Press "Enter" to skip to content

தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.56 குறைந்தது. தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அதிகரித்து வந்தது. கடந்த 8ம் தேதி ஒரு சவரன் ரூ.31,176 என்று விற்பனையானது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற சாதனையை படைத்தது. அதன் பிறகு தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமான போக்கு காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 25ம் தேதி தங்கம் விலை திடீரென சவரனுக்கு ரூ.304 அதிகரித்து ஒரு சவரன் ரூ.30,896க்கு விற்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சனிக்கிழமை விலையிலேயே அன்றைய தினம் தங்கம் விற்பனையானது.

நேற்று முன்தினமும் (திங்கட்கிழமை) தங்கம் விலை உயர்வை சந்தித்தது. அதாவது, சவரன் ரூ.160 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.31,056க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்று தங்கம் விலையில் சற்று மாற்றம் காணப்பட்டது. அதாவது, கிராமுக்கு ரூ.7 குறைந்து ஒரு கிராம் ரூ.3,875க்கும், சவரனுக்கு ரூ.56 குறைந்து ஒரு சவரன் ரூ.31,000க்கு விற்கப்பட்டது. தங்கம் விலை அதிகரித்தால் ஒரேடியாக அதிகரிப்பதும், குறைந்தால் பெயரளவுக்கு மட்டும் குறைவது என்பது நகை வாங்குவோரை சற்று அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Source: dinakaran

More from வணிகம்More posts in வணிகம் »