Press "Enter" to skip to content

சிரியா மற்றும் இராக்கில் இரானிய இலக்குகளை தாக்க அமெரிக்கா அனுமதி: காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

சிரியா மற்றும் இராக்கில் உள்ள இரானிய இலக்குகள் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தும் திட்டங்களுக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதாக பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் செய்தியிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதல்கள் பல நாட்களுக்கு நடைபெறும் என்றும், வானிலையைப் பொறுத்து இந்தத் தாக்குதல்களை எப்போது தொடங்க வேண்டும் என்ற ஆணை வரும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை சிரியா எல்லைக்கு அருகிலுள்ள ஜோர்டானில், டிரோன் தாக்குதலில் மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இரானிய ஆதரவு போராளிக் குழுவே காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இரானின் புரட்சிகர காவலர் படையின் ஆதரவையும் நிதியுதவியையும் பெற்ற, இராக்கில் உள்ள இஸ்லாமிய தடுப்புப் படை இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பு ஏற்றுள்ளது. இந்தப் படையில் ஆயுதப் பயிற்சி பெற்ற பல போராளிகள் இருப்பதாக நம்பப்படுகிறது.

மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டது மட்டுமல்லாது, 41 அமெரிக்க வீரர்கள் காயமடைந்த இந்தத் தாக்குதலில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என இரான் அரசு மறுத்துள்ளது.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »