Press "Enter" to skip to content

“நுழைவுத் தேர்வுகளை அந்தந்த மாநில மொழிகளில் நடத்த வேண்டும்” – ஓபிஎஸ் கோரிக்கை

நாட்டு மக்களின் எதிர்காலத்தை வளப்படுத்தும் விதமாக மத்திய நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளதாகத் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டை வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ளார். நிதி நிலை அறிக்கையிலுள்ள முக்கிய அம்சங்களை பட்டியலிட்டுள்ள அவர், நாட்டிற்கு முன்னேற்றத்தைத் தரக்கூறிய அறிவிப்புகள் இருப்பதாக பாராட்டியுள்ளார். பதினைந்தாவது நிதிக்குழு அறிக்கையின் படி, தமிழகத்திற்குக் கிடைக்கூடிய பங்கீடு அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அருங்காட்சியகங்களை மேம்படுத்தும் திட்டத்தில் சென்னை அருங்காட்சியகத்தையும் இணைக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், இந்தியாவில் 2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜி 20 மாநாட்டின் முக்கிய நிகழ்வுகளை தமிழகத்தில் நடத்த அவர் கேட்டுக்கொண்டுள்ளார். நுழைவுத் தேர்வுகளை அந்தந்த மாநில மொழிகளில் நடத்த வேண்டுமெனவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

More from தமிழகம்More posts in தமிழகம் »