Press "Enter" to skip to content

எம்.எஸ்.சுவாமிநாதன் மரணம்: இந்தியாவில் வேளாண் புரட்சிக்கு வித்திட்டவர்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் பசுமைப் புரட்சி எனப்படும் விவசாய உற்பத்தியைப் பெருக்குவதில் முன்னோடியாகச் செயல்பட்ட விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார். அவருக்கு வயது 98.

சென்னையில் வயது மூப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்தது.

இந்தியாவில் அரிசித் தட்டுப்பாட்டை போக்குவதற்காக பல்வேறு உத்திகளை அறிமுகப்படுத்தியவர் என எம்.எஸ்.சுவாமிநாதன் அழைக்கப்பட்டார்.

1925-ஆம் ஆண்டு கும்பகோணத்தில் பிறந்த இவர், சர்வதேச அளவில் தனது வேளாண் ஆராய்ச்சிப் பணிகளுக்காக அறியப்பட்டவர்.

எம்.எஸ்.சுவாமிநாதன்

பட மூலாதாரம், Getty Images

20ஆம் நூற்றாண்டின் செல்வாக்குமிக்க 20 ஆசியர்களின் ஒருவராக டைம் பத்திரிகையால் எம்.எஸ்.சுவாமிநாதன் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த பட்டியலில், இவரைத் தவிர இந்தியாவிலிருந்து மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநராக 1972ஆம் ஆண்டு முதல் 1979 வரை பணியாறியுள்ளார்.

இதுமட்டுமின்றி, பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள உலக அரிசி ஆய்வு நிறுவனத்தின் தலைமை இயக்குநராக (1982-88) எம்.எஸ். சுவாமிநாதன் பணியாற்றியுள்ளார்.

1988ஆம் ஆண்டு எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி, கிராமப்புற பகுதிகளில் வேளாண் தொழில் வளர்ச்சி பெற பங்காற்றினார்.

இந்த தொண்டு நிறுவனம், தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவில் 14 மாநிலங்களில் வேளாண் சார்ந்த ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு விவசாயிகளுக்கு உதவி செய்து வருகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »