Press "Enter" to skip to content

இந்தியா – ரஷ்யா மாநாட்டை இரண்டாவது ஆண்டாக தவிர்த்த மோதி – அமெரிக்கா தலையீடு காரணமா?

பட மூலாதாரம், Getty Images

இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் 5 நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார்.

இந்தியா – ரஷ்யா இரு நாடுகளுக்கும் இடையிலான வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி இரண்டாவது ஆண்டாக பங்கேற்காததால் ஜெய்சங்கரின் பயணம் விவாதங்களை கிளப்பியுள்ளது.

இந்தியா – ரஷ்யா இடையே உயர்மட்ட தலைவர்கள் அளவிலான மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதில், ஒரு ஆண்டில் ரஷ்ய அதிபர் இந்தியாவுக்கும், மறு ஆண்டில் இந்திய பிரதமர் ரஷ்யாவுக்கும் செல்கிறார். இப்படி, இரு நாடுகளுக்கும் இடையே இதுவரை 21 உச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளன.

கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு வந்தபோது டெல்லியில் உச்சி மாநாடு நடைபெற்றது. கோவிட் தொற்றுநோய் பரவல் காரணமாக 2020-ஆம் ஆண்டு இந்த கூட்டம் நடத்தப்படவில்லை.

கடந்தாண்டு ரஷ்யா – யுக்ரேன் போர் பிப்ரவரி மாதம் தொடங்கியது. இதையடுத்து, இந்திய பிரதமர் மோதி 2022-ஆம் ஆண்டில் ரஷ்யாவுக்கு செல்லவில்லை. மேலும், கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் விளாடிமிர் புதின் கலந்துகொள்ளவில்லை. பிரதமர் மோதி கடைசியாக 2019-ஆம் ஆண்டு ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டார்.

பிரதமர் மோதியின் பயணம் ஒத்திவைக்கப்பட்டது ஏன்?

விளாடிமிர் புதின், நரேந்திர மோதி, ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், GETTY IMAGES

இந்தாண்டு உச்சி மாநாட்டுக்காக பிரதமர் நரேந்திர மோதி ரஷ்யா சென்றிருக்க வேண்டும். ஆனால், அவர் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அம்மாநாட்டில் பங்கேற்கவில்லை. 2023-ஆம் ஆண்டு முடிய இன்னும் ஐந்து நாட்களே உள்ளன.

எனினும் இதற்கான காரணம் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

ஆனால் , ’இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில், இரு தலைவர்களின் சந்திப்புக்கான ‘தேதி’யை நிர்ணயிப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது என ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

ரஷ்யாவில் இருந்து தனது ராஜிய பணியை தொடங்கிய ஜெய்சங்கர், தற்போது ரஷ்ய தலைவர்களை சந்திக்க மக்கள் விரும்பத்தக்கதுகோ சென்றுள்ளார். அவர் தனது சுற்றுப்பயணத்தின் போது செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கிற்கும் செல்வார்.

’இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தியில், பிரதமர் மோதி ரஷ்யா செல்லாதது மற்றும் எஸ். ஜெய்சங்கர் அங்கு சென்றதற்கான சமிக்ஞைகளை விளக்குகையில், “அமெரிக்க தடைகளை எதிர்கொள்ளும் ரஷ்யாவுக்கு செல்லாததன் மூலம், பிரதமர் மோதி மேற்கு நாடுகளுக்கு ஒரு சமிக்ஞையை கொடுக்கிறார். அதேசமயம், ஜெய்சங்கர் ரஷ்யா சென்றதன் மூலம், இந்தியா தனது பழைய மூலோபாய கூட்டாளியை கைவிடவில்லை என்று இந்தியா ரஷ்யாவுக்கு ஒரு சமிக்ஞையை அனுப்புவதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு, பிரதமர் மோதி ரஷ்யாவுக்குச் செல்லாதபோது, யுக்ரேனில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தப் போவதாக ரஷ்யாவின் அச்சுறுத்தலுடன் பல ஊடகங்கள் தொடர்புபடுத்தின.

நரேந்திர மோதி - விளாடிமிர் புதின்

பட மூலாதாரம், Getty Images

’ப்ளூம்பெர்க்’ தனது கட்டுரையொன்றில், யுக்ரேன் போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்று விளாடிமிர் புதினின் மிரட்டலுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோதி ரஷ்யாவில் நடைபெறவிருந்த மாநாட்டை ரத்து செய்ததாகக் கூறியிருந்தது.

இருப்பினும், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், சில ஆதாரங்களை மேற்கோள் காட்டி, இந்த கூற்றை நிராகரித்தது.

மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என்ற முடிவு நீண்ட காலத்திற்கு முன்பே எடுக்கப்பட்டதாகவும், அணு ஆயுத மிரட்டலுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் ராய்ட்டர்ஸ் தனது செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளது.

இந்தாண்டு தனது கட்டுரையொன்றில், ஜி-20 மாநாட்டில் ரஷ்யா மற்றும் சீன அதிபர்கள் இல்லாதது குறித்து பிரதமர் மோதி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ’ப்ளூம்பெர்க்’ கூறியுள்ளது.

ஜி-20 உச்சிமாநாட்டின் போது ஜோ பைடன் மற்றும் பிரதமர் மோதி இடையேயான சந்திப்புக்குப் பிறகு, வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் இந்தோ-பசிபிக் ஒருங்கிணைப்பாளர் கர்ட் கேம்ப்பெல் , “எங்கள் இந்திய கூட்டாளிகள் இங்கு இல்லாதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. நாங்கள் இங்கு இருப்பதற்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என தெரிவித்தார். 

புதின் இந்தியா வராதது ஏன்?

விளாடிமிர் புதின், நரேந்திர மோதி

பட மூலாதாரம், GETTY IMAGES

யுக்ரேனில் ரஷ்ய தாக்குதலுக்குப் பிறகு பல நாடுகளுக்குச் சென்ற புதின் இந்தியாவுக்கு வரவில்லை. புதின் சீனா, சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மத்திய ஆசியாவின் பல நாடுகளுக்குச் சென்றார், ஆனால் இந்தியாவுக்கு வரவில்லை. இத்தகைய சூழ்நிலையில் பல வகையான கேள்விகள் எழுகின்றன.

`கார்னகி மக்கள் விரும்பத்தக்கதுகோ` எனும் சிந்தனை மையத்தின் முன்னாள் இயக்குனர், டிமிட்ரி ட்ரெனின் ‘தி டிப்ளமேட்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ”சீனா மற்றும் ரஷ்யாவின் நெருக்கம், இந்தியாவில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று கூறியிருந்தார்.

டிமிட்ரி ட்ரெனின் அதே நேர்காணலில், “சீனாவைப் போல ரஷ்யாவின் மூலோபாய கூட்டாளியாக இந்தியா கொள்கையளவில் உள்ளது” என்று கூறியிருந்தார். ஆனால், “ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகம் சீனா மற்றும் ரஷ்யாவின் வர்த்தகத்தில் பத்தில் ஒரு பங்காகும். இந்தியா அமெரிக்காவுடன் நெருங்கி வருகிறது, ரஷ்யாவுக்கு இது ஒரு பிரச்னையாக இருக்கக்கூடாது. இந்தியா தனது வெளிநாட்டு உறவுகளை எந்த ஒரு நாட்டுடனும் மட்டுப்படுத்த விரும்பவில்லை” என அவர் தெரிவித்தார்.

டிமிட்ரி கூறுகையில், “ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கு ஆயுதங்கள் வழங்குவதில் அமெரிக்காவின் தலையீடு அதிகரித்து வருவதாகத் தெரிகிறது. இந்தியா மற்றும் ரஷ்யா தொடர்பாக இரண்டு பிரச்னைகள் உள்ளன. முதலாவதாக, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் போதுமான நம்பிக்கை இருந்தாலும், அரசு மட்டத்தில் ஒத்துழைப்பு அதிகமாக உள்ளது. இது தனியார் துறையில் விரிவுபடுத்தப்படாவிட்டால், இந்த உறவு மிகவும் பரவலாக இருக்காது” என அவர் கூறினார்.

மேலும், “தனியார் துறையைப் போல இந்தியப் பொருளாதாரத்தின் மீது அரசுக்கு அதிகக் கட்டுப்பாடு இல்லை. அத்தகைய சூழ்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் அரசாங்க எல்லைக்கு அப்பால் செல்ல வேண்டியிருக்கும். இரண்டாவது பிரச்னை, சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே போட்டி அதிகரித்து வருகிறது. இரு நாடுகளும் ரஷ்யாவின் நெருங்கிய கூட்டாளிகள். ஆனால், ரஷ்யா மத்தியஸ்தம் செய்யும் நிலையில் இல்லை” என்கிறார் அவர்.

ஷி ஜின்பிங், நரேந்திர மோதி

சீனா தனது வெளியுறவுக் கொள்கையை எந்தவொரு நாட்டுடனும் `கூட்டணி இல்லை, பிரிவு இல்லை, மற்றும் மூன்றாம் தரப்பினரை குறிவைக்க வேண்டாம்` என்ற மூன்று கொள்கைகளின் அடிப்படையில் வரையறுத்துள்ளது. இந்த மூன்று கொள்கைகளுமே டெங் சியோபிங்கின் காலத்தைச் சேர்ந்தவை. ஆனால், இந்தியாவுடன் சீனா முரண்படுவதால், இரு நாடுகளுக்கிடையே எந்தவொரு பக்க சார்பையும் எடுக்க ரஷ்யா தவிர்க்கிறது.

இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் ஏப்ரல் 2022-ஆம் ஆண்டுக்குள் 27 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. ஆனால், அது முற்றிலும் ஒருவழி வர்த்தகமாக இருக்கிறது. இதை ரஷ்யாவுக்கான இந்திய தூதர் பவன் கபூரும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

27 பில்லியன் டாலர்களில் இந்தியாவின் ஏற்றுமதி இரண்டு பில்லியன் டாலர்கள் மட்டுமே என்று ரஷ்யா-இந்தியா வர்த்தக உரையாடல் மன்றத்தில் பவன் கபூர் கூறியிருந்தார். 2021-22 நிதியாண்டில் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 13 பில்லியன் டாலர்கள் ஆகும்.

13 பில்லியனில் இருந்து 27 பில்லியன் டாலர்கள் வரை மிகப்பெரிய பங்களிப்பு இந்தியாவின் எண்ணெய் மற்றும் உரம் இறக்குமதியில் இருந்து வருகிறது. கடந்தாண்டு பிப்ரவரியில் யுக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதில் இருந்து, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா மலிவாக எண்ணெய் பெறத் தொடங்கியது.

இந்தியா-ரஷ்யா இடையிலான உறவுகள்

எஸ். ஜெய்சங்கர்

பட மூலாதாரம், GETTY IMAGES

ஜெய்சங்கர் தனது ரஷ்யா பயணம் குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில் ரஷ்யாவுடனான தனது சிறுவயது நினைவுகளை அவர் பகிர்ந்து கொண்டார். அதில், 1962-இல்  ரஷ்யாவில் விண்வெளி வீரர்களின் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுக்கான நுழைவுச் இருக்கையின் படத்தை அவர் பகிர்ந்துள்ளார். அப்போது ஜெய்சங்கர் ஏழு வயது சிறுவனாக இருந்துள்ளார்.

இதனுடன், ஜெய்சங்கர் தனது தற்போதைய சுற்றுப்பயணத்தின் படத்தையும் ட்வீட் செய்துள்ளார்.

ராஜதந்திரியாக, ஜெய்சங்கர் 1978-ஆம் ஆண்டு மக்கள் விரும்பத்தக்கதுகோவில் உள்ள இந்திய தூதரகத்தில் தனது முதல் பதவியைப் பெற்றார்.

இந்தப் பயணத்தின் போது, ஜெய்சங்கர், ரஷ்யாவின் துணைப் பிரதமரும், தொழில்-வர்த்தக அமைச்சருமான டெனிஸ் மாந்துரோவைச் சந்திக்கிறார்.

2000 மற்றும் 2021-ஆம் ஆண்டுக்கு இடையில், ரஷ்யா மற்றும் இந்தியாவின் தலைவர்கள் ஒரு உச்சி மாநாட்டை கூட ஒத்திவைக்கவில்லை.

பிரதமர் நரேந்திர மோதி கடந்த இரண்டு ஆண்டுகளில் பல நாடுகளுக்குச் சென்றுள்ளார். அத்தகைய சூழ்நிலையில், அவர் ரஷ்யா செல்லாதது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

பாதுகாப்புத் துறையில் ரஷ்யாவுடன் இந்தியா நீண்ட மற்றும் விரிவான ஒத்துழைப்பைக் கொண்டுள்ளது. ரஷ்ய பாதுகாப்பு உபகரணங்களை இந்தியா சார்ந்திருப்பதும் மறைக்கப்படவில்லை. பாதுகாப்புத் துறையில் 60 முதல் 70 சதவிகிதப் பொருட்களுக்கு இந்தியா இன்னும் ரஷ்யாவைச் சார்ந்திருக்கிறது. எனினும், இந்த நிலையை மாற்ற இந்தியா முயற்சித்து வருகிறது.

விளாடிமிர் புதின் - நரேந்திர மோதி

பட மூலாதாரம், GETTY IMAGES

ரஷ்யா – யுக்ரேன் போர் தொடங்கியதில் இருந்து, இந்தியாவும் ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்து, இதன் மூலம் நாட்டில் அதிகரித்து வரும் எண்ணெய் விலையை கட்டுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த சந்திப்பின் போது ரூபாய்-ரூபிள் பணம் செலுத்தும் பொறிமுறையில் உள்ள முறைகேடுகள் குறித்து விவாதிக்கப்படும் என’ தி இந்து’ நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. தவிர, வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் இணைப்பு தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும்.

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை இந்தியா இன்னும் வெளிப்படையாக எதிர்க்கவில்லை.

எனினும், யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பில் புச்சா நகரத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும், யுக்ரேனில் அணு உலைகள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்த அச்சுறுத்தல்கள் குறித்தும் கவலை தெரிவித்தது.

மறுபுறம், புதின் இந்தியாவின் நிலைப்பாட்டை பலமுறை பாராட்டியுள்ளார். அவர் பிரதமர் நரேந்திர மோதியை பல சந்தர்ப்பங்களில் பகிரங்கமாகப் புகழ்ந்துள்ளார்.

இந்த நெருக்கடியை ராஜதந்திரம் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்று இந்தியா பலமுறை கூறியுள்ளது. பிரதமர் மோதி கடந்த ஆண்டு செப்டம்பரில் புதினிடம் ‘இது போர்க்காலம் அல்ல’ என்று கூறியிருந்தார்.

அணுசக்தியை அமைதியான முறையில் பயன்படுத்துவதில் ரஷ்யாவும் இந்தியாவின் முக்கிய கூட்டாளியாகும் .

அணுசக்தி துறையில் இருநாடுகளுக்கும் இடையே கூடங்குளம் அணுமின் நிலையம் (KKNP) பெரும் திட்டமாக கருதப்படுகிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் மற்றும் இரண்டாவது அலகுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், 3, 4, 5 மற்றும் 6 அலகுகளின் பணிகள் நடைபெற்று வருகின்றன. விண்வெளித் துறையில் இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான ஒத்துழைப்பும் பல ஆண்டுகள் பழமையானது.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »