Press "Enter" to skip to content

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் வெற்றி

பட மூலாதாரம், ANI

ஜார்கண்ட் மாநிலத்தில், புதிய முதல்வர் சம்பாய் சோரன் சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.

அமலாக்கத்துறை காவலில் உள்ள மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க சட்டசபைக்கு வந்திருந்தார்.

80 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்டில் பெரும்பான்மைக்கு 41 எம்எல்ஏக்கள் தேவை.

இந்த நிலையில் 47 எம்எல்ஏக்கள் அரசுக்கு ஆதரவாகவும் 29 எம்எல்ஏக்கள் எதிராகவும் வாக்களித்தனர்.

ஹேமந்த் சோரன்

பட மூலாதாரம், Getty Images

மகா கூட்டணி ஆட்சியில், சம்பாய் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு 29 எம்எல்ஏக்களும், காங்கிரஸ் கட்சிக்கு 17 எம்எல்ஏக்களும், ஆர்ஜேடி மற்றும் சிபிஐ (எம்எல்) கட்சிகளுக்கு தலா ஒரு எம்எல்ஏவும் உள்ளனர். அதாவது இந்த கூட்டணிக்கு மொத்தம் 48 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி கூட்டணியில் 30 எம்எல்ஏக்கள் உள்ளனர், இதில் பாஜகவுக்கு மட்டும் 26 உறுப்பினர்கள் இருக்கின்றனர். அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 3 பேர் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாரின் பிரிவைச் சேர்ந்த ஒருவர்.

ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை நில மோசடி வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்து காவலில் வைத்திருப்பதைத் தொடர்ந்து அவர் ராஜிநாமா செய்தார். இதையடுத்து, கடந்த வாரம் வெள்ளிக்கிழமை புதிய முதல்வரா சம்பாய் சோரன் பதவியேற்றார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »