Press "Enter" to skip to content

Posts published in “செய்திகள்”

தமிழகத்தில் 87 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு- ஆய்வில் தகவல்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் பொதுமக்களின் நோய் எதிர்ப்பு 87 சதவீதமாக அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது. சென்னை: கொரோனா நோய் பரவல் அச்சுறுத்தி வருகிறது. நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க…

நன்றி சொல்ல உங்களுக்கு… வார்த்தை இல்ல எனக்கு… பாபு எமோஷனல் பேட்டி

கேரளாவில் 3 நாட்களாக மலை பாறை இடுக்கில் சிக்கிய தன்னை காப்பாற்றிய ராணுவ வீரர்களுக்கு முத்தம் கொடுத்து பாபு நன்றி தெரிவித்தார். திருவனந்தபுரம்: கேரளாவின் மலம்புழா, சேரடு பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 23).…

ஹிஜாப் அணிவதால் மாணவிகள் பள்ளிக்கு செல்வதை மறுப்பது பயங்கரமானது: மலாலா

நோபல் பரிசுபெற்ற மலாலா யூசஃப்சாய், கர்நாடக மாநிலத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ள ஹிஜாப் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரி மாணவிகளை ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்ற விவகாரம் விஸ்வரூபம்…

2 நாட்களாக உணவு, தண்ணீர் இன்றி பாறை இடுக்கில் சிக்கிய தவிக்கும் வாலிபர்: மீட்புப் பணியில் ராணுவம்

பாலக்காட்டைச் சேர்ந்த வாலிபர் மலை இடுக்கில் சிக்கிக் கொண்ட நிலையில், ராணுவம் அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. பாலக்காட்டை சேர்ந்தவர் பாபு (வயது28). இவரும் வேறு 3 நண்பர்களும் நேற்று முன்தினம் மலம்புழையில் காட்டுப்பகுதிக்குள்…

கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது: கமல் ஹாசன்

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடைவிதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் போராட்டம்…

10, 12-ம் வகுப்புகளுக்கு இன்று தொடங்குகிறது திருப்புதல் தேர்வு

நாளை நடைபெற இருந்த ஆங்கில பாடத் தேர்வு 17-ந்தேதி அன்று நடைபெறும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. சென்னை: தமிழகத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கான முதல் திருப்புதல் தேர்வு கடந்த ஜனவரி 19-ல் தொடங்க…

மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் தெருவில் நடந்த நபர் – ஈரானில் மிகுதியாக பகிரப்பட்ட காணொளி

இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஈரான் மகளிர் விவகாரங்களுக்கான துணைத் தலைவர் தெரிவித்துள்ளார். டெஹ்ரான்: விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி தனது இளம் மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் தெருவில் நடந்த நபர் குறித்த…

ஹிஜாப் விவகாரம் – கர்நாடகாவில் தேசிய கொடியை இறக்கி விட்டு காவி கொடி ஏற்றியதாக சர்ச்சை

அனைவரும் மாணவர்கள் என்பதால் மிகவும் பொறுமையாக நடந்து கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சிவமொக்கா: கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தால் பதற்றம் நிலவும் நிலையில்,  கொடி கம்பம் ஒன்றில் இருந்து தேசிய கொடியை இறக்கி விட்டு மாணவர்…

ஒட்டாவா போராட்டம் எதிரொலி – கனடா வாழ் இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை

போராட்டம் நடைபெறும் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு அங்கு வாழும் இந்தியர்களுக்கு, இந்திய தூதரக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஒட்டாவா: கனடா நாடடில் கொரோனா தடுப்பூசி போடுவதை அந்நாட்டு அரசு கட்டாயமாக்கியுள்ளது. அமெரிக்காவில் இருந்து கனடாவிற்குள்நுழையும் சரக்கு…

உத்தர பிரதேசத்தில் நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு

உத்தர பிரதேச சட்டசபைக்கு முதல் கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறுகிறது. லக்னோ : நாட்டின் முக்கிய தேர்தலாக கருதப்படும் உத்தரப் பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல் 7…

நாங்கள் உண்மையைப் பேசுவதால் பிரதமர் பயப்படுகிறார் – ராகுல் காந்தி பதிலடி

பாராளுமன்றத்தில் காங்கிரஸுக்கு எதிராக பிரதமர் மோடி தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பதில் அளித்துள்ளார். ஏ.என்.ஐ.செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: நான் மூன்று முக்கியமான பிரச்சினைகளை எழுப்பினேன். முதலாவதாக,…

குடும்ப அரசியலை எதிர்த்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் சிக்கலை சந்தித்தார் – பிரதமர் மோடி தகவல்

சாவர்க்கர் பற்றி கவிதை எழுதியதற்காக லதா மங்கேஷ்கரின் சகோதரரை காங்கிரஸ் கட்சி நீக்கியது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். புதுடெல்லி: பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தற்கு…

ஹிஜாப் விவகாரம் – மாணவர்கள் அமைதி காக்க கர்நாடகா உயர்நீதி மன்றம் வேண்டுகோள்

கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் எனப்படும் தலையை மறைக்கும் வகையில் துணி அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்…

பழனிசாமியும் பன்னீர்செல்வமும் அடிமைச் சேவகம் செய்வதில் போட்டி போட்டவர்கள் – தேர்தல் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

கடலூர்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க.சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி என்ற தலைப்பிலான தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…

நீட் மசோதா ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டது – சட்டசபை செயலர் தகவல்

நீட் விலக்கு மசோதாவை மீண்டும் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். சென்னை: தலைமைச் செயலகத்தில் தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சுகாதாரத் துறை…

அசாதாரண சூழ்நிலை – கர்நாடகத்தில் 3 நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடகாவின் பல இடங்களில் இன்று போராட்டம் நடைபெற்றது. சில இடங்களில் காவல் துறையினர் தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். பெங்களூரு: கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதற்கு…

சட்டசபை சிறப்புக் கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றம்

சட்டசபை சிறப்புக் கூட்டத்தில் குரல் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதையடுத்து நீட் விலக்கு மசோதா மீதான தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. சென்னை: மருத்துவ இளநிலை படிப்புகளில் (எம்.பி. பி.எஸ்.) மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் நீட்…

கவர்னரின் மதிப்பீடுகள் அனைத்தும் தவறானவை- மசோதாவை தாக்கல் செய்து மா.சுப்பிரமணியன் பேச்சு

தமிழ்நாட்டின் அனைத்து தரப்பினரும் நீட் தேர்வு முறையை எதிர்க்கின்றார்கள். தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த உணர்வை மீறியும் 2017-ம் ஆண்டுக்கு பிறகு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ சேர்க்கை நீட் அடிப்படையில்தான் நடைபெற்று வருகிறது. சென்னை:…

தி.மு.க, அ.தி.மு.க – பா.ஜனதா நேரடி மோதல்: சென்னையில் பலமுனை போட்டி

பா.ஜனதா கட்சி சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. இந்த கட்சி கணிசமான வாக்குகளை பெறுவதன் மூலம் தி.மு.க.வுக்கு நேரடி போட்டியாகவும், மாநிலத்தில் 3-வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை பெறவும்…

உ.பி. சட்டசபை தேர்தல்: தேர்தல் அறிக்கையில் இலவசங்களை அறிவித்த பா.ஜனதா

கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் இரு சக்கர வாகனம், 60 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் என பல்வேறு இலவச வாக்குறுதிகளை பா.ஜனதா அறிவித்துள்ளது. உத்தர பிரதேச மாநில சட்டசபை தேர்தல் வருகிற…

குடிபோதையில் ரகளை- 4 போலீசாரை தாக்கிய இளம் தம்பதி கைது

உணவகத்தில் ரகளையில் ஈடுபட்ட தம்பதியின் செயல் குறித்து உணவக ஊழியர் போலீசில் புகார் தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சாண்டாக்ரூஸ் பகுதியை சேர்ந்த இளம் தம்பதியர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தானே பகுதி…

உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் விவகாரம்: மம்தா- பிரசாந்த் கிஷோர் மோதல்

பிரசாந்த் கிஷோரின் ‘ஐபேக்’ நிறுவனத்தின் ஒப்பந்தத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முறித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொல்கத்தா: பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மேற்கு வங்காள மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் ஒப்பந்தம் செய்திருந்தார்.…

டெல்லியில் பரபரப்பு: மாணவரை கடத்தி துப்பாக்கி முனையில் நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய நபர் கைது

இந்த விவகாரத்தில் தலைமறைவான மேலும் இரண்டு பேரை தேடி வருவதுடன், கான்ஸ்டபிள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் போலீசார் உறுதி அளித்துள்ளனர். தெற்கு டெல்லியை சேர்ந்த மாணவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் எம்பிஏ படித்து வந்தார்.…

மு.க.ஸ்டாலினால் நேரடியாக பிரசாரம் செய்ய முடியவில்லை- ஓ.பன்னீர்செல்வம் தாக்கு

எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. தான் 100 சதவீதம் தமிழகம் முழுவதும் வெற்றி பெற வேண்டும் என வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும்…

சிறப்பு சட்டசபை கூட்டம்: பா.ஜனதா வெளிநடப்பு

நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றுவதற்கான சிறப்பு சட்டசபை கூட்டத்தில் இருந்து பா.ஜனதா உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றம் செய்ய சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.…

பாலாற்று பாலம் சீரமைப்பு பணியால் கடும் நெரிசல்- செங்கல்பட்டில் 10 கி.மீ தூரத்துக்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்

சென்னை-திருச்சி மார்க்கமாக உள்ள பழைய பாலத்தில் பராமரிப்பு பணி தொடங்கி உள்ளது. இதையடுத்து அவ்வழியே செல்லும் வாகனங்கள் அருகே உள்ள பாலத்தின் வழியாக திருப்பி விடப்பட்டது. செங்கல்பட்டு: செங்கல்பட்டை அடுத்த இருகுன்ற பள்ளி அருகே…

10 மாதத்தில் தி.மு.க.வின் சாயம் வெளுத்து விட்டது- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். வேலூர்: வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் வேலூரில் நடந்தது.…

தடுப்பூசி கட்டாயத்திற்கு எதிர்ப்பு: கனடா பாணியில் நியூசிலாந்தில் போராட்டத்தை தொடங்கிய டிரக் டிரைவர்கள்

வற்புறுத்தல் சம்மதம் அல்ல, எங்களுடைய சுதந்திரத்தை எங்களிடம் கொடுங்கள் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) அச்சுறுத்தல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள், பூஸ்டர்…

நீட் விவகாரம்- சிறப்பு சட்டசபை கூட்டம் தொடங்கியது

தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தொடங்கியது. சென்னை: தமிழக சட்ட சபையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பியனுப்பியது குறித்து கடந்த…

கடம்பூர் பேரூராட்சியில் தேர்தல் ரத்து- மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தினால் கடம்பூர் முதல்நிலை பேரூராட்சி அனைத்து வார்டுகளுக்கான தேர்தல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. கயத்தாறு: தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன.…

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.-க்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தமிழக சட்டசபை சிறப்புக் கூட்டம் இன்று காலை கூடும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.-க்களுடன் ஆலோசனை நடத்துகிறார். எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டசபை சிறப்புக் கூட்டம் இன்று காலை கூடும்…

சூதாட்டத்தில் மோகம்-பள்ளி நிதியில் இருந்து ரூ.5 கோடியை சுருட்டிய கன்னியாஸ்திரி

சுமார் 5 கோடி ரூபாயை சுருட்டிய கன்னியாஸ்திரி சூதாட்டத்திற்கும், ஆடம்பரமான சுற்றுலாப் பயணங்களுக்கும் பயன்படுத்தி வந்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த கன்னியாஸ்திரி மேரி மார்கரெட் க்ரூப்பர் (80). இவர், லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் உள்ள ரோமன்…

காஷ்மீர் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்டது கே.எஃப்.சி.

பாகிஸ்தானில் உள்ள கே.எஃப்.சி. கிளை ஒன்று காஷ்மீர் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கே.எஃப்.சி. மன்னிப்பு கேட்டுள்ளது. பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் கே.எஃப்.சி. நிறுவனத்தின் கிளை ஒன்று தனது அதிகாரப்பூர்வ சமூக…

லதா மங்கேஷ்கர் நினைவாக அருங்காட்சியகம்: சிவராஜ்சிங் சவுகான் அறிவிப்பு

லதா மங்கேஷ்கர் பெயரில் இந்தூரில் கல்லூரி அமைக்கப்படும் என்றும், அவர் பெயரில் விருது வழங்கப்படும் என்றும் சிவராஜ்சிங் சவுகான் அறிவித்தார். போபால் : மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் நினைவாக மத்தியபிரதேச மாநில…

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக 16 தமிழக மீனவர்கள் கைது

ராமேஸ்வர மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையால் சிறைப் பிடிக்கப் பட்டது அந்த பகுதி மீனவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமேஸ்வரம்: கடந்த வாரம் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து 2 படகுகளில்…

அமெரிக்கர்கள் உக்ரைனை விட்டு வெளியேற வேண்டும் – ஜோ பிடன் அழைப்பு

ரஷ்ய ராணுவ அச்சுறுத்தலால் உக்ரைனில் வசிக்கும் அமெரிக்க மக்கள் வெளியேறுவது புத்திசாலித்தனமானதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நியூயார்க்: உக்ரைன் மீது ராணுவ தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டு வரும் நிலையில், ஜெர்மன் பிரதமர்…

மீண்டும் நீட் விலக்கு மசோதா – இன்று தமிழக சட்டசபை சிறப்பு கூட்டம்

இன்று நடைபெறும் சட்டசபையின் சிறப்பு கூட்டம் நேரலையில் ஒளிபரப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை: தமிழக சட்ட சபையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பியனுப்பிய நிலையில்,…

ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று செனகல் அணி சாதனை

வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் பெனால்டி ஷூட்-அவுட் முறையில் எகிப்து அணியை செனகல் வீழ்த்தியது 33-வது ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து போட்டி கேமரூன் நாட்டில் நடந்தது. இறுதிப்போட்டியில் செனகல்-எகிப்து அணிகள் மோதின.  விறுவிறுப்பான இந்த போட்டியில்…

எதிர்க் கட்சிகளை ஒன்றிணைக்கும் திமுக முயற்சிக்கு மெகபூபா முப்தி ஆதரவு

பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒரே மேடையில் நிறுத்தும் முயற்சியை பாராட்டுவதாக மெகபூபா குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீநகர்: தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாடு முழுவதும் சமூகநீதிக் கொள்கையை முன்னெடுக்கும் வகையில், அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பு…

உத்தர பிரதேச தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறாது – மம்தா பானர்ஜி கணிப்பு

உத்தர பிரதேசத்தில் வெற்றி பெறாத காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் மம்தா பானர்ஜி அறிவுரை வழங்கி உள்ளார். கொல்கத்தா: உத்தர பிரதேச சட்ட மன்ற தேர்தலில் அகிலேஷ் யாதவ்வின் சமாஜ்வாடி…

இஸ்ரேலிலும் பெகாசஸ் சர்ச்சை – ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த முடிவு

ஜெருசலம்: இஸ்ரேலிய நிறுவனம் ஒன்று தயாரித்த பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம்  இந்தியா உள்பட பல நாடுகளின்  அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும்  தலைவர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், பெகாசஸ்…

மடகாஸ்கர் தீவை புயல் தாக்கியது – 20 பேர் உயிரிழப்பு

அடைமழை (கனமழை) மற்றும் 165 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயலுக்கு 55 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். அன்டனானரிவோ: இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மடகாஸ்கர் தீவில் 77 சதவீதம் பேர்…

பிரதமரின் மோடியின் கருத்து அப்பட்டமான பொய் – அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்

கொரோனா காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மறுப்பு தெரிவித்துள்ளார். புதுடெல்லி:  நாடாளுமன்ற மக்களவையில் நேற்று குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்திற்கு…

தாசில்தார் மீது பெட்ரோலை வீசி கொலை மிரட்டல் – முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்கு

ஆக்கிரமிப்பு தடுப்புப் பிரிவு உறுப்பினர்களை மத்திய பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. மிரட்டும் காணொளி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜ்கர்: மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பச்சோர் பகுதியில்…

தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம்விடுவதை தடுத்துநிறுத்த வேண்டும் – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படை பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசின் நடவடிக்கை மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை: இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை…

பல தேர்தல்களில் தோற்றாலும் காங்கிரஸ் கட்சி அகங்காரத்தை கைவிடவில்லை – பிரதமர் மோடி தாக்கு

மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, மிகப் பழமையான காங்கிரஸ் கட்சி இன்று பல மாநிலங்களில் ஆட்சியில் இல்லை. காங்கிரஸ் கட்சியும் தோல்வி பற்றி கவலைப்படவில்லை என தெரிவித்தார். புதுடெல்லி: மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி…

பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரமோ… ரசிகர்கள் கொண்டாட்டம்

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தமிழ் திரைப்படத்தின் முன்னணி நடிகரான விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட்…

அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பு – காங்கிரஸ் பிரதிநிதியாக வீரப்ப மொய்லி நியமனம்

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு இன்று சந்தித்தார். அப்போது ராகுல் காந்தியும் உடனிருந்தார். புதுடெல்லி: தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 26-ம் தேதி, குடியரசு நாளன்று…

மாநிலங்களவையை தொடர்ந்து மக்களவையிலும் லதா மங்கேஷ்கருக்கு இரங்கல்

மாநிலங்களவை இன்று காலை கூடியதும் அவைத்தலைவர் வெங்கையா நாயுடு பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு குறித்து இரங்கல் குறிப்பை வாசித்தார். புதுடெல்லி: இந்தியாவின் இசைக்குயில் என்று போற்றப்பட்ட பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்.…

நதிகள் இணைப்பு விவகாரத்தில் கர்நாடகா தனது உரிமையை விட்டுக் கொடுக்காது – பசவராஜ் பொம்மை

கர்நாடகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்தும் வகையிலும், சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகளை அக்கட்சி மேற்கொண்டு வருகிறது. புதுடெல்லி: கர்நாடக மாநிலத்தில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சிக்காலம்…