Press "Enter" to skip to content

கிருஷ்ணகிரியில் பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியர்கள்: விளக்கம் அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிகளில் இறை வணக்க கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் வராமல் தாமதமாக வந்த 347 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கு விளக்கம் கேட்டு தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வருகை புரிவதில்லை எனவும், வருகை புரிந்தாலும் சில ஆசிரியர்கள் பள்ளியில் முழுமையாக பணி செய்வதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து, ஆசிரியர்கள் ஒழுங்காக பள்ளிக்கு வருவதை கண்காணிக்கும் வகையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ‘பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறை’ அமல்படுத்தப்பட்டது. இந்த முறையினால் பள்ளியில் உள்ள பயோமெட்ரிக் வருகைப்பதிவு இயந்திரத்தில் ஆசிரியர் எந்த நேரத்தில் தனது விரல் ரேகையை பதிவு செய்கிறாரோ,  அந்த நேரமே வருகை நேரமாக கருதப்படுகிறது.

அதன்படி, உரிய நேரத்திற்கு பள்ளிக்கு வராத பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த 27ம் தேதி கிருஷ்ணகிரியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் 347 பேர் தாமதமாக வருகை புரிந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவின்பேரில் தாமதமாக வருகை புரிந்த அனைவரும், விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »