Press "Enter" to skip to content

ஆந்திராவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த அவசரம் காட்டும் ஜெகன் மோகன் ரெட்டி

பட மூலாதாரம், CMO ANDHRA PRADESH

சாதிவாரி கணக்கெடுப்பை முடித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது பிகார் அரசு. அதனைத் தொடர்ந்து, ஆந்திரப் பிரதசே அரசும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு தயாராகி விட்டது.

ஆனால், இதில் பிகார் அரசு பின்பற்றும் கொள்கைக்கும் ஆந்திர அரசு முன்மொழிந்த கொள்கைக்கும் வித்தியாசம் உள்ளது.

பிகாரில், இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வருவாய்த் துறையினர் தலைமையில் பணிகள் நிறைவடைந்தன.

ஆனால் ஆந்திராவில், கிராமச் செயலகத்தின் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்டு சாதிக் கணக்கெடுப்பை நடத்த ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.

தன்னார்வலர்களின் பங்கு குறித்து ஏற்கனவே பல விமர்சனங்கள் உள்ளன. இந்த விவகாரம் நீதிமன்றங்கள் தலையிடும் அளவுக்கு சென்றது.

நலத்திட்டங்களை செயல்படுத்தும் களப்பணியில் தன்னார்வலர்களை விலக்கி வைக்க உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இவர்களை சாதிவாரி கணக்கெடுப்பில் சேர்த்ததற்கு தற்போது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆந்திரா மாநிலத்தில் நவம்பர் 15 ஆம் தேதி முதல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்துள்ள அரசு, பல்வேறு சமூகத்தினர் உள்பட அனைவரின் கருத்துகளையும் பெறுவதாக கூறி வருகிறது. இதற்காக கூட்டங்களும் நடத்தப்பட உள்ளன.

சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்திக்காட்டிய பிகார் அரசு

பீகார் அரசு

பட மூலாதாரம், Getty Images

1931 க்குப் பிறகு நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லை. ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை எஸ்சி. மற்றும் எஸ்டி. மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டுமே சேகரிக்கப்படுகிறது.

பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற சாதிகளின் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரிடம் இருந்து வருகிறது.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரில்(பிசி) மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (எம்பிசிக்கள்) எண்ணிக்கையை சரியான புள்ளிவிவரங்களுடன் அறிந்துகொள்வது அந்தந்த வகுப்பினருக்கு வழங்கப்படும் திட்டங்களை சரியான நடைமுறைக்கு கொண்டுவர உதவும் என்றும் எதிர்க்கட்சிகள் வாதிடுகின்றன.

தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. பாஜக தலைவர்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது சாதிவாரி கணக்கெடுப்புக்கு கோரிக்கை வைத்திருந்தாலும், தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அதை எதிர்க்கிறது.

பிகாரில் உள்ள நிதிஷ் குமார் அரசு லட்சியமாகக் கொண்டு சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொண்டது. அந்த செயல்முறை ஆறு மாதங்கள் நீடித்தது.

வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் சாதிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. களப்பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து, பொறுப்புகளை ஒப்படைத்து, வீடு வீடாக விவரங்களை சேகரித்து, அவற்றை இணைத்துக்கொள்ளும் வரை, முழு செயல்முறையும் களப்பணியாளர்களுக்கு கற்றுக்கொடுத்து, இந்த கணக்கெடுப்பை நடத்தி முடித்ததாக பிகார் அரசு தெரிவித்தது.

இந்த சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின்போது, சாதிவாரி கணக்கெடுப்பு அறிவியல்பூர்வமாகத்தான் நடத்தப்பட்டது என்று மாநில அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

ஆந்திராவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு எப்படி நடத்தப்படுகிறது?

சாதிவாரிக்கணக்கெடுப்பு

பட மூலாதாரம், UGC

ஆந்திர அரசும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த வரவு செலவுத் திட்டம் கூட்டத்தின் போது, ​​ஆந்திர சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பியது.

ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு மட்டுப்படுத்தப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது.

ஏறக்குறைய 150 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பும் இம்முறை நிறுத்தப்பட்டது. கடந்த காலங்களில், உலகப் போர்கள் மற்றும் தொற்றுநோய்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பைத் தடுத்தன. ஆனால் இந்த முறை அது கொரோனா என்ற பெயரில் நிறுத்தப்பட்டது.

கொரோனா பாதிப்பு குறைந்த பிறகும் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த அரசு தயாராக இல்லை.

சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையும் இதற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

இதனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆந்திர சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசு ஏற்கவில்லை.

அதே சமயம் சாதிவாரி கணக்கெடுப்பை பீகார் மாநில அரசு செய்து வருவதாகவும், ஜெகன் அரசும் அந்த வகையில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், பfகாரில் கடந்த காலங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திய அதிகாரிகளின் மேற்பார்வையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

ஆனால், ஆந்திராவில் பிசி,, எஸ்சி, எஸ்டி, சிறுபான்மையினர், வார்டு/கிராமச் செயலக முதன்மைச் செயலாளர்கள் பிற்படுத்தப்பட்ட(பிசி) நலத்துறை அமைச்சர் செல்லுபூனா வேணுகோபால கிருஷ்ணாவின் முன்மொழிவுகளின்படி நடத்தி வருகின்றனர்.

“நவம்பர் 15 முதல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். அதற்கான செயலியை உருவாக்குவோம். தலைமைச் செயலக ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களின் ஒத்துழைப்புடன் இது மேற்கொள்ளப்படும். யார் வேண்டுமானாலும் தங்கள் ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை அரசுக்கு தெரிவிக்கலாம்.

விசாகா, ராஜமகேந்திராவரம், விஜயவாடா, கர்னூல், திருப்பதி ஆகிய மையங்களில் நடக்கும் கூட்டங்களிலும் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்தை தெரிவித்தால் கவனத்தில் எடுப்போம்,” என்று செல்லுபூனா வேணுகோபால கிருஷ்ணா பிபிசியிடம் கூறினார்.

‘சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு பின் அரசியல் நோக்கம் உள்ளது’- எதிர்க்கட்சிகள் விமர்சனம்

சாதிவாரிக் கணக்கெடுப்பு

பட மூலாதாரம், GETTY IMAGES

மறுபுறம் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் முடிக்கப்பட்டு இறுதி பட்டியல் வெளியிட தயாராகி வருகிறது.

கிராம/வார்டு தலைமைச் செயலகப் பணியாளர்களுக்கு, அரசு ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்களுக்குப் பதிலாக, பூத் நிலை அலுவலர்கள் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

அதே சமயம், தற்போது சாதிவாரிக் கணக்கெடுப்பும் இவர்களால்தான் நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

பிகார் போன்ற ஒரு மாநிலத்தில், மொத்த வருவாய் இயந்திரத்தை பயன்படுத்தி அறிவியல் ரீதியாக சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்க ஆறு மாதங்கள் ஆனது.

ஆனால், ஆந்திராவில், இந்த விவகாரம், பொதுத் தேர்தலுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே தொடங்கியுள்ளது.

அரசியல் இலக்குகளை அடைவதற்காக ஜெகன்மோகன் அரசு அவசரம் காட்டுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.

“சாதிவாரி கணக்கெடுப்பில் அரசு நேர்மையாக இருப்பதாக தெரியவில்லை. தன்னார்வலர்கள் மூலம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என கூறுவது பொறுப்பற்ற செயல்.

நீண்ட நாட்களுக்கு பின் நடக்கும் சாதி வாரியான கணக்கறிக்கையை முறையாக செய்ய வேண்டும். .அதிகாரிகள் அதற்கேற்ப தயாராக வேண்டும்.ஆனால் இவ்வளவு குறுகிய காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு என்ற விளம்பரம் அடுத்த தேர்தல் லாபத்திற்காக மட்டும் தான்.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் உட்பட மற்றவர்களை உயர்த்தும் எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. பீகாரின் அனுபவங்களை அரசாங்கம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.” என மார்க்சிஸ் கம்யூனிஸ் கட்சியின் ஆந்திர மாநிலச் செயலாளர் வி.சீனிவாச ராஜ் கூறினார்.

மேலும், அரசு அவசரமாக இந்தப் பணியைச் செய்தால், உரிய பயன் கிடைக்குமா எனத் தெரியவில்லை எனக் கூறினார்.

‘மக்கள் தொகை கணக்கு ஏற்கனவே உள்ளது’

சாதிவாரிக் கணக்கெடுப்பு

ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஒவ்வொரு குடும்பத்தின் உறுப்பினர்களின் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக சேகரிக்கப்பட்டன.

இதில் சாதிகள் மற்றும் மதங்கள் பற்றிய விவரங்களும் அடங்கும். சந்திரபாபு ஆட்சியில் சேகரிக்கப்பட்ட அந்த புள்ளிவிவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

காபுகளுக்கு இடஒதுக்கீடு குறித்த விவாதத்தின் போது மட்டும், கபு, தெலகா, பலிஜா, ஒன்டார் சாதிகளின் எண்ணிக்கை சதவீதம் வெளியிடப்பட்டது.

ஜெகன் அரசு கிராமச் செயலக முறையை அறிமுகப்படுத்திய பிறகு, ஒவ்வொரு குடும்பத் தகவல்களும் தன்னார்வலர்களால் சேகரிக்கப்பட்டன.

அவை தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்ட செயலிகளின் மூலம் பதிவு செய்யப்பட்டன. இதில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தொடர்புடைய நிதி, சாதி, மத அம்சங்கள் அனைத்தும் இடம் பெற்றுள்ளன.

அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்காக தவிர அவை வெளிப்படையாக பொதுத்தளத்தில் வெளியிடப்படவில்லை. தன்னார்வளர்கள் சேகரித்த தகவல்கள் கசிந்து வருவதாக தெலுங்கு தேசம் மற்றும் ஜன சேனா தலைவர்களும் விமர்சித்துள்ளனர்.

தற்போது மீண்டும் ஒருமுறை விவரங்களை சேகரிப்போம் என அரசு கூறுவதால், தன்னார்வளர்களிடம் உள்ள பழைய தகவல்களை வெளியிடுவார்களா என்ற சந்தேகம் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரிடம் இருந்து வருகிறது.

“மக்கள் தொகை கணக்கெடுப்பு யாரால், எப்பொழுது நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. யார், எப்போது, ​​எப்படி என்பதை முடிவு செய்து அனைவரின் கருத்தையும் ஏற்பதாக அரசு கூறுவது வேடிக்கையானது.

எம்பிசிக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமானால் சாதிவாரிக் கணக்கெடுப்பு அவசியம். பிகார் அதைச் செய்திருக்கிறது. இருப்பினும், ஆந்திராவில் இது ஒருதலைப்பட்சமாக நடத்தப்படுகிறது,” என்று பாம் சேஃப் நிறுவனத்தின் பிரதிநிதி ஆர்.ரவிச்சந்திரா தெரிவித்தார்.

அறிவியல் ரீதியாக சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால், அதற்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆந்திர சட்டமன்றம்

பட மூலாதாரம், ANI

மக்கள்தொகை கணக்கெடுப்பை அறிவியல் பூர்வமாக மேற்கொள்ள வேண்டும். அதற்கு சில அளவுகோல்கள் உள்ளன.

சம்பந்தப்பட்ட பணியாளர்கள் முதல் அந்தப்பணியில் ஈடுபடும் அனைவருக்கும் சரியாகப் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

“ஆந்திரப் பிரதேசத்தில் சாதி வாரியாக இடஒதுக்கீடு சதவீதம் நிர்ணயிப்பது வரவேற்கத்தக்க விஷயம். ஆனால், அதற்குப் போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு தேவையான அளவு முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

அப்போதுதான் உண்மையான நோக்கம் நிறைவேறும். போதிய கவனம் செலுத்தப்பட வேண்டும். பிழையின்றி விவரங்கள் சேகரிக்க வேண்டும்.தேர்தலுக்கு முன் அரசியல் கேலிக்கூத்தாக இருக்காது என நம்புகிறோம்.அதற்கு அரசு பதில் அளிக்கும் என நம்புகிறோம்,” என ஆந்திர பிசி சாதி நல சங்கச் செயலாளர் கே.ஆனந்த ராவ் தெரிவித்துள்ளார்.

மோதி அரசு முன்வராவிட்டாலும், சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஜெகன் தயாராகி வருவது பாராட்டுக்குரியது எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அதேநேரம், சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பிசி சங்கங்களும், எதிர்க்கட்சிகளும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றன.

இருப்பினும், அரசாங்கம் ஆரம்பக்கட்டப் பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்பு எப்படி நடக்கும் என்பது சுவாரஸ்யமாக உள்ளது.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »