Press "Enter" to skip to content

மூன்று வயது மகனுக்கு தனது கல்லீரலை தானமாக கொடுத்த தாய்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மூன்று வயது மகனுக்கு தனது கல்லீரலை தானமாக கொடுத்த தாய்

நேபாளத்தை சேர்ந்த சீதா பட்டா தனது மூன்று வயது மகன் ரிஷவுக்கு தன் கல்லீரலை தானமாக வழங்கியுள்ளார்.

22 மாத குழந்தையாக இருந்த போது ரிஷவுக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. பக்தபூரில் உள்ள மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையத்தில் அவனுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இதற்காக தனது வீட்டை விற்று 30 லட்சம் செலவு செய்து தனது மகனின் சிகிச்சையை செய்து வருகின்றனர் இந்த பெற்றோர்கள். பலரும் குழந்தையை கைவிட்டுவிட சொன்ன போதிலும் தொடர்ந்து மனஉறுதியுடன் போராடி வருகின்றனர்.

நேபாள வரலாற்றில் ஒரு மூன்று வயது குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது இதுவே முதன்முறை. தற்போது இந்த குழந்தையின் சிகிச்சைக்கான செலவினை நன்கொடை மூலம் ஈடுசெய்ய முயற்சித்து வருகின்றனர் இந்த பெற்றோர்கள்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »