெருமையுடன் ரோஹித் சர்மா அணி உலகக் கோப்பைப் போட்டியில் நுழைகிறது.

இந்தப் போட்டியில் 4 மட்டையிலக்குடுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெலுக்கு ஆட்டநாயகன் விருதும், 178 ஓட்டங்கள் சேர்த்த சுப்மான் கில்லுக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவின் உத்திக்கு கிடைத்த ஆறுதல் வெற்றி! பரிசோதனை முயற்சியில் இந்தியா வென்றதா?

பட மூலாதாரம், Getty Images

புதிய உத்திக்கு கிடைக்குமா வெற்றி?

இந்த உலகக் கோப்பைத் தொடரில் பல அணிகள் கையில் எடுக்கப் போகும் ‘ஆக்ரோஷமான மட்டையாட்டம்’ (Aggressive batting) உத்தியை ஆஸ்திரேலிய, இந்திய அணிகள் இந்தத் தொடரில் பரிசோதனை செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளனர். இந்திய அணியும் அந்த உத்தியை கையாண்டு முதல் இரு போட்டிகளில் வென்று தொடரை வசமாக்கியது. ஆனால், 3வது போட்டியில் நடுவரிசை பேட்டர்களின் சொதப்பலான ஆட்டதால் தோல்வி அடைந்தது.

தொடக்கப்புள்ளியான நியூசிலாந்து

1992 உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்தின் கிரேட் பேட்ச், மார்ட்டின் க்ரோவ் முதன் முதலில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணிகளை ஓடவிட்டனர். இருவரின் எதிர்பாராத காட்டடி மட்டையாட்டம்கால், பந்துவீச்சாளர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்தனர். எப்படி பந்துவீசுவது என்ற குழப்பத்தில் ஆழ்த்தச் செய்து, இருவரும் மட்டையாட்டம்கில் மாற்றத்தை கொண்டுவந்தனர். அதற்கு முன்புவரை, பாரம்பரிய முறையில்தான் பேட்டர்கள் விளையாடியதை கிரேட்பேட்ச் மற்றும் குரோவ் உடைத்தனர்.

சுற்றுராபின் சுற்றில் நடந்த 1992 உலகக் கோப்பைத் தொடரில் ஒரு போட்டியில் மட்டும் தோல்வி அடைந்து 9 ஆட்டங்களி்ல் நியூசிலாந்து வென்றது. ஆனால், காலிறுதியில் அடைந்த தோல்வி நியூசிலாந்தை வெளியேற்றியது.

ஆஸ்திரேலியாவின் உத்திக்கு கிடைத்த ஆறுதல் வெற்றி! பரிசோதனை முயற்சியில் இந்தியா வென்றதா?

பட மூலாதாரம், Getty Images

ரணதுங்காவின் சாதுர்யம்

இந்த ஃபார்முலாவை சிறிது பட்டைத் தீட்டி, 1996ம் ஆண்டு இலங்கையின் முன்னாள் கேப்டன் ரணதுங்கா உலகக் கோப்பையில் ஜெயசூர்யா, கலுவிதராணா மூலம் அறிமுகப்படுத்தினார். தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெயசூர்யா, கலுவிதராணா ஆகியோரை தொடக்க வரிசையில் களமிறக்கி ஆக்ரோஷமாக பேட் செய்ய வைத்து எதிரணிகளை திக்குமுக்காட வைத்தார் ரணதுங்கா.

ரணதுங்கா அறிமுகம் செய்த இந்த வாய்ப்பாடு மாபெரும் வெற்றியைப் பெற்றுக்கொடுத்து, உலகக் கோப்பையையும் வெல்ல வைத்தது. அதற்கு முன்பெல்லாம் பவர்-ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தாத அணிகள் அதன்பின் இப்படியும் அடிக்கலாமா என்று யோசிக்கத் தொடங்கினர். ஜெயசூர்யாவின் மட்டையாட்டம், மட்டையாட்டம்கில் பெரிய தலைமுறை மாற்றத்தை ஏற்படுத்தியது.

அதன்பின், சச்சின், சேவாக், கில்கிறிஸ்ட், கிப்ஸ், கிறிஸ்டன், மெக்கலம், லாரா, சயத் அன்வர், நாதன் ஆஸ்லே என ஒவ்வொரு அணியிலும் குறிப்பிட்ட பேட்டர்கள் மட்டும் அதிரடி மட்டையாட்டம்கை கையில் எடுத்து விளையாடத் தொடங்கினர். இந்த அதிரடி பேட்டர்களை நம்பித்தான் சில நேரங்களில் அணியே இருந்தது. ஒரு அணியில் அதிரடி பேட்டர் ஆட்டமிழந்துவிட்டால், வாத்துக்கூட்டம் போல் வரிசையாக பேட்டர்கள் ஆட்டமிழந்த கதையும் இருந்தது.

குறிப்பாக இந்திய அணியில் சச்சின் ஆட்டமிழந்துவிட்டாலே மற்ற பேட்டர்கள் நம்பிக்கையிழந்து சீரான இடைவெளியில் மட்டையிலக்குடுகளை பறிகொடுத்து மோசானதோல்விகளைக் கண்ட போட்டிகள் ஏராளம்.

ஆஸ்திரேலியாவின் உத்திக்கு கிடைத்த ஆறுதல் வெற்றி! பரிசோதனை முயற்சியில் இந்தியா வென்றதா?

பட மூலாதாரம், Getty Images

மோர்கனின் மாற்றம்

தனிஒரு பேட்டர் மட்டும் ஏன் அதிரடி மட்டையாட்டம்கை கையாள வேண்டும்,அணியில் உள்ள பேட்டர்கள் அனைவரும் ஏன் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடாது என்று இங்கிலாந்து சிந்தித்தது.

இந்த ஃபார்முலாவை சிறிது மாற்றி ஒட்டுமொத்த அணி வீரர்களுமே இதேபோல் அதிரடியாக ஆடினால் எப்படி இருக்கும் என்பதை இங்கிலாந்து அணி 2019 உலகக் கோப்பையில் செயல்படுத்தியது.

2019ம் ஆண்டு உலகக் கோப்பைக்கு முன்பிருந்த இந்த உத்தியை மோர்கன் தலைமையிலான இ்ங்கிலாந்து அணி திட்டமிட்டு, பல்வேறு போட்டிகளில் செயல்படுத்தி வெற்றி கண்டது.

இதன் மூலம் முதலில் பேட் செய்தால் எதிரணியைச் மிரளச் செய்யும் விதத்தில் பெரிய ஸ்கோரை அடித்துவிடுவது, சேஸிங் செய்யும்போது, வெற்றியைப் பற்றி கவலைப்படாமல் அனைத்து பேட்டர்களும் அதிரடியாக மட்டையாட்டம் செய்வது என பரிசோதித்து பார்த்தனர்.

இதன் மூலம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ரன்ரேட் எகிறும். டி20 போட்டிக்கு இணையாக ரன்ரேட்டை கொண்டு செல்ல முடியும், சில நேரங்களில் ஏதாவது ஒரு பேட்டர் நிலைத்துவிட்டாலே வெற்றி உறுதியாகிவிடும், நிகர ரன்ரேட் உச்சத்துக்கு சென்றுவிடும். உதாரணமாக 30 ஓவர்களிலேயே 250 ரன்களை எட்டிவிட முடியும். அடுத்த 20 ஓவர்களில் சராசரியாக 100 ஓட்டங்கள் அடித்தாலே 350 ரன்களை எளிதாகத் தொட்டுவிடலாம்.

ஆஸ்திரேலியாவின் உத்திக்கு கிடைத்த ஆறுதல் வெற்றி! பரிசோதனை முயற்சியில் இந்தியா வென்றதா?

பட மூலாதாரம், Getty Images

2024 உலகக் கோப்பையில் கை கொடுக்குமா?

இந்த உத்தியைத்தான் வரும் உலகக் கோப்பையில் பெரும்பாலான அணிகள் கையில் எடுக்கப் போகிறார்கள் எனப் புரிந்து கொள்ள முடிகிறது. முதலில் பேட் செய்யும் அணி, பாரம்பரிய கிரிக்கெட்(ஆர்த்டாக்ஸ் கிரிக்கெட்) முறையில் நிதானமாக ஆடி 250 ஓட்டங்கள் சேர்க்கும் நிலையில் இருந்து மாறுபடலாம். முதலில் பேட்செய்யும் அணி, சேஸிங்கை கடுமையாக்கும் வகையில் பெரிய ஸ்கோரை இலக்காக வைக்கலாம்.

சேஸிங் செய்யும் அணியும் தான் எதற்கும் சளைத்தவர்கள் இல்லை என்ற ரீதியில் மட்டையாட்டம் செய்து, இலக்கை அடைய முயற்சிக்கும். இந்த “அக்ரஸிவ் மட்டையாட்டம்” முறையை அணியில் உள்ள அனைத்து பேட்டர்களும், எந்த நிலையில் களமிறங்கும் பேட்டர்களும் செயல்படுத்தும்போது வெற்றி கிடைக்கவும் வாய்ப்புள்ளது, தோல்வியும் ஏற்படலாம். ஆனால், நிகர ரன்ரேட் எனப் பார்க்கும்போது உயர்வாக இருக்கும்.

இந்த “அக்ரஸிவ் மட்டையாட்டம்” முறையை அணியில் உள்ள ஒருவர் மட்டுமே கையாண்டது எல்லாம் மலைஏறிவிட்டது, இந்த உலகக் கோப்பையில் ஒரு அணியில் உள்ள அனைத்து வீரர்களுமே இந்த உத்தியைக் கையாளலாம்.

இந்த உத்தியைத்தான் இந்திய அணி இரு போட்டிகளில் கையாண்டு வெற்றி கண்டது, ஆஸ்திரேலிய அணியும் முழுபலத்துடன் களமிறங்கி அந்த உத்தியை பயன்படுத்தியது.

ஆஸ்திரேலியாவின் உத்திக்கு கிடைத்த ஆறுதல் வெற்றி! பரிசோதனை முயற்சியில் இந்தியா வென்றதா?

பட மூலாதாரம், Getty Images

‘எதிர்பார்க்கவில்லை…’

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் வெற்றிக்குப்பின் கூறுகையில் “ விண்மீன்கள், மேக்ஸ்வெல் ஃபார்முக்கு வந்தது சிறப்பு. இருவரும் கடந்த 2 மாதங்களாக பெரிதாக விளையாடவில்லை. மேக்ஸ்வெல் 4 மட்டையிலக்குடுகளை வீழ்த்தியது, விண்மீன்க் தனது பந்துவீச்சு ஃபார்மை மீட்டது எதிர்பார்க்காதது. டிராவிஸ் ஹெட் தயாராகவில்லை என்பதால், உலகக் கோப்பையில் தொடக்க வீரராக மார்ஷ் களமிறங்கலாம். வார்னர், மார்ஷ் நல்ல கூட்டணி அமைத்தனர்” எனத் தெரிவித்தார்.

இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியில் 5 மாற்றங்கள் செய்யப்பட்டு முழுபலத்துடன் களமிறங்கியது, இந்திய அணியில் 6 மாற்றங்கள் செய்யப்பட்டு ரோஹித் சர்மா களமிறங்கினார்.

இந்தியா தோல்விக்கு காரணம்

ஆஸ்திரேலிய அணியில் மிட்ஷெல் மார்ஷ், வார்னர், லாபுஷேன், ஸ்மித் ஆகியோர் அரைசதம் அடித்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக்காரணமாக அமைந்தனர். இதற்கு பதிலடியாக ரோஹித் சர்மாவும் 57 பந்துகளில் 81 ஓட்டங்கள் சேர்த்தார், கோலியும் 65-வது அரைசதம் அடித்து பதிலடி கொடுத்தார்.

ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு நடுவரிசை பேட்டர்களான ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், ராகுல் ஆகியோர் கைகொடுக்காதது தோல்விக்கு காரணமாகஅமைந்தது. இந்திய அணியின் ஸ்கோர் தொடக்கத்தில் சென்ற வேகத்தோடு ஒப்பிடுகையில் நடுவரிசை பேட்டர்கள் இன்னும் சிறப்பாக ஆடியிருந்தால் சேஸிங் செய்திருக்கலாம். பெரிய இலக்கை துரத்தும்போது இந்திய அணிக்கு இருக்கும் பலவீனம் இதில் வெளிப்பட்டது.

வார்னர், மார்ஷ் விளாசல்

முழுபலத்துடன் ஆஸ்திரேலியா களமிறங்கியதால், முதல் 10ஓவர்களிலேயே மார்ஷ், வார்னர் கூட்டணி 11 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உள்பட 90 ரன்களைக் குவித்தது. குறிப்பாக ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சு குறிவைக்கப்பட்டு அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் பும்ரா தான் வீசிய முதல் 5 ஓவர்களிலேயே 51 ரன்களை வாரி வழங்கினார், ஆனால், ஆஸ்திரேலிய நடுவரிசை சொதப்பியதால், கடைசி 5 ஓவர்களில் 30 ரன்களைக்கொடுத்து 3 மட்டையிலக்குடுகளையும் வீழ்த்தினார்.

குறிப்பாக மார்ஷ், இந்திய வேகப்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை துவைத்து எடுத்து, தான் சந்தித்த 2வது ஓவரிலேயே 2பவுண்டரி, சிக்ஸர் என வெளுத்தார். முகமது சிராஜ் சுற்றில் வார்னர் 16 ரன்களையும், பிரசித் கிருஷ்ணா சுற்றில் 19 ரன்களையும் வெளுத்து 6.1 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களை எட்டியது. ஒருநாள் ஆட்டம் போன்று இல்லாமல் டி20 போட்டியைப் போல் வார்னர், மார்ஷ் மட்டையாட்டம் இருந்தது.

டேவிட் வார்னர் இந்தத்தொடரில் தனது 3வது அரைசதத்தை 32 பந்துகளில் அடித்து, வித்தியாசமான ஷாட்-க்கு முயற்சித்து மட்டையிலக்கு கீப்பர் ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ராக்கெட் வேகத்தில் ரன்ரேட்

மார்ஷ், ஸ்மித் ஓட்டத்தை வேகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் 10-வது சுற்றில் சுழற்பந்துவீச்சை ரோஹித் சர்மா அறிமுகம் செய்தார். ஆனாலும் மார்ஷ், ஸ்மித் பவுண்டரிகளாக அடித்து ரன்ரேட்டை உயர்த்தினர். மார்ஷ் 45 பந்துகளில் அரைசதம் எட்டினார், ஆஸ்திரேலிய அணியும் 22 ஓவர்களில் 150 ரன்களை எட்டியது.

பும்ரா தனது 2வது ஸ்பெல்லை வீசியபோதும், மார்ஷ் அவரைக் குறிவைத்து வெளுத்து வாங்கி ஹாட்ரிக் பவுண்டரிகளாக விளாசினார். ஸ்மித், மார்ஷ் கூட்டணி 119 பந்துகளில் 137 ரனகள் சேர்த்தனர். 26.2 ஓவர்களில் ஆஸ்திரேலியா 200 ரன்களைக் கடந்தது, 400 ரன்களை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

மட்டையிலக்கு சரிவு

ஆனால், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் ஆகியோரின் பந்துவீச்சு ஆஸ்திரேலிய பேட்டர்களின் ரன்குவிப்புக்கு பிரேக் போட்டது. மார்ஷ் 96 ஓட்டங்கள் சேர்த்தபோது குல்தீப் பந்துவீச்சில் மட்டையிலக்குடை இழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் ஸ்மித் கால்காப்பில் வாங்கி சிராஜ் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். அலெக்ஸ் கேரேவுக்கு “ஸ்லோ-ஆப்கட்டர்” வீசி பும்ரா அவரை வெளியேற்றினார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல், பும்ராவின் துல்லியமான யார்கர் பந்துவீச்சில் மட்டையிலக்குடை பறிகொடுத்தார். 32 முதல் 43 ஓவர்களில்தான் இந்த திருப்பம் நடந்தது. ஆஸ்திரேலிய அணி இந்த 11 ஓவர்களில் 57 ரன்களுக்குள் 4 மட்டையிலக்குடுகளை இழந்து, திடீரென ரன்குவிப்பில் தொய்வடைந்தது.

ஆனால், லாபுஷேன் தனது ரன்சேர்க்கும் வேகத்தைக் குறைக்கவில்லை, 58 பந்துகலில் 78 ஓட்டங்கள் சேர்த்தார். கடைசி வரிசை வீரர்கள் கைகொடுக்காததால் ஆஸ்திரேலிய அணி 352ரன்களில் பந்துவீச்சு சுற்றுஸை முடித்தது.

இந்திய அணி கடைசி நேரத்தில் ஆட்டத்தை இழுத்துப் பிடித்தாலும், கடைசி 20 ஓவர்களில் 122 ரன்களையும், கடைசி 10 ஓவர்களில் 66ரன்களையும் இந்தியப் பந்துவீச்சாளர்கள் வாரி வழங்கினர்.

பழைய ‘ரோஹித்தை’ பார்த்த ரசிகர்கள்

ஆஸ்திரேலியாவின் உத்திக்கு கிடைத்த ஆறுதல் வெற்றி! பரிசோதனை முயற்சியில் இந்தியா வென்றதா?

பட மூலாதாரம், Getty Images

இந்தியஅணிக்கு 353 ஓட்டங்கள் என்பது மிகப்பெரிய இலக்குதான் என்றாலும், நம்பிக்கையுடன் வாஷிங்டன் சுந்தருடன், ரோஹித் சர்மா களமிறங்கி பரிசோதித்தார். பழைய ரோஹித் சர்மாவை ரசிகர்களுக்கு அடையாளப்படுத்தும் விதத்தில் கொலைகாரன் ஆட்டம் நேற்று அமைந்திருந்தது.

ராஜ்கோட் ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமாக இருந்ததால், ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சை ரோஹித் சர்மா துவம்சம் செய்யத் தொடங்கினார். விண்மீன்க், கம்மின்ஸ், ஹேசல்வுட் வீசிய பந்துகள் சிக்ஸர்களுக்கும், பவுண்டரிகளுக்கும் பறந்தன. ரோஹித் சர்மா 31 பந்துகளில் அரைசதம் அடித்தார். சுந்தர், ரோஹித் கூட்டணி 65 பந்துகளில் 74 ஓட்டங்கள் சேர்த்தனர்.

ரோஹித் சர்மாவின் மட்டையாட்டம் வேகத்துக்கு வாஷிங்டன் சுந்தரால் ஈடுகொடுத்து பேட் செய்யவில்லை. 18 ஓட்டங்களில் சுந்தர் மட்டையிலக்குடை பறிகொடுத்தார்.

ஆஸ்திரேலியாவின் உத்திக்கு கிடைத்த ஆறுதல் வெற்றி! பரிசோதனை முயற்சியில் இந்தியா வென்றதா?

பட மூலாதாரம், Getty Images

கோலியின் 65-வது அரைசதம்

ரோஹித், விராட் கோலி கூட்டணி சேர்ந்தபின் இந்திய அணி ரன்ரேட் ஆஸ்திரேலியாவுக்கு இணையாகவே சென்றது. ஆனால், பகுதிநேரப் பந்துவீச்சாளரான மேக்ஸ்வெல் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ரோஹித்ச ர்மா 81 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதோடு இந்திய அணியின் ஓட்டத்தை குவிப்புக்கும் பெரிய ஸ்பீடு பிரேக்கரை ஆஸ்திரேலியா அமைத்தது.

ரோஹித் சர்மா ஆட்டமிழந்து சென்றபின், அடுத்த 10 ஓவர்களில் இந்திய பேட்டர்கள் 2 பவுண்டரி,ஒருசிக்ஸர் மட்டுமே அடித்திருந்தனர், ரன்ரேட்டும் படுத்துவிட்டது. விராட் கோலி 65-வது அரைசதத்தை அடித்தநிலையில் 56 ஓட்டத்தில் மேக்ஸ்வெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ராகுல், ஸ்கை ஏமாற்றம்

அடுத்துவந்த ஸ்ரேயாஸ், கேஎல் ராகுல் இருவரும் பவுண்டரி அடிக்கவே சிரமப்பட்டனர். வெற்றிக்கான ரன்ரேட் அதிகரித்த நிலையில் இருவரின் மட்டையாட்டம்கிலும் உயிரில்லாமல் இருந்தது. விண்மீன்க் பந்துவீச்சில் ராகுல் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் 8 ஓட்டங்கள் சேர்த்து ஏமாற்றி பெவிலியன் திரும்பினார். ஸ்ரேயாஸ் 48 ஓட்டங்கள் சேர்த்து மேக்ஸ்வெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா 35 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தரை தொடக்கவீரராக களமிறக்குவதற்குப் பதிலாக ஜடேஜாவை களமிறக்கியிருக்கலாம். அதன்பின் கடைசி வரிசை பேட்டர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால் இந்திய அணி 286 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது.

ஆஸ்திரேலியாவின் உத்திக்கு கிடைத்த ஆறுதல் வெற்றி! பரிசோதனை முயற்சியில் இந்தியா வென்றதா?

பட மூலாதாரம், Getty Images

‘எங்களின் நிலை எங்களுக்குத் தெரியும்’

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் “ என்னுடைய மட்டையாட்டம் ஃபார்ம் எனக்குமகிழ்ச்சியளிக்கிறது. இதே பாணியில் விளையாடப் போகிறேன், அதுதான் சிறப்பாக இருக்கும். கடந்த 8 ஒரு நாள் போட்டிகளிலும் வித்தியாசமான சூழல்களில் விளையாடி இருக்கிறோம், பல்வேறு சவால்களை எதிர்கொண்டோம். இன்று எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை என்றாலும், இந்த ஆட்டத்தைப் பற்றி அதிகமாக சிந்திக்கவில்லை.

நாங்கள் தொடர் முழுவதும் சிறப்பாக ஆடினோம். 15வீரர்கள் கொண்ட உலகக் கோப்பை அணி குறித்து தெளிவாக இருக்கிறோம், வீரர்களின் பங்களிப்பு தெரியும். நாங்கள் குழப்பமடையவில்லை. நாங்கள் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது எங்களுக்குத் தெரியும்” எனத் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »