Press "Enter" to skip to content

Posts published in “செய்திகள்”

நாளை அதிஅடைமழை (கனமழை)க்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

பொதுவாக இக்கால கட்டத்தில் மழைக்கான வாய்ப்பு இருக்காது. கோடை வெயிலின் தாக்கம் இந்த மாதம் முதல் அதிகரிக்கத் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு கோடை வெயில் தொடங்குவதற்கு பதில் புயல் சின்னம் உருவாகி உள்ளது.…

மறைமுக தேர்தல்- திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்கள் அறிவிப்பு

மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், நகராட்சி துணை தலைவர் பதவிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்கள் குறித்து தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது. சென்னை: தி.மு.க. தலைமை கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்…

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொழிற்கல்வி பாடத்தில் தேர்ச்சி பெறுவது கட்டாயமில்லை- பள்ளிக்கல்வித்துறை

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தொழிற்கல்வி பாடத்தில் தேர்ச்சி பெறுவது அவசியமல்ல என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. சென்னை: தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான…

உலக காது கேட்கும் தினம்: மாணவர்கள்- இளைஞர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை

அதிக ஒலி எழுப்பும் சாதனங்களிடம் இருந்து விலகி இருங்கள். வருங்காலத்தை உடல் நலத்தோடு உற்சாகமாய் எதிர்கொள்ளுங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள உலக காது கேட்கும் நாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். சென்னை: முதல்-அமைச்சர்…

முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு நிபந்தனை பிணை

கள்ள வாக்கு அளிக்க வந்த நபரை தாக்கிய வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தை பிணை வழங்கியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது தண்டையார்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவில் உள்ள வாக்குச்சாவடியில் …

கடந்த 7 நாட்களில் உக்ரைனில் இருந்து 10 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறினர்- ஐ.நா. தகவல்

போர் நடந்து வருவதால் மேலும் 40 லட்சம் பேர் உக்ரைனை விட்டு வெளியேறக்கூடும் என்று கணிக்கப்படுவதாக ஐ.நா. அகதிகள் முகமை தெரிவித்துள்ளது. நியூயார்க்: உக்ரைனில் கடுமையாக போர் நடந்துவருவதால் அங்கிருந்து மக்கள் வெளியேறி அண்டை…

டாஸ்மாக் கடை திறப்பதை மக்கள் நினைத்தால் தடுக்கலாம்- தமிழக அரசு புதிய சட்டத்திருத்தம்

மாவட்ட ஆட்சியர்களின் முடிவை எதிர்த்து 30 நாட்களுக்குள் மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையருக்கு மேல்முறையீடு செய்யவும், திருத்த விதிகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை: டாஸ்மாக் கடைகளை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை மாவட்ட ஆட்சியர்கள்…

தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு கும்பகோணம் மேயர் பதவி ஒதுக்கீடு

சென்னை உள்பட 20 மாநகராட்சியில் தி.மு.க. மேயர் பதவியை வகிக்க முடிவு செய்துள்ளது. கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒரு மேயர் பதவியை விட்டுக் கொடுத்துள்ளது. சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம்…

இந்திய மாணவர்கள் யாரும் பணய கைதிகளாக பிடிக்கப்படவில்லை: வெளியுறவுத்துறை விளக்கம்

ரஷிய படைகள் ஏறக்குறைய கார்கிவ் நகரை பிடித்துள்ள நிலையில் உக்ரைன் ராணுவம் இந்திய மாணவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக ரஷியா குற்றம்சாட்டியது. உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று…

ரெயிலில் ஏற விடாமல் தடுத்து உக்ரைன் நாட்டினர் தாக்குதல்- திருச்சி மாணவர் தகவல்

ரெயிலில் ஏற முயன்றபோது உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்கள் எங்களை தடுத்தனர். இந்தியர்களான எங்களை மிதித்தும், அடித்தும் கீழே தள்ளிவிட்டார்கள் என்று உக்ரைனில் தவிக்கும் திருச்சியை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் கூறி உள்ளார். திருச்சி: உக்ரைன்-ரஷ்யா…

சென்னை விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் வீரர் தற்கொலை

சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை விமானநிலைய பாதுகாப்பு பணியில் ராஜஸ்தான் மாநிலத்தை சோ்ந்த யஸ்பால் (26) என்பவர்…

உக்ரைன் எல்லையில் ரஷியா குவித்துள்ள அணு ஆயுதங்கள்

வான்வெளி தாக்குதல் நடத்த 34 சுகோய் போர் விமானங்கள், மிக் 31 மற்றும் மிக் 31 ஏ ரக போர் விமானங்கள் ரஷியாவிடம் தயார் நிலையில் உள்ளது. உக்ரைன் நகரங்களை பிடிக்க ரஷியா தீவிர…

தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியது

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 950 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- * தென்மேற்கு…

இந்தியாவில் கொரோனா ஒருநாள் பாதிப்பு 6,500 ஆக குறைந்தது

கொரோனா பாதிப்பால் மேலும் 142 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் விடுபட்ட மரணங்கள் உள்பட 96 பேர் அடங்குவர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,14,388 ஆக உயர்ந்துள்ளது. புதுடெல்லி:  இந்தியாவில் கொரோனா தினசரி…

திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பதவி இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கீடு

தி.மு.க. கூட்டணி சார்பில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பேரூராட்சி துணை தலைவர் பதவி இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. கூட்டணியில் தி.மு.க.-23…

உ.பி. சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது- யோகி ஆதித்யநாத் வாக்களித்தார்

உத்தரபிரதேசத்தில் 6-வது கட்டமாக நடைபெறும் 57 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி உள்ளது. லக்னோ: உத்தரபிரதேசத்தில் 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இதில் 5 கட்ட வாக்குப்பதிவு…

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி பார்வை செய்தனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில்…

உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் தப்ப உதவிய குத்துச்சண்டை வீரர்

இந்திய குத்துச்சண்டை வீரர் நீரஜ் கோயத், உக்ரைனில் இருந்து வெளியேற முடியாமல் தவித்த இந்திய மாணவர்கள் தப்ப உதவி செய்துள்ளார். புதுடெல்லி : இந்திய குத்துச்சண்டை வீரர் நீரஜ் கோயத் அளித்த பேட்டியில் கூறியதாவது:-…

உக்ரைன்-ரஷியா இடையே இன்று இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை

போரை நிறுத்துவது குறித்து நடைபெற்ற முதல் கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. பெலாரஸ்: உக்ரைன்-  ரஷியா இடையேயான போர்  நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து அங்குள்ள முக்கிய நகரங்களில் பதற்றமான சூழல் காணப்படுகிறது. …

உக்ரைன் ராணுவம் இந்திய மாணவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளது – ரஷியா அதிரடி குற்றச்சாட்டு

கார்கிவ் : உக்ரைன் – ரஷியா போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில் பாதுகாப்பு கருதி கார்கிவ் நகரில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறும்படி இந்திய தூதரகம் நேற்று உத்தரவிட்டிருந்தது.  கார்கிவ்வில் தங்கியுள்ள இந்தியர்கள்,  பெசோசின்,…

ஆப்ரேஷன் கங்கா – இந்திய விமானப் படையின் முதல் விமானம் 200 இந்தியர்களுடன் டெல்லி வருகை

மேலும் மூன்று விமானங்கள் இந்திய மாணவர்களுடன் காலையில் தலைநகரில் தரையிறங்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. ஹிண்டன்: அறுவை சிகிச்சை கங்கா திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் உள்பட இந்தியர்கள்…

மாணவர்களை விரைவாக மீட்பதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் – தமிழக முதலமைச்சர் வலியுறுத்தல்

உக்ரைனில் சிக்கியுள்ள நமது மாணவர்கள் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலையில் தவிக்க விடப்பட்டுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது: போர்த் தாக்குதல்களையும் எல்லைப்பகுதிகளில்…

கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும் – ஐ.நா.பொதுச் சபையில் இந்தியா உறுதி

உக்ரைன்-ரஷியா இடையே உடனடி போர் நிறுத்ததிற்கான சர்வதேச நாடுகளின் அழைப்பை இந்தியா ஆதரிக்கிறது என்று இந்திய பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார். நியூயார்க்: ரஷியாவுக்கு எதிரான தீர்மானம் ஐ.நா.பொதுச் சபையில் நிறைவேற்றப் பட்டது. இந்த தீர்மானம் மீது…

தமிழகத்தில் சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பொது இடங்களில் தொடர்ந்து கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள…

தமிழகத்தில் ஜூன் 13-ந்தேதி பள்ளிகள் திறப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அடுத்தவர்கள் திருப்திக்காக தேர்வு எழுதுவதை காட்டிலும் நான் படிச்சி நான் தேர்வு எழுத இருக்கிறேன் என்ற அளவுக்கு மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். சென்னை: சென்னை…

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5-ந்தேதி தொடக்கம்: பத்தாம் வகுப்பு தேர்வு மே 6-ந்தேதி தொடக்கம்

11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் 9-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை நடைபெறும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். சென்னை: தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று…

தினசரி பாதிப்பு சற்று உயர்வு- இந்தியாவில் புதிதாக 7,554 பேருக்கு கொரோனா

கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 14,123 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 23 லட்சத்து 38 ஆயிரத்து 673 ஆக உயர்ந்தது. புதுடெல்லி:…

வெளிநாட்டில் மருத்துவம் படிக்கும் 90 சதவீத மாணவர்கள் இந்தியாவில் தகுதிபெற தவறுகிறார்கள்: மத்திய அமைச்சர்

உக்ரைனில் இருந்து இந்தியர்களை வெளியேற்றும் நடைமுறையின் போதுதான், இவ்வளவு மாணவர்கள் உக்ரைனில் மருத்துவம் படிக்கிறார்களா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்த நிலையில், அங்குள்ள இந்தியர்களை வெளியேற்றும் பணியில் இந்திய…

முழுமையான படை பலத்துடன் நோட்டோ நாடுகளின் ஒவ்வொரு அங்குலமும் பாதுகாக்கப்படும்: ஜோ பைடன்

ரஷியாவின் அனைத்து விமானங்களும் அமெரிக்கா வான்வெளியை பயன்படுத்த தடைவிதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் ‘‘அமெரிக்கா மற்றும்…

மேலும் 26 மீட்பு விமானங்கள் இயக்கம்: கீவ் நகரில் இருந்து அனைத்து இந்தியர்களும் வெளியேற்றம்- மத்திய அரசு

உக்ரைனில் சுமார் 20 ஆயிரம் மாணவர்கள் இருந்த நிலையில், தற்போது சுமார் 12 ஆயிரம் பேர் உக்ரைனில் இருந்து வெளியேறிவிட்டனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷிய கடந்த வியாழக்கிழமையில் இருந்து…

வேப்ப மரத்தின் சாறு கொரோனாவை ஒழித்துக்கட்டும்: ஆராய்ச்சி முடிவு

வேப்ப மர பட்டை சாறினை விலங்குகளுக்கு கொடுத்து பரிசோதித்ததில், அதில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு- சக்தி இருப்பது தெரிய வந்துள்ளது. புதுடெல்லி : கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பற்றியும், அதை ஒழித்துக்கட்டுவதற்கான மருந்துகள்…

மாணவர்களை அழைத்து வர இந்திய விமானப்படை விமானம் ருமேனியா பயணம்

உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் மீட்க நடவடிக்கைக்காக மேலும் பல விமானப்படை விமானங்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹிண்டன்: ரஷிய போர் காரணமாக உக்ரைனில் உள்ள மாணவர்கள் உள்பட இந்தியர்கள் மீட்பு…

ஐரோப்பிய யூனியனில் இணைகிறது உக்ரைன் – விண்ணப்பத்தை ஏற்றது ஐரோப்பிய பாராளுமன்றம்

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் காணொலி மூலம் பேசிய ஜெலன்ஸ்சி, உக்ரைன் மக்கள் வலிமையானவர்கள் என்று தெரிவித்தார். 27 நாடுகள் அடங்கிய ஐரோப்பிய யூனியனில் இணையும் முயற்சிகளில் உக்ரைன் ஈடுபட்டு வந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த…

சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்பு

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் கடந்த 22-ந் தேதி வெளியாகின.  இந்த தேர்தலில் வெற்றிபெற்ற 12,838 வார்டு கவுன்சிலர்கள் இன்று காலை பதவி ஏற்கிறார்கள் இதற்கான…

ஆப்ரேஷன் கங்கா – 218 இந்தியர்களுடன் சிறப்பு விமானம் புதுடெல்லி வந்தது

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் மாணவர்களை வரவேற்றார். புதுடெல்லி: உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.  அறுவை சிகிச்சை கங்கா…

தமிழகம் முழுவதும் மகா சிவராத்திரி விழா உற்சாக கொண்டாட்டம்

அனைத்து சிவன் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி தினத்தில் வரும் சிவாத்திரி மகா சிவராத்திரியாக அழைக்கப்படுகிறது.  இதையொட்டி நாடு முழுவதும் மகாசிவராத்திரி விழா…

உக்ரைன் இந்தியர்களுடன் போலந்தில் இருந்து முதல் விமானம் டெல்லி புறப்பட்டது

ரஷியா நடத்தி வரும் போர் காரணமாக உக்ரைனில் உள்ள எஞ்சியுள்ள மாணவர்கள் மற்றும் இந்தியர்களை அழைத்து வரும் ஆப்ரேஷன் கங்கா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது. இந்த பணிகளை மேற்பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி,…

ரஷியா தாக்குதலில் உயிரிழந்த கர்நாடகா மாணவர் – உடலை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை

புதுடெல்லி: உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா அந்நாட்டின் முக்கிய நகரங்களை தாக்கி வருகிறது. இந்நிலையில், கார்கீவ் நகரில் நேற்று ரஷியா ராணுவம் நடத்திய ராக்கெட் குண்டு தாக்குதலில் கர்நாடக மாநிலம் ஹாவேரி பகுதியைச்…

உக்ரைன் கார்கீவ் நகரில் நடந்த துப்பாக்கி சண்டையில் இந்திய மாணவர் உயிரிழப்பு

கார்கீவ், கீவ் போன்ற நகரங்களில் ரஷியா நடத்தி வரும் கடும் தாக்குதலில் இந்திய மாணவர்கள் வெளியேர முடியாமல் தவித்து வருகின்றனர். உக்ரைன்  ரஷியா இடையே ஆறாவது நாளாக போர் நடந்து வருகிறது. கார்கீவ், கீவ்…

ரஷிய படை தாக்குதலில் 70 உக்ரைன் வீரர்கள் பலி

ரஷிய படை நடத்திய அதிரடி தாக்குதலில் 70 உக்ரைன் ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது. மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இன்று 6-வது நாள் ஆகிறது. தொடர்ந்து…

ஆரோக்கிய வனத்தை தொடங்கி வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

ஆரோக்கிய வனம், ஆயுர்வேதத்தில் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் சுமார் 215 மூலிகைகள் மற்றும் தாவரங்களை கொண்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆரோக்கிய வனத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்…

காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் குமரி பெண் கவுன்சிலரின் 6 வயது குழந்தையை கொஞ்சிய ராகுல் காந்தி

தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்ததோடு, கட்சியை வளர்ப்பது குறித்தும் கலந்துரையாடினார். நாகர்கோவில்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சுயசரிதை புத்தக வெளியீட்டு…

கடந்த ஆண்டைவிட 18 சதவீதம் அதிகரிப்பு- பிப்ரவரில் ரூ.1.33 லட்சம் கோடி ஜி.எஸ்.டி வசூல்

பிப்ரவரி 28- நாள் மாதமாக இருப்பதால், பொதுவாக ஜனவரி மாதத்தை விட குறைவான வருவாய் கிடைக்கும் என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவைகள் வரி…

உக்ரைன் அதிபரை கொல்ல 400 கூலிப்படையினர்- புதின் உத்தரவிட்டுள்ளதாக பரபரப்பு தகவல்

ஒருபுறம் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டுவிட்டு, உக்ரைன் அதிபரை கொல்ல கூலிப்படையை ரஷியா அனுப்பி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கீவ்: நேட்டோ படையில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா கடந்த 24-ந்…

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு

ஜனாதிபதியை சந்தித்த பிரதமர் மோடி உக்ரைன் விவகாரம் குறித்து எடுத்துரைத்தார். புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லி ராஷ்ட்ரபதி பவனுக்குச் சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். அப்போது உக்ரைனில் சிக்கித் தவிக்கும்…

வுகான் சந்தையில் இருந்துதான் கொரோனா பரவியது: ஆய்வில் கண்டுபிடிப்பு

ஹூனான் சந்தையில் விற்கப்பட்ட விலங்குகளில் கொரோனா இருந்ததற்கு போதிய நேரடி ஆதாரங்கள் இல்லை என்று ஜெஸ்சி புளும் என்ற நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) நோய் நிபுணர் தெரிவித்துள்ளார். புதுடெல்லி : சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு…

69வது பிறந்தநாள் – தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலரஞ்சலி செலுத்தினார். புதுடெல்லி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 69-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர…

உக்ரைன்-ரஷியா போர் எதிரொலி: 5 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம்

போர் தீவிரமடையும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என ஐ.நா.சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. புடாபெஸ்ட்: உக்ரைன் மீது ரஷியா 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ராணுவ நிலைகள் மட்டுமின்றி பொதுமக்கள்…

சமாஜ்வாடி பிரச்சார கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் – 7 பேர் மீது வழக்குப் பதிவு

விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று, ஹண்டியா காவல் துறை தெரிவித்துள்ளது. லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் இதுவரை ஐந்து கட்ட தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில், 6 ஆம் கட்ட தேர்தல் 3ம்…

உக்ரைனில் இருந்து 1,400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளியேற்றம் – இந்திய தூதரகம் தகவல்

இந்திய மாணவர்கள் அமைதியாகவும்,ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும் என்று தூதரக அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். கீவ்: தென்-கிழக்கு உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா நகரிலிருந்து 1,400 க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் வெளியேறும் நடவடிக்கை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக…