Press "Enter" to skip to content

வீட்டில் இருக்கும் தந்தை சந்திக்கும் சவால்கள் என்ன? பெண் போல ஹார்மோன் மாற்றம் வருமா?

பட மூலாதாரம், Getty Images

பெண்கள் வீடு, குழந்தைகள் மற்றும் குடும்பத்தை கவனித்துக் கொள்வது சாதாரணமானது என்று பொதுவாகக் கருதப்படுகிறது, ஆனால் ஒரு ஆண் வீடு மற்றும் குழந்தைகளை கவனித்துக் கொள்வதாக கூறினால், சிலர் அதை நம்ப மாட்டார்கள் அல்லது விநோதமாகக் கூட கருதலாம்.

ஆனால் பல நாடுகளில் “வீட்டில் இருக்கும் தந்தை” என்ற போக்கு அதிகரித்து வருவதை காணலாம். வீட்டில் இருக்கும் தந்தை என்பது வீட்டில் தங்கி தனது குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் தந்தையைக் குறிக்கும்.

இது சமூகத்தில் முன்பே நடந்திருப்பதாக நிபுணர்கள் கூறினாலும், இப்போது தான் இது விவாதிக்கப்படுகிறது.

ஆனால் இது உண்மையில் வெளிப்படையாக விவாதிக்கப்படுகிறதா? இன்றும், ஒரு ஆண் வீட்டில் தங்கி, வீட்டை கவனித்துக் கொண்டு குழந்தைகளை கவனித்துக் கொள்வதாக நாம் கேள்விபடும்போது, அதை கேட்டு இரண்டு விநாடிகள் கூட நம்மால் அமைதியாக இருக்க முடியாது. அல்லது அதை கேட்டு, ‘அடடே, பரவாயில்லையே’ என்று சொல்லவும் முடியாது.

வீட்டில் இருக்கும் தந்தைகள்

பட மூலாதாரம், Getty Images

வீட்டு வேலை செய்யும் ஆண்கள்

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கட் சலபதி, “நான் வீட்டில் இருக்கிறேன். நான் ஒரு ‘வீட்டில் இருக்கும் தந்தை’” என்கிறார். 2010-ம் ஆண்டு முதல் வெங்கட் வீட்டில் இருக்கிறார். 2006-ம் ஆண்டு தனது மகள் பிறந்த பிறகும், 2010-ம் ஆண்டு விவாகரத்துக்குப் பிறகும், தான் இனி என்ன செய்தாலும், தனது மகளுக்காக மட்டுமே செய்வேன் என்று வெங்கட் நினைத்தார்.

“நான் ஒரு வீட்டில் இருக்கும் தந்தையாக என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள மாட்டேன் என்று நினைக்கிறேன்.” என்கிறார். “முன்பு வீட்டில் இருப்பது பற்றி எல்லாரும் பேசுவார்கள். ஆனால் நான் அதை கண்டுகொள்ள மாட்டேன். முன்பு அந்த பேச்சுகள் என்னை தொந்தரவு செய்தன. ஆனால் காலம் போக போக அனைவரும் அமைதியாகிவிட்டனர்.” என்று மேலும் கூறுகிறார்.

வீட்டில் இருக்கும் தந்தைகள் அமெரிக்காவில் பொதுவானது. இந்தியாவிலும் வெங்கட் போன்ற தந்தைகள் இருப்பார்கள், ஆனால் எத்தனை ஆண்கள் வீட்டில் இருந்து வேலை செய்கிறார்கள் என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தரவுகளும் இல்லை. ஆனால் 1989 முதல் 2012 வரை அமெரிக்காவில் “வீட்டில் இருக்கும்” தந்தைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக பிபிசியில் வெளியிடப்பட்ட செய்தியாளர் அமண்டா ரூகெரியின் அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால் இன்னும் இதுபோன்ற குடும்பங்களின் எண்ணிக்கை அதிகமாக இல்லை என்பது தான் உண்மை.

அமெரிக்காவில், 5.6 சதவீத குடும்பங்களில், பெண்கள் வெளிவேலைக்கு செல்ல, ஆண்கள் வீட்டை கவனித்துக் கொள்கின்றனர். 28.6 சதவீத குடும்பங்களில் தந்தைகள் வெளியில் வேலைக்கு செல்கின்றனர், மற்றும் தாய்மார்கள் வீட்டில் உள்ளனர்.

எனினும், இந்த புள்ளிவிவரங்களில் வேலையற்றவர்களும் வேலை தேடுபவர்களும் அடங்குவர்.

ஐரோப்பிய யூனியனைப் பற்றி பேசினால், இந்த எண்ணிக்கை இன்னும் குறைவு. ஒரு மதிப்பீட்டின் படி, 100 ஆண்களில் ஒருவர் தங்கள் குழந்தைகளை கவனித்துக்கொள்ள தங்கள் பணியிலிருந்து ஆறு மாத இடைவெளி எடுக்கும் போது, மூன்று பெண்களில் ஒருவர் அவ்வாறு செய்கிறார்.

வீட்டில் இருக்கும் தந்தைகள்

பட மூலாதாரம், Getty Images

வீட்டை கவனித்துக் கொள்ளும் ஆண்கள்

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் பல்கலைக்கழகத்தில் மூத்த விரிவுரையாளரான பிரெண்டன் சர்ச்சில், “அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், ஒரு சிறந்த தந்தை தனது குழந்தைகளின் வளர்ப்பில் இதற்கு முன்னர் இருந்ததை விட அதிக ஆர்வம் காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” என்கிறார்.

பிரெண்டன் சர்ச்சில் சமூகவியல் கற்பிக்கிறார். அவர் குழந்தை வளர்ப்பு பற்றிய தலைப்பில் ஆராய்ச்சி செய்துள்ளார்.

வெங்கட் முன்னர் வேலையில் இருந்தார், ஆனால் அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பத்தினால், அவர் அந்த வேலையை விட்டுவிட வேண்டியிருந்தது.

“என் குழந்தை இருப்பதால், தினமும் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய எந்த வேலையும் நான் செய்ய முடியாது. பணம் சம்பாதிக்க வீட்டிலிருந்து சிறிய வேலைகளைச் செய்துகொண்டே இருக்கிறேன். ஏன் மறுபடியும் திருமணம் செய்து கொள்ளவில்லை, வீடு கவனித்துக் கொள்ளப்படும் என்று மக்கள் கேட்கிறார்கள். ஆனால் இந்த கேள்விகளுக்கு நான் எப்போதும் பதிலளித்ததே இல்லை.”என்கிறார் வெங்கட்.

வீட்டில் இருக்கும் தந்தைகள்

பட மூலாதாரம், Getty Images

வீட்டிலிருந்து வேலை செய்யும் தந்தை

பெங்களூருவில் உள்ள மருத்துவரும் பெற்றோர்கள் ஆலோசகருமான மருத்துவர் தேப்மிதா தத்தா, “அமெரிக்காவில் ஒரு தந்தை முழுமையாக வீட்டில் இருக்கும் தந்தையாக இருப்பது மிகவும் பொதுவானது, ஆனால் இந்தியாவில் இன்னும் அத்தகைய ஆண்கள் அதிகம் இல்லை, ஆனால் இது மெதுவாக மாறி வருகிறது” என்று கூறினார்.

“கடந்த சில வருடங்களில், குறிப்பாக கோவிட்-19க்குப் பிறகு, ‘வீட்டில் இருக்கும்’ தந்தைகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. நான் அவர்களை வீட்டில் இருக்கும் தந்தை என்று அழைக்க மாட்டேன், ஆனால் வீட்டிலிருந்து வேலை செய்யும் தந்தை என்று அழைப்பேன். என்னுடன் பணிபுரியும் ஆண்கள் பெரும்பாலும் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள், மேலும் இந்த ஆண்கள் அனைவரும் வீட்டில் பல பொறுப்புகளை கவனித்துக்கொள்கிறார்கள்” என்று அவர் கூறுகிறார்.

செயின்ட் லூயிஸ், அமெரிக்காவில் வசிக்கும் மயங்க் பகவத் ஒரு பத்திரிகையாளர். இருபது ஆண்டுகள் பத்திரிகையாளராகப் பணியாற்றிய பின்னர், தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார்.

“என் மனைவி இங்கே ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு உதவியாக இருக்க இங்கே வந்திருக்கிறேன். நான் வீட்டில் தங்கி வீட்டிலிருந்து வேலை செய்கிறேன்” என்று அவர் கூறுகிறார்.

மயங்க் பகவத் 2021-ம் ஆண்டு தனது மனைவியுடன் அமெரிக்கா சென்றார்.

“இங்கு வந்த பிறகு, சில விஷயங்களை மாற்ற வேண்டிய அவசியம் இருப்பதாக நாங்கள் ஒருமித்த முடிவு எடுத்தோம். வீட்டிலிருந்து வேலை செய்யும் என் முடிவில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று அவர் கூறுகிறார்.

வீட்டில் இருக்கும் தந்தைகள்

பட மூலாதாரம், MAYANK BHAGWAT

வீட்டில் இருப்பதில் இருக்கும் சவால்கள்

மருத்துவர் தேப்மிதா தத்தா, வீட்டிலிருந்து வேலை செய்யும் தந்தைகள் தங்கள் வேலையை மட்டுமல்ல, வீட்டின் பொறுப்புகளையும் நிறைவேற்றுவதாக குறிப்பிடுகிறார்.

“நம் சமூகத்தில், ஆண்கள் வீட்டு வேலைகளை அதிகம் செய்ய வேண்டிய அவசியம் இல்லாத வகையில் வளர்க்கப்படுகிறார்கள். பல நேரங்களில் வீட்டு வேலைகள் தங்களுக்கு அதிக சுமையாகி விடுவதாக அவர்கள் புகார் கூறுகின்றனர்” என்று அவர் கூறுகிறார்.

எனினும், புதிய தலைமுறை கணவர்களும் தந்தைகளும் வீட்டு வேலைகளை கற்றுக்கொள்ள சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக அவர் கூறுகிறார்.

“என்னிடம் வருபவர்கள் பெரும்பாலும் வீட்டிலிருந்து வேலை செய்யும் தந்தைகள். அவர்கள் உண்மையில் அனைத்தையும் கற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் இந்த போக்கு நகரங்களிலேயே அதிகமாக இருப்பதை கவனிக்கிறேன்” என்று அவர் கூறுகிறார்.

பிபிசியில் வெளியான ஒரு கட்டுரையின்படி, ஆண்கள் எந்த அளவிலும் பராமரிப்பு வழங்குவதில் பெண்களை விட தாழ்ந்தவர்கள் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

சமீபத்திய ஆராய்ச்சியின்படி, பெண்களைப் போலவே, ஆண்களும் தந்தையான பிறகு ஹார்மோன் மாற்றங்களை அனுபவிக்கிறார்கள். உடலில் ஏற்படும் இந்த மாற்றம் குழந்தை பராமரிப்புக்கு உதவுகிறது.

வீட்டில் இருக்கும் தந்தைகள்

பட மூலாதாரம், DR. DEBMITTA DUTTA

ஆரம்பத்தில் முழு நேரமும் வீட்டில் இருக்கத் தொடங்கியபோது, எல்லாம் மிகவும் கடினமாக இருந்ததாக வெங்கட் கூறுகிறார். “தினமும் சமைப்பதே ஒரு பெரிய வேலையாக தோன்றியது. முதலில், நீங்கள் உணவு தயாரிக்க அதிக நேரத்தை செலவிடுகிறீர்கள், பின்னர் உணவு சாப்பிட முடியாததாகிவிடுகிறது. பெற்றோர்களுடன் வாழ்ந்திருந்தால், அது கொஞ்சம் உதவியிருக்கும். ஆனால் இப்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு, எல்லாம் எளிதாகிவிட்டது. இப்போது நான் என் மகளின் விருப்பத்திற்கு ஏற்ப சமைத்து, மீதமுள்ள வீட்டு வேலைகளையும் செய்கிறேன்.” என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் வெங்கட்.

மயங்க் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் போது, “அமெரிக்காவில், ஒருவர் அனைத்தையும் தானே செய்ய வேண்டும். கடந்த பத்து மாதங்களில், வீட்டிலிருந்து வேலை செய்வதோடு கூட வீட்டின் முழு பொறுப்பையும் கையாண்டு வருகிறேன். மனைவியும் வீட்டு வேலைகளில் உதவுகிறார். சில நேரங்களில் நான் சோர்வடைகிறேன், அதனால் அவள் வேலை செய்கிறாள். ஆனால் அலுவலகத்தில் இருந்து வந்த பிறகு அவள் அதிக வேலை செய்ய அவசியம் இருக்கக் கூடாது என முயல்கிறேன். ஆனால் வீட்டை நடத்துவது எளிதான வேலை அல்ல, அதற்கு கடுமையான உழைப்பு தேவை என்பது தெளிவாகிறது.” என்கிறார்.

வீட்டில் இருக்கும் தந்தைகள்

பட மூலாதாரம், MAYANK BHAGWAT

“ அமெரிக்க சமூகம் மிகவும் திறந்த மனப்பான்மை கொண்டது. இங்குள்ள மக்கள் சிறிய குடும்பங்களில் வாழ்கிறார்கள். எனவே இங்கு வீட்டில் இருப்பது அல்லது வெளியே வேலைக்குச் செல்வது என இரண்டு பெற்றோர்களும் எல்லாவற்றையும் செய்ய வேண்டும். இருப்பினும், என் குடும்பம் இந்த முடிவை கேள்வி கேட்கவில்லை.” என்கிறார் மயங்க்.

ஆனால் அனைவரின் கதையும் ஒன்றாக இருப்பதில்லை என்கிறார் மயங்க்.

“என் மகள் இப்போது 12-ம் வகுப்பில் இருக்கிறாள். நான் வீட்டில் இருக்க முடிவு செய்ததற்கான காரணத்தை அவள் புரிந்துகொள்கிறாள். ஒரு ஆணுக்கு வீட்டில் இருந்து தனது குழந்தையை கவனித்துக்கொள்ளும் உரிமை இல்லையா?” என்று கேள்வி எழுப்புகிறார் வெங்கட்.

மயங்க் மற்றும் வெங்கட் ஆகிய இருவரும் தங்கள் மகள்களுக்கு அதிக நேரம் கொடுக்க முடிவதில் உடன்பட்டு திருப்தியடைந்துள்ளனர்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »