Press "Enter" to skip to content

குதிரைப் பண்ணை நடத்தும் பஞ்சாப் மற்றும் ஹரியாணா பெண்கள் – காணொளி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராம்சரா கிராமத்தைச் சேர்ந்த முஸ்கான் சித்து குதிரைப் பண்ணை நடத்தி வருகிறார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, முஸ்கான் சித்துவின் தந்தை குதிரை பண்ணையில் வேலை செய்தார், ஆனால் சில காரணங்களால் அவர் அந்த வேலையை விட்டுவிட்டார்.

சிறுவயதிலிருந்தே குதிரைகள் மற்றும் விலங்குகள் மீது பற்றுதல் கொண்ட முஸ்கானுக்கு, தனது குடும்பம் குதிரைப் பண்ணை வேலையை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.

அவளது தந்தையின் உதவியுடன், ஒரு குதிரைப் பண்ணை தொடங்கி, தனது தந்தை விட்டுச் சென்ற தொழிலைத் தொடர்ந்தார். எம்பிஏ மாணவரான முஸ்கான், இந்த குதிரைப் பண்ணையையும் பந்தயத்தையும் நடத்தி வருகிறார்.

பொதுவாக, விவசாயம் ஆண்களின் தொழிலாகக் கருதப்படுகிறது ஆனால் இப்போது பஞ்சாப் போன்ற மாநிலங்களில் ஹரியாணா பெண்கள் இந்தத் தொழிலை செய்து நல்ல பெயர் எடுத்திருக்கிறார்கள்.

முஸ்கானைப் போலவே முக்த்சரில் வசிக்கும் மற்றொரு பெண் கோமல் ப்ரீத்தும் தனது தாத்தா மற்றும் தந்தையின் தொழிலை செய்து வருகிறார்.

அவரது தந்தையின் கூற்றுப்படி, கோமல் ப்ரீத் பண்ணைக்கு பொறுப்பேற்றதிலிருந்து, பண்ணை நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளது.

இதேபோல், ஹரியாணா மாநிலம் சிர்சா மாவட்டத்தில் உள்ள தேசு ஜோதா கிராமத்தில் வசிக்கும் குஷி சிறைதார், 2017 முதல் குதிரைப் பண்ணை நடத்தி வருகிறார். குஷியும் பந்தயத்திற்காக பஞ்சாப் செல்கிறார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »