Press "Enter" to skip to content

எட்டு வருட பேச்சுவார்த்தைக்கு பிறகு ஆசிய பசிபிக் நாடுகளால் ஒப்புக் கொள்ளப்பட்ட வர்த்தக கூட்டமைப்பு – என்ன பலன்?

பதினைந்து நாடுகள் சேர்ந்து உலகின் மிகப்பெரிய வர்த்தக கூட்டமைப்பு ஒன்றை அமைத்துள்ளது. இது உலக பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கு.

பிராந்திய விரிவான பொருளாதார கூட்டமைப்பு (RCEP)என்று கூறப்படும் இதில் பத்து தென் கிழக்கு ஆசிய நாடுகளும், தென் கொரியா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. இந்தியா இதில் கையெழுத்திடவில்லை.

அந்த பிராந்தியத்தில் சீன தாக்கத்தின் ஒரு நீட்சியாகவே இந்த ஒப்பந்தம் பார்க்கப்படுகிறது.

2017ஆம் ஆண்டு ஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றிலிருந்து அமெரிக்க வெளியேறியதால் இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க சேர்க்கப்படவில்லை.

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற சிறிது காலத்தில் ஆஸ்திரேலியா, சில்லி, கனடா, ஜப்பான் உட்பட 12 நாடுகள் கொண்ட ட்ரான்ஸ் பசிபிக் பாட்னர்ஷிப் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினார்.

இந்த ஒப்பந்தம் டிரம்புக்கு முன்னாள் அதிபராக இருந்த ஒபாமாவால் ஆதரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த பிராந்தியத்தில் சீனாவின் அதிகாரம் அதிகரிப்பதை ஒடுக்க அந்த ஒப்பந்தத்திற்கு ஒபாமாவால் ஆதரவு வழங்கப்பட்டது.

கோப்புப் படம்

தற்போது கையெழுத்தாகியுள்ள பிராந்திய விரிவான பொருளாதார கூட்டமைப்பு ஒப்பந்தம் குறித்துக் கடந்த எட்டு வருடங்களாகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஒருவழியாக இன்று காணொளி வாயிலாக இந்த கூட்டம் நடத்தப்பட்டது.

வியட்நாமால் நடத்தப்பட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து விடுபட இந்த ஒப்பந்தம் உதவும் எனத் தலைவர்கள் நம்புகின்றனர்.

“எட்டு வருடப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு பிராந்திய விரிவான பொருளாதார கூட்டமைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது, இருளில் ஒளிபாய்ச்சியது போல, இந்த பெருந்தொற்று காலத்தில் அமைந்துள்ளது,” எனச் சீனாவின் பீரிமியர் லி கெஷுவாங் தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் ஆரம்பக் கட்டத்தில் இந்தியாவும் இருந்தது. ஆனால் கடந்த வருடம் குறைந்த வரிகள் உள்ளூர் தொழிலாளர்களைப் பாதிக்கும் என்று கருதி இதிலிருந்து வெளியேறியது.

இருப்பினும் எதிர்காலத்தில் இந்த ஒப்பந்தத்தில் இந்தியா விரும்பினால் இணைந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் இருபது வருடங்களுக்குள் இறக்குமதிகள் மீது விதிக்கப்படும் சில வரிகளை ஒழிக்க இந்த ஒப்பந்தம் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அறிவுசார் சொத்து, தொலைத்தொடர்பு, நிதி சேவைகள், இணைய வர்த்தகம் மற்றும் பிற முறையான சேவைகள் அடங்கிய பிரிவுகளும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகள், உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்காகும். மேலும் சர்வதேச அளவில் 29 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி பொருட்கள் இந்த நாடுகளின் மூலம் தயாரிக்கப்படுகிறது.

இந்த புதிய ஒப்பந்தம், அமெரிக்க-மெக்ஸிகோ-கனடா ஒப்பந்தம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றைக்காட்டிலும் விரிவானதாக இருக்கும்.

இந்த ஒப்பந்தத்தால் என்ன பயன்?

இந்தோனீசியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு பொருள், ஆஸ்திரேலியாவின் உதறி பாகங்களை கொண்டிருந்தால், பிற தெற் கிழக்கு ஆசிய நாடுகள் அதற்கு வரி செலுத்த வேண்டும். ஆனால் தற்போது கையெழுத்தாகியுள்ள இந்த ஒப்பந்தம்படி, எந்த நாட்டில் இருந்து உதறி பாகங்கள் தயாரிக்கப்பட்டிருந்தாலும், உறுப்பு நாடுகள் அனைத்திற்கும் ஒரே சலுகையே கொடுக்கப்படும். மேலும் இது ஒரு நிறுவனத்திற்கு இந்த பிராந்திய வர்த்தகத்திற்குள்ளாக விநியோகஸ்தர்களை தேர்வு செய்யும் வாய்ப்பை வழங்கும்.

இந்த ஒப்பந்தம் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் முன்னெடுப்பாக பார்க்கப்பட்டாலும், சீனாவின் ஆதரவு பெற்ற ட்ரான்ஸ் பசிபிக் கூட்டமைப்புக்கான ஒரு மாற்றாகதான் பார்க்கப்படுகிறது.

ட்ரான் பசிபிக் கூட்டமைப்பில் சீனாவை தவிர பல ஆசிய நாடுகள் உள்ளன. ஆனால் அமெரிக்காதான் அந்த கூட்டமைப்பிலிருந்து 2017ஆம் வெளியேறியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »