Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): கேரளாவை சேர்ந்த மேலும் ஒரு இளைஞர் பாதிப்பு

கேரளாவை சேர்ந்த மேலும் ஒரு இளைஞருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அந்த இளைஞர் அண்மையில் சீனா சென்று வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த இளைஞரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் விவரிக்கிறது அந்த செய்தி குறிப்பு.

முன்னதாக கொரோனா வைரஸ் பாதிப்பின் மையப்புள்ளியாக விளங்கும் வுஹான் நகரத்தில் இருந்து கேரளா திரும்பிய பெண்ணுக்கு வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து அவரது மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. பரிசோதனையின் முடிவில் அப்பெண்ணுக்கு வைரஸ் தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே ஷைலஜா மக்கள் யாரும் அஞ்ச வேண்டாம் என்றார்.

கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் வைரஸ் பாதிப்பு அறிகுறிகளுடன் தென்படும் நோயாளிகளை பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே. ஷைலஜா தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில்தான் கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from இந்தியாMore posts in இந்தியா »
More from தமிழகம்More posts in தமிழகம் »