Press "Enter" to skip to content

அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்ப் தோல்வியை ஏற்க மறுத்தால் என்ன நடக்கும்?

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்பை தோற்கடிக்கத் தேவையான 270 இடங்களுக்கும் அதிகமாகவே ஜோ பைடன் கைப்பற்றியுள்ளார். இனி அடுத்தது என்ன?

இந்த தேர்தல் வெற்றி மூலம், உடனடியாக ஜோ பைடன், 1600, பென்சில்வேனியா அவென்யூ-வில் உள்ள வெள்ளை மாளிகைக்குக் குடியேறிவிடலாம் என்று பொருளில்லை. அதற்கு முன்னர் பல படிகள் உள்ளன.

அமெரிக்க தேர்தல் நடைமுறைகள் நிறைவடைந்து விட்டாலும் இம்முறை நிலைமை சற்று குழப்பமாகவே உள்ளது. வாக்கு எண்ணிக்கை முறைகேடு குறித்து நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார் டொனால்ட் டிரம்ப்.

ஜோ பைடன் அதிபராவது எப்போது?

அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் படி, ஜனவரி 20ஆம் தேதி பிற்பகலில்தான் அதிகாரப்பூர்வமாகப் புதிய அதிபர் பொறுப்பேற்க முடியும்.

அதற்கு, தலைநகர் வாஷிங்டன் டி சி-யில் பதவியேற்பு விழா நடத்தப்படும்,

அதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, புதிய அதிபருக்கும் துணை அதிபருக்கும் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைப்பார்.

அமெரிக்க அதிபர் தேர்தல்:டிரம்ப் தோல்வியை மறுக்கும் பட்சத்தில் என்ன ஆகும்?

இதன்படி, 2021ஆம் ஆண்டு ஜனவரி 20 அன்று ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகியோர் பதவியேற்பார்கள்.

இருப்பினும், இதற்கு சில விதிவிலக்குகள் உள்ளன. பதவிக்காலம் முடிவதற்குள் தற்போதைய ஜனாதிபதி உயிரிழந்துவிட்டாலோ அல்லது அவர் பதவி விலகிவிட்டாலோ, துணை ஜனாதிபதிக்கு அதிபராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படும்.

தேர்தல் முடிவுகள் வந்ததிலிருந்து, புதிய ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடங்குவதற்கான நேரம், அதாவது ஜனவரி 20 வரையிலுமான காலம், ப்ரெசிடென்ஷியல் ட்ரான்சிஷன் என்று அழைக்கப்படுகிறது.

இந்த நேரத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர், ஒரு இடைநிலைக் குழுவை உருவாக்குகிறார். இது பதவியேற்றவுடனேயே பணியைத் தொடங்க தேவையான ஏற்பாடுகளைச் செய்கிறது.

ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகியோர் ஏற்கெனவே இதற்காக ஒரு வலைதளத்தை உருவாக்கி வருங்கால பணிகளுக்கு தயாராகி வருவதாகத் தெரிவித்தனர்.

அதில், “நோய்த் தொற்று, பொருளாதார மந்தநிலை, காலநிலை மாற்றம், இனப் பாகுபாட்டுப் பிரச்சனைகள் என நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் ஏராளம். பைடன்-ஹாரிஸ் நிர்வாகம் முதல் நாளிலிருந்து செயல்படத் தொடங்குவதற்காக இடைநிலைக் குழு வேகமாகத் தயாராகி வருகிறது. ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு தலைவர்களும் அமைச்சரவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து, கொள்கைகள் மற்றும் நிர்வாகம் குறித்து விவாதிப்பார்கள்.

இந்தக் குழுவின் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட அமைப்புகளைத் தொடர்பு கொண்டு, பல்வேறு பணிகளுக்கான காலக்கெடு மற்றும் வரவு செலவுத் திட்டங்கள் போன்றவற்றுடன், யார் என்ன பணி மேற்கொள்கிறார்கள் என்பது பற்றிய தகவல்களையும் சேகரிப்பார்கள்.

அவர்கள் புதிய ஊழியர்களுக்கு தேவையான தகவல்களைச் சேகரிப்பதுடன், பதவியேற்பு நிகழ்ச்சிக்கும் உதவுகிறார்கள். இவர்களில் சிலர் பின்னர் ஜனாதிபதி அல்லது துணை அதிபருடன் இணைந்து செயல்படுகின்றனர்.

பராக் ஒபாமாவும் டொனால்ட் டிரம்பும் 2016 ஆம் ஆண்டில் ஓவல் அலுவலகத்தில் சந்தித்தனர், இரு தலைவர்களுக்கு இடையில் இணக்கம் குறைந்தே இருந்ததை அப்போதைய புகைப்படங்கள் வெளிப்படுத்தின. இப்போதும் அதே நிலை தான் தொடர்கிறது.

ஜோ பைடன், தனது குழுவை உருவாக்கப் பல மாதங்கள் செலவிட்டார். இதற்குத் தேவையான நிதியையும் அவர் திரட்டியுள்ளார், கடந்த வாரம் அவர் இது குறித்த ஒரு வலைதளத்தையும் தொடங்கியுள்ளார்.

சட்ட சிக்கல் வரக்கூடுமா?

அமெரிக்க அதிபர் தேர்தல்:டிரம்ப் தோல்வியை மறுக்கும் பட்சத்தில் என்ன ஆகும்?

ஆம். நிச்சயமாக. எந்தெந்த மாகாணங்களில் பைடன் வெற்றி பெற்றதாகக்கூறப்படுகிறதோ, அங்கெல்லாம் வாக்குப்பதிவில் முறைகேடு நடந்துள்ளதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். எனினும் அதற்கான ஆதாரங்கள் எதையும் அவர் முன்வைக்கவில்லை.

அவரின் ஆதரவு அதிகாரிகள் நாட்டின் மிகச் சிறந்த வழக்கறிஞர்களுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

சில அஞ்சல் வாக்குகளை எண்ணிக்கைக்குள் கொண்டு வராமல் இருப்பதே இவரின் நோக்கம். இது முதலில் அந்தந்த மாகாணங்களின் நீதிமன்றங்களிலும் பின்னர் உச்ச நீதி மன்றத்திலும் விசாரணைக்கு வரும்.

ஆனால், இது போன்ற விவகாரங்களால் தேர்தல் முடிவுகள் பாதிக்கப்படாது என்று துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

டிரம்ப் தரப்பினரின் வேண்டுகோளுக்கிணங்க, சில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை மீண்டும் மேற்கொள்ளப்படலாம் என்றும் ஆனால் இது முடிவுகளைப் பாதிக்காது என்றும் கூறப்படுகிறது.

தோல்வியை ஏற்க டிரம்ப் மறுக்கும் பட்சத்தில்?

தோல்வியை ஏற்க டிரம்ப் மறுக்கும் பட்சத்தில் என்ன நேரிடும் என்பதை வட அமெரிக்காவின் பிபிசி நிருபர் ஏந்தனி ஜர்ச்சர் விளக்குகிறார்.

தேர்தல் முடிவுகளை எதிர்த்து நீதிமன்றத்தை நாடப்போவதாக டொனால்டு டிரம்ப் ஏற்கனவே கூறியுள்ளார். அவர் தனது முயற்சிகளில் வெற்றிபெறவில்லை என்றால், தோல்வியை ஏற்க அவருக்கு அழுத்தம் அதிகரிக்கும். ஆனால் அவர் தோல்வியை ஏற்பது என்பது எந்த வகையில் முக்கியத்துவம் பெறுகிறது?

அமெரிக்க அரசியலில் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்கள், தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளரைத் தொலைபேசியில் வாழ்த்தி, தங்கள் தோல்வியை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இது ஒரு கட்டாயமில்லை.

2018 ஆம் ஆண்டில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஸ்டேசி ஆப்ராம்ஸ் வாக்காளர் மோசடி மற்றும் மிரட்டல் குற்றம் சாட்டினார். குடியரசுக் கட்சி வேட்பாளர் பிரையன் கேம்ப் தோல்வியை ஏற்கவில்லை.

இருப்பினும், இத்தனை ஆண்டுகளில், அதிபர் பதவி வேட்பாளர்களுக்கிடையில் இது போல் ஒருபோதும் நடக்கவில்லை. தற்போது, ஜார்ஜியாவில் தேர்தல் முடிவுகள் சட்டப்பூர்வமாக அறிவிக்கப்படலாம். ஆனால் அதுவரை அரசாங்கப் பணிகள் தொடரவே செய்யும். அதில் டிரம்ப் எந்தத் தடையும் ஏற்படுத்த முடியாது.

ட்ரம்ப் தனது தோல்வியை ஏற்கவோ அல்லது பைடெனின் பதவியேற்பு விழாவில் புன்னகையுடன் பங்கேற்கவோ எந்தக் கட்டாயமும் இல்லை என்பது உண்மைதான். ஆனால் அவருக்குச் சில சட்டப் பொறுப்புகள் உள்ளன.

பைடெனின் குழு பொறுப்பை ஏற்கத் தொடங்க, அவர் தனது நிர்வாகத்துக்கு அனுமதியளிக்க வேண்டும். டிரம்ப் ஏற்கனவே இந்தப் பணியைத் தொடங்கியுள்ளார் என்று அவரது அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ட்ரான்சிஷன் காலத்தில் கமலா ஹாரிஸ் என்ன செய்வார்?

கமலா ஹாரிஸ், நாட்டின் துணை அதிபராகும் முதல் பெண்மணி ஆவார். தனது ஊழியர்களைப் பணி நியமனம் செய்து தனது பணி மற்றும் பொறுப்புகள் குறித்த விளக்கத்தை நிர்வாகத்திடமிருந்து பெறுவார்.

அமெரிக்க அதிபர் தேர்தல்:டிரம்ப் தோல்வியை மறுக்கும் பட்சத்தில் என்ன ஆகும்?

துணை ஜனாதிபதி அலுவலகம் வெள்ளை மாளிகையின் மேற்கு பிரிவில் உள்ளது, இருப்பினும் அவர் அங்கு தங்க அனுமதியில்லை. பாரம்பரியமாக நகரின் வடமேற்கே உள்ள அமெரிக்க கடற்படைக் கண்காணிப்பு மைய வளாகத்தில் தான் அவர் வசிப்பார். இது, வெள்ளை மாளிகையில் இருந்து சுமார் 10 நிமிட பயண தூரத்தில் அமைந்துள்ளது.

அவரது கணவர் டக்ளஸ் தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞர்; தவிர, பொழுதுபோக்குத் துறையுடன் தொடர்புடையவர்.

முதல் திருமணத்தின் மூலம் அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் – கோல் மற்றும் எலா. இரண்டு குழந்தைகளும் தன்னை அன்புடன் “மொமாலா” என்று அழைப்பதாக கமலா ஹாரிஸ் கூறுகிறார்.

அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லம் எப்படி இருக்கும்?

அமெரிக்க அதிபர் தேர்தல்:டிரம்ப் தோல்வியை மறுக்கும் பட்சத்தில் என்ன ஆகும்?

முதல் முறையாக, ஜான் ஆடம்ஸும் அவரது மனைவியும் அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகைக்குக் குடிபெயர்ந்தனர். இந்தக் கட்டடத்தின் பணிகள் அப்போது முற்றுப்பெறவில்லை.

அண்மைக் காலங்களில், இங்கு குடிவரும் புதிய அதிபர்கள் தத்தம் வசதிக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப, பழைய தளபாடங்களை மாற்றிக்கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக காங்கிரஸ் தனியாக நிதியையும் ஒதுக்குகிறது.

வெள்ளை மாளிகையில் மொத்தம் 132 தங்கும் அறைகள் மற்றும் 35 குளியலறைகள் உள்ளன.

பேஷன் உலகத்தைச் சேர்ந்த டொனால்டு டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் இங்கு பல மாற்றங்களைச் செய்தார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சிறப்புக் கொண்டாட்டங்கள் மற்றும் பண்டிகைகளுக்கு அவர் பொறுப்பேற்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »